மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட மதுரை? ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லை.. குமுறும் மக்கள்.. என்ன காரணம்?
மதுரை: கடந்த 2 நாட்களாக நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு என்று சிறப்பு முதலீடுகள் எதுவும் வராதது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
உதாரணமாக டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
#TNGIMForgotMadurai மாநாட்டுக்கு ஆளு சேர்க்க மட்டும் மதுரை வேணும்.. வளர்ச்சினா எங்க ஞாபகம் வராது போல 👎👎
— Suku (@ManfromMadurai) January 8, 2024
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 40,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
மதுரை: ஆனால் மதுரையில் முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2 நாட்களாக நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு என்று சிறப்பு முதலீடுகள் எதுவும் வராதது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Madurai got zero investment😢😢Good This is first time happened in #TamilNadu GIM history.last 2GIM first day itself Madurai got some investment Our future is visible #Madurai will become oldage home capital of #India #TNGIMForgotMadurai#TNGIM2024 @mkstalin sirNeed ur attention pic.twitter.com/qayXc7U4w9
— Balamurugan (@balamurugan8014) January 8, 2024
கடந்த 2 நாட்களாக நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு என்று சிறப்பு முதலீடுகள் எதுவும் வராதது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. சிப்காட், ஐடி துறையில் முதலீடுகள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை எம்எஸ்எம்இ துறையில் கூட முதலீடுகள் வராததுதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை, அங்கே துறைமுகம் கொண்டு வர முடியாது என்பதால் பெரும்பாலும் பலரும் தூத்துக்குடி பக்கம் செல்வதே விவாதங்களை சந்தித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மதுரை மக்கள் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications