வெறும் பத்தே நிமிடத்தில் வீடு தேடி வரும் புத்தம் புதிய ஐபோன் 16.. எப்படி? இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிள் ரசிகர்கள் எப்போதும் ஐபோன்களை வாங்கப் போட்டிப் போட்டுக் கொண்டு வருவார்கள். இதற்காக மணிக் கணக்கில் எல்லாம் கூட காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால், இனிமேல் அந்த பிரச்சினை இல்லை.. இந்த ஈஸியான வழிமுறையைப் ஃபாலோ செய்தால் புத்தம் புதிய ஐபோன் வெறும் 10 நிமிடத்தில் உங்கள் வீடு தேடி வரும்.

உலகில் மற்ற நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு மொபைல் வெளியிட்டாலும் கூட ஆப்பிள் நிறுவனம் பொறுமையாக ஆண்டுக்கு ஒரே ஒரு சீரியஸ் மட்டுமே வெளியிடும். ஆனால், ஒட்டுமொத்த உலகின் கவனமும் இதன் மீது தான் இருக்கும்.

apple iphone16 16

அதன்படி தான் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 சீரியஸை வெளியிட்டு இருந்தது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மெக்ஸ் என்று நான்கு மாடல்களில் ஐபோன்கள் வெளியாகியுள்ளன. அதில் ஐபோன் 16 மாடல் இன்று முதல் இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஐபோன் 16: ஆப்பிள் ரசிகர்கள் எப்போதும் ஐபோன்களை முந்திக் கொண்டு வாங்குவார்கள். இதனால் முதல் சில நாட்கள் பல கடைகளில் அவுட் ஆப் ஸ்டாக் தான். அப்படி இல்லை என்றால் மணிக் கணக்கில் நாம் காத்திருந்து வாங்க வேண்டும். ஆனால், அந்தத் தொல்லை இனி இல்லை. ஈஸியாக உங்கள் வீட்டில் இருந்தபடியே ஐபோன் 16ஐ வாங்க முடியும்.

எப்படி: அது எப்படி என கேட்கிறீர்களா.. இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மூலம் தான். சமையல் பொருட்கள், உணவு, மளிகைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் டெலிவரியை தாண்டி இப்போது மற்ற விஷயங்களிலும் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் காலூன்றப் பார்க்கிறது. ஏற்கனவே சில இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் குறிப்பிட்ட மின்சாதன பொருட்களை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளன..

அமெரிக்காவில் தான் ஐபோன் 16 கம்மி.. இந்தியா, துபாயில் ரேட் எவ்வளவு! எங்கே ரொம்ப காஸ்ட்லி தெரியுமா


அதன் ஒரு பகுதியாகவே டாடாவுக்குச் சொந்தமான பிக் பாஸ்கெட் நிறுவனம் ஐபோன் 16 டெலிவரியை தொடங்கியுள்ளது. அதன்படி நீங்கள் பிக் பாஸ்கெட்டில் ஐபோன் 16 மாடலை ஆர்டர் போட்டால் வெறும் 10 நிமிடங்களில் நீங்கள் கேட்ட மாடல் வீட்டிற்கே வந்துவிடும். பிக் பாஸ்கெட் மட்டுமின்றி ஃபிளிங் இட் தளமும் இந்த 10 நிமிட டெலிவரியை தொடங்கியுள்ளது. ஃபிளிங் இட் தளத்தில் ஆர்டர் செய்தால் கூடுதல் சலுகைகள், இஎம்ஐ ஆப்ஷன்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இப்போது 10 நிமிட ஐபோன் டெலிவரியை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் ஐபோன் விற்பனை தொடங்கியது! அலை மோதிய கூட்டம்.. அதிகாலை முதல் காத்திருக்கும் இளைஞர்கள்


முதல்முறை இல்லை: அதேநேரம் ஃபிளிங் இட் தளத்தில் ஐபோன்கள் விற்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஐபோன் 14 முதலே ஃபிளிங் இட் தளம் ஒவ்வொரு ஆண்டும் ஐபோன்களை 10 நிமிட டெலிவரி செய்து வந்துள்ளது. இப்போது ஐபோன் 16 மாடலையும் இது டெலிவரி செய்கிறது. காலை 8 மணி முதல் சில மணி நேரத்தில் சுமார் 300 யூனிட் ஐபோன் 16 விற்றுள்ளதாம். மறுபுறம் பிக் பாஸ்கெட் நிறுவனம் காலை 8 மணிக்கு ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு 8.07க்கு டெலிவரி செய்துள்ளது.

ஐபோன் 16 மட்டுமின்றி கேலக்ஸி எஸ்24 சீரிஸ், பிளேஸ்டேஷன் 5 உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களையும் இந்த தளங்களில் இப்போது 10 நிமிடங்களில் டோர் டெலிவரியில் பெற முடிவது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் இதில் ஒரு ஐபோன் 16ஐ ஆர்டர் போட்டுவிடலாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+