இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. நம்பர் 1 தமிழ்நாடு.. புதிய சாதனை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் தமிழ்நாடு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்தது.

இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

Last month for the first time in Indias history Tamil Nadu exported more than 1 billion dollar USD worth of electronics

1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

( மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட மதுரை? ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லை.. குமுறும் மக்கள்.. என்ன காரணம்? )

சாதனை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் தமிழ்நாடு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 32.6% மாநிலத்தின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் 8 Bn+ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எப்படி சாத்தியம்: கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.

கொள்கை வெளியீடு; இந்த நிலையில்தான் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான புதிய மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட உள்ளது.

நம்பர் 1 எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக தனது இருப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இந்த கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது, சென்சார்கள், சிப்செட்கள் போன்ற மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளின் உற்பத்தி, செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை விரைவில் வெளியிடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி 4.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதை மேலும் உயர்த்தும் விதமாக கொள்கை வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு.. குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து செமி கண்டக்டர்ஸ் உற்பத்திக்கான தனி கொள்கை கொண்ட மாநிலங்களாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

( போக வேண்டிய இடத்திற்கு.. போன மதுரை மக்களின் ஆதங்கம்! வருகிறது பிரம்மாண்ட அறிவிப்பு.. ஸ்டாலின் பிளான் )

மாநாடு: சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+