இந்தியாவின் முதல் ஏஐ பள்ளி கேரளாவில் தொடக்கம்.. சிறப்பு அம்சங்கள் என்ன? ஏற்பட போகும் தாக்கங்கள்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலகை தலைகீழாக மாற்றி உள்ளது. வரும் காலத்தில் பல வேலைகளை ஏஐ எனப்படும் எந்திரன் தான் செய்ய போகிறான். எந்திரன் படத்தில் சிட்டிபாபுவாக வரும் ரோபாவுக்கு சிந்திக்கும் ஆற்றல் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார் ஷங்கர். அதனை நடைமுறையும் செய்துவிட்டார்கள்.

Indias first AI school opens in Kerala: What are the implications of ai school in india?

நீங்கள் யார் என்பதை உங்களுக்கே தெரியாமல் ஒரு ஏஐ வேவு பார்க்கிறது. நீங்கள் எதை வாங்க வேண்டும் ஒரு ஏஐயும். எதை பார்க்க வேண்டும் என்று ஒரு ஏஐயும் தீர்மானிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

இது தவிர செயற்கை நுண்ணறிவு உள்ள எந்திரன் நிலாவில் கால் வைத்து ஆராய்ச்சியை தொடங்கிவிட்டது.இன்னொரு பக்கம் ஓட்டல்களை பணியாற்ற தொடங்கிவிட்டது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் முக்கிய பங்காற்றுகிறது. மெக்கானிக்கல் துறையில் பல இயந்திரங்களை உருவாக்கும் வேலையை ஏஐ செய்ய தொடங்கிவிட்டது. கணினியில் சாஃப்ட்வேர்களை உருவாக்கவும் தொடங்கிவிட்டது. கோடிங் எழுதும் அளவிற்கும் வல்லமையும் பெற்றுவிட்டது. கட்டுரை எழுதுவது தொடங்கி கவிதை எழுதுவரை எல்லாவற்றையும் ஏஐ செய்யத் தொடங்கிவிட்டது. உங்களை போல் பேசக்கூட செய்யும்.

அண்மையில் நீங்கள் ஒரு டிவியில் செய்தி வாசிப்பளாராக ஏஐயை பார்த்திருப்பீர்கள். இப்போது வாத்தியராகவும், டீச்சராகவும் மாறி உள்ளது. இந்தியாவின் முதல் ஏஐ பள்ளி , கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இதன் தொடக்க விழா அண்மையில் நடந்தது.

புதுமையான தொழில்நுட்பத்துடன், கல்வின் புதிய முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஏஐ பாடம் நடத்தும் கல்வி முறை, தனித்துவமான கல்வித் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை படைக்க போகிறது. அதற்கான தொடக்கமாகவே இந்த ஏஐ பள்ளியை கல்வியாளர்கள் பார்க்கிறார்கள்.

முன்னாள் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் மற்றும் துணைவேந்தர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழு வழி நடத்தும் கல்வித் தளமான அமெரிக்காவின் ஐலேர்னிங் இன்ஜின்ஸ் (ILE) மற்றும் வேதிக் பள்ளி ஆகியவை இணைந்து இந்த ஏஐ பள்ளியை தொடங்கி உள்ளன.

திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு பள்ளி, மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் நல்ல கல்வியை தரும் என்றும், புரட்சிகரமான இந்த புதிய அணுகுமுறை , வகுப்புகளில் கற்றும் கல்வியை தாண்டி உலக அனுபவத்தையும், பல்வேறு விஷயங்களையும் மாணவர்கள் கற்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் முதல் ஏஐ பள்ளியின் முக்கிய சிறப்பம்சங்கள்: இப்போது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை ஏஐ மூலம் விரிவாக கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாகி உள்ளது, கல்வி திறனை தாண்டி தனிப்பட்ட ஒருவரின் திறனை கண்டுபிடித்து வளர்ப்பதற்கு ஏதுவாக பாடத்திட்டம் உருவாக்கப்படடிருக்கிறதாம்.

வெறும் கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, AI பள்ளியல் JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுமாம். மேலும் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிக்க ஆலோசனைகள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிப்பதற்கான உதவித்தொகைகளுக்கான வழிகாட்டுவது போன்ற விஷயங்களும் இந்த ஏஐ பள்ளியில் இருக்குமாம்.

உயர்தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏஐ பள்ளியில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாம். செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் முழு தகவல்கள் கிடைப்பதால், அதிகப்படியான செலவும் ஆகாதாம். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்போது உள்ள கல்விமுறையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முழுமையான தீர்வினை ஏஐ பள்ளி வெளிப்படுத்துமாம்.

தாக்கங்கள்: ஏஐக்கள் பாடம் நடத்த தொடங்கினால் வாத்தியார்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் வருங்காலத்தில் ஏற்படலாம். ஆனால் என்ன மனிதனை போல் சிந்தனை செய்து பாடம் நடத்தும் வாய்ப்பு நிச்சயம் இருக்காது என்றே நம்பப்படுகிறது. மனிதனுக்கு ரோபோக்கள் உதவியாக மட்டுமே இருக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் இப்போது இருக்கின்றன. இதற்கே எவ்வளவு பாதிப்பு அடுத்த 3 வருடங்களில் ஏற்பட போகிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் எதிர்காலத்தில மனிதனின் ஒத்துழைப்பே இல்லாத அளவிற்கு எந்திரனை உருவாக்கினால், என்ன விளைவு ஏற்படும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+