பட்டாசே! பாரத் B1 போனை களத்தில் இறக்கிய ஜியோ: பேட்டரி செம பவர்.. எல்லா வசதியும் இருக்கு! முழு விவரம்
சென்னை: ஜியோ நிறுவனம், பாரத் பி1 மாடலை புதிதாக களத்தில் இறக்கியுள்ளது. 1,299 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த போனில் அசத்தலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பவர்ஃபுல்லான பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டாப் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஜூலை மாதம், தமது மலிவு விலை பட்டன் டைப் மாடல் 4G போன் ஆன Jio Bharat மொபைலை அறிமுகப்படுத்தியது. இந்த சீரிசில் வி1, கே1 கார்பன் ஆகிய மாடல்கள் வந்தன. இந்நிலையில் புதிதாக Jio Bharat B1 4G மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ பாரத் பி1: Jio Bharat B1 4G மொபைல் ஆல்பா நியூமரிக் கீபேட் கொண்ட பேசிக் மாடல் மொபைல். 110 கிராம் எடை கொண்டதாக வருகிறது. இதில் 2.4 இன்ச் QVGA டிஸ்பிளே உள்ளளது. இந்த மொபைல் Threadx RTOS அடிப்படையில் இயங்குகிறது. ஒரு சிம் பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த மொபைலில் ஜியோ சிம்மை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதில் 2000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 343 மணி நேரம் ஸ்டாண்ட்-பை பேட்டரி என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக பயன்பாடு இல்லையென்றால் 15 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும். கவலையே இன்றி தடையில்லாமல் நீண்ட நேரம் பாடல் மற்றும் படங்களை பார்க்க முடியும்.

ஜியோ பே: மேலும், 0.05 ஜி.பி ரேம் உடன் வரும் இந்த போனில் 128 GB வரை மெமரி கார்டு மூலம் பாடல்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இதில், ஜியோ சினிமா, ஜியோ சாவன் போன்ற ஜியோ செயலிகளும் உண்டு. மேலும், இதில் ஜியோ பே (Jio Pay) இருப்பதால் UPI வழியாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
முந்தைய ஜியோ பாரத் வி2 போன் 1.77 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1000 mAh பேட்டரியுடன் வெளியானது. இதிலும் ஸ்டோரேஜை 128 ஜிபி வரை உயர்த்திக்கொள்ள முடியும். இது ரூ.999 விலையில் விற்பனையாகிறது. இந்நிலையில், சற்று கூடுதல் விலையில், டபுள் மடங்கு பேட்டரி பவருடன், பெரிய டிஸ்பிளேவுடன் அசத்தலாக வந்துள்ளது ஜியோ பாரத் பி1.

விலை ரூ.1,299: Jio Bharat B1 4G மொபைல் கருப்பு நிற வேரியண்டில் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Jio Bharat B1 4G மொபைல். இதன் விலை ரூ.1299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை ரிலையன்ஸ் ஜியோ இணையதளம் மற்றும் அமேஸான் தளங்களில் வாங்கி கொள்ளலாம்.
ஜியோ பாரத் போனில் ரூ.123 மற்றும் ரூ.1,234 என இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இதில் ரூ.123 திட்டமானது அன்லிமிடெட் கால், எஸ்.எம்.ஸ் மற்றும் தினசரி 0.5 ஜிபி என 14 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.1,234 பிளான் ஆனது வருடாந்திர ரீசார்ஜ் ஒஇளான். இது அன்லிமிடெட் கால் மற்றும் ஆண்டு முழுவதும், தினரி 0.5 ஜிபி டேட்டா என ஒட்டுமொத்தமாக 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications