காதிலேயே வெடித்து சிதறிய சாம்சங் இயர்பட்ஸ்.. செவிடானது காது.. பதற வைக்கும் சம்பவம்! மக்களே ஜாக்கிரதை
துருக்கி: மின்சாதன பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நடந்துள்ளது. சாம்சங் இயர்போனை தனது மனைவி பயன்படுத்திக் கொண்டு இருந்த போது திடீரென அது வெடித்துச் சிதறியதாகவும் இதனால் காது கேட்கும் திறனை தனது காதலி மொத்தமாக இழந்ததாகவும் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த அந்த நபர் தனது காதலி பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப். இ (Samsung Galaxy Buds FE) இயர்போன் வெடித்துச் சிதறியதாகக் கூறியுள்ளார். இதனால் தனது மனைவி நிரந்தரமாகக் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய இயர்பட்ஸ்: இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்க பதிவில் "நான் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்டிரா மொபைலை பயன்படுத்தி வருகிறேன். அத்துடன் சேர்ந்து பயன்படுத்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப்.இ இயர்போனை வாங்கினேன். இயர்பட்கள் வந்த போது அதில் 36% சார்ஜில் இருந்தது. அதை நான் ஒரு முறை கூட சார்ஜ் செய்யவில்லை.
சிறிது நேரம் பயன்படுத்திய பிறகு எனது கேர்ள் பிரண்ட் அதைக் கேட்டார். சரி என நானும் கொடுத்துவிட்டேன். அவர் தனது மொபைலில் கனெக்ட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாகக் கொஞ்ச நேரத்திலேயே அவரது காதில் இயர்பட்ஸ் வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக அவருக்கு நிரந்தர காதுகேளாமை ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை: இது தொடர்பாக நான் சாம்சங் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு பிரச்சினையை விளக்கினேன். அவர்கள் அருகே உள்ள சாம்சங் சேவை மையத்திற்கு இயர்பட்ஸ்ஸை எடுத்துச் செல்லச் சொன்னார்கள். இயர்பட்ஸ்களை பார்த்தவுடன் அவர்களும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எங்களிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால், உண்மையில் இங்கு தான் எல்லா பிரச்சனையும் தொடங்கியது.
2 நாள் கழித்து எங்களை அழைத்தார்கள். நாங்கள் அங்குச் சென்ற போது இயர்போன் வெடிக்கவில்லை.. சிதைந்து மட்டுமே இருக்கிறது எனச் சொல்லி அதற்குப் பதிலாக புதிய இயர்போன்களை தருவதாகச் சொன்னார்கள். எனது காதலி காது கேட்கும் திறனையே இழந்துள்ள போது, புதிய இயர்போனை தருகிறோம் என மட்டும் அவர்கள் சொல்வதை ஏற்கவே முடியவில்லை. இது குறித்துக் கேட்ட போது, வேண்டும் என்றால் இதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கிளம்புங்கள்.. வழக்கு தொடர் வேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம் என்று அலட்சியமாகப் பதிலளித்தனர்.
தீர்வு கிடைக்கவில்லை: இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், எனக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவே இல்லை. இயர்பட்ஸ் வாங்கியதற்கான பில், வெடித்த தேதி, அதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட போட்டோ, இதனால் ஏற்பட்ட காது கேளாமை குறித்த மருத்துவ அறிக்கை என அனைத்தும் எங்களிடம் உள்ளன. இதில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்தால் உதவுங்கள்" என்று போஸ்ட் செய்துள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பான படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இந்த சம்பவத்தை உறுதி செய்ய முடியவில்லை என்றே அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இருப்பினும் செல்போன் உள்ளிட்ட சாதனங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் நடக்கலாம். உலகெங்கும் இதற்கு முன்பும் ப்ளூடூத் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications