கிரிக்கெட் ரசிகர்களே.. உங்களுக்காகவே சரவெடி ஆஃபர் பிளான்ஸ்.. ஜியோ யூசர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. உலக கோப்பை தொடரை மொபைலில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். உலக கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகவே, தமது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் சந்தாவுடன் சூப்பரான பிளான்களை வழங்குகிறது ஜியோ.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தான் இந்தியா பங்கேற்கும் முதல் மேட்ச் என்பதால், இப்போதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேர்ல்ட் கப் கிரிக்கெட் ஃபீவர் சூடுபிடித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இதற்காக டெலிகாம் நிறுவனங்கள் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஸ்பெஷல் ரீசார்ஜ்களை அறிவித்துள்ளன.

அந்தவகையில் ஜியோவும் சூப்பரான பிளான்களை அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தனியாக டிஸ்னி+ ஹாட்ஸார் சப்ஸ்கிரிப்ஷன் பெறத் தேவையில்லை. நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் நீங்கள் செய்யும் ரீசார்ஜ் பிளானுடனே இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இலவசமாக ஹாட்ஸ்டாரில் மேட்ச் பார்க்கலாம். ஜியோ வழங்கும் அசத்தலான ரீசார்ஜ் பிளான்கள் பற்றி பார்க்கலாம்.
ரூ.328 பிளான்: 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான் உடன் வரும்.

ரூ.388 பிளான்: 28 நாட்களுக்கு தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.
ரூ.598 பிளான்: 28 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். அதோடு, 1 வருடம் முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.
ரூ.758 பிளான்: 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான் கிடைக்கும்.
ரூ.808 பிளான்: 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 3 மாத சந்தா ஆகியவை கிடைக்கும்.

ரூ.3178 பிளான்: ஒரு வருடம் முழுவதும், தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் Disney+ Hotstar மொபைல் சந்தா கிடைக்கும்.
ரூ.331 Addon: 331 ரூபாய்க்கு ஏட் - ஆன் ரீசார்ஜ் செய்தால், 40 ஜிபி அதிவேக இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு வேலிடிட்டி 30 நாட்கள். இதில் 3 மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் பேக்கேஜ் இலவசமாக வரும்.
எப்படி ஹாட்ஸ்டாரில் பார்ப்பது?: ஜியோவின் இந்த ரீசார்ஜ்களை செய்தற்பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரைப் பார்ப்பது எப்படி என்ற கேள்வி எழலாம். மேலே உள்ள ரீசார்ஜ் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்த பிறகு, உங்களது ஜியோ எண்ணைப் பயன்படுத்தி Disney+ Hotstar மொபைல் ஆப்பில் உள்நுழைந்து, உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மட்டுமல்லாது ஏராளமான வெப் சீரிஸ், திரைப்படங்களையும் பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications