இந்தியாவில் ஐபோன் விற்பனை தொடங்கியது! அலை மோதிய கூட்டம்.. அதிகாலை முதல் காத்திருக்கும் இளைஞர்கள்
மும்பை: இந்தியாவில் இன்று முதல் ஐ போன் 16 விற்பனை தொடங்குகிறது. மும்பையில் உள்ள ஐ போன் ஷோரூமில் போனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
உலக சந்தையில் எவ்வளோ ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும், அதில் ஆப்பிள் போன்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஐபோன்களை பயன்படுத்துபவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் அப்பல் மிடில் கிளாஸை சேர்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இப்படி என்னதான் பணக்காரர்களுக்கான போனாக ஆப்பிள் பார்க்கப்பட்டாலும், சாமானியர்களால் ஒருபோதும் ஒதுக்கி தள்ளப்பட்டது கிடையாது. ஏனெனில், விலைக்கு ஏற்ற தரம்! இதுதான் ஐபோன் மீதான ஈர்ப்பை தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் ஐபோன்களின் புதிய மாடல்கள் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த 9ம் தேதி கலிபோர்னியா, குப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டன. iPhone 16 & iPhone 16 Plus, iPhone 16 Pro & iPhone 16 Pro Max என நான்கு மாடல்கள் இதில் வெளியிடப்பட்டன.
இதில் iPhone 16 ரூ.79,900க்கும், iPhone 16 Plus ரூ.89,900க்கும், iPhone 16 Pro ரூ.1,19,900க்கும் iPhone 16 Pro Max ரூ.1,44,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 9ம் தேதியே தொடங்கிவிட்டது. இதனையடுத்து இன்று முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.
இதில் ஐபோன் ப்ரோ மேக்ஸ் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. இந்த மாடலில் 6.9 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வேறு எந்த ஆப்பிள் போன்களும் இவ்வளவு பெரிய டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை. இது தவிர XDR டிஸ்பிளே, டைடானியம் கோட், செராமிக் ஷீல்ட், யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் ஆகியவற்றை இந்த ஐபோன் கொண்டிருக்கிறது.
டெசர்ட் டைடானியம், நேட்சுரல் டைடானியம், வெள்ளை டைடானியம், கருப்பு டைடானியம் ஆகிய நிறங்களில் ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. இது ஆப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னாலஜி (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமராவை எளிதாக பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் A18 Pro chip பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஐபோனின் பயன்பாட்டு வேகத்தை அதிகரிக்கிறது. அதேபோல பேட்டரி நீண்ட நேரத்திற்கு வருவதற்கும் இது பயன்படுகிறது.
ஐபோன்களில் கேமராக்கள்தான் ஹைலைட். இதில் 4K 120 fps Dolby Vision அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து சினிமாவையே எடுக்க முடியும்.
இப்படி இருக்கையில் இதனை வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மும்பையில் உள்ள ஐ போன் ஷோரூமில் போனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications