ரூ2 லட்சம் வரை அபராதம் போட்டுருவாங்க.. உங்க பெயரில் எத்தனை சிம் கார்டு இருக்கு.. உடனே செக் பண்ணுங்க?
டெல்லி: கடந்த மாதம் 26 ஆம் தேதி புதிய தகவல் தொடர்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி ஒருவர் 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும். இதனை மீறி அதிக சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால் ரூ2 லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இதேபோல் மற்றொருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பலரும் தங்கள் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி குவித்து இருப்பார்கள்.. சொல்லப்போனால் பலருக்கும் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்று கூட தெரியாது. தற்போது இஷ்டத்திற்கு சிம் கார்டுகளை ஒரு தனி நபர் வாங்கி குவிக்க முடியாது.

ஏனெனில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொடர்பு சட்டத்தின்படி, தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக தனது பெயரில் 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி புதிய தகவல் தொடர்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தில் தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொடர்பு சட்டத்தின்படி, தகவல் தொடர்பு நெட்வொர்க்கை நிறுவவோ, இயக்குவோ, சேவைகளை வழங்கவோ அல்லது டவர் போன்ற கட்டமைப்புகளை வைத்திருக்கவோ விரும்பும் எந்தவொரு நிறுவனமும் அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும், தகவல் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் மத்திய அரசுக்கு வழங்குகிறது.
அதேபோல, பொதுமக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்க அனுமதி உண்டு. ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்லது வடகிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் 6 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். இந்த விதியை மீறினால் முதல் முறை ரூ. 50,000 அபராதமும், அதைத் தொடர்ந்து மீறினால் ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
அதே போல "மற்றொருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்" எனவே புதிய விதிகளின் படி 9 சிம் கார்டுக்கு மேல் உங்கள் பெயரில் சிம் கார்டுகள் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சரி எத்தனை சிம்கார்டுகள் உங்கள் பெயரில் உள்ளது என்பது கண்டறிவது எப்படி என்ற கேள்வி எழலாம். இது குறித்த விவரம் வருமாறு:- Sanchar Saathi என்ற இணையதளத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். உடனடியாக ஒரு ஒடிபி கேட்கும். இந்த ஒடிபியை பதிவு செய்ததும் அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
அதில், உங்கள் பெயரில் மொத்தம் எத்தனை செல்போன் எண்கள் வாங்க்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரம் தோன்றும். அதிலேயே 'Not My Number', 'Not Required', and 'Required' என மூன்று ஆப்ஷன் காட்டும்.
* உங்களுக்கு தெரியாமலே உங்கள் பெயரில் சிம் கார்டு ஆக்டிவாக இருந்தால் 'Not My Number' என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற ரெக்யூஸ்ட் கொடுக்கவேண்டும்.
* உங்கள் பெயரில் சிம் கார்டுகள் இருந்து அது தேவையில்லை என நீங்கள் நினைத்தால் not required எந்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* குறிபிட்ட எண்களை நீங்கள்தான் உபயோகப்படுத்துகீறீர்கள்.. எந்த நடவடிக்கையும் தேவையும் இல்லை என்ற Required' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications