போனா வராது.. பொழுது போனா கிடைக்காது! குறைந்தவிலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் ஃபிளிப் மொபைல்
சென்னை: சமீப நாட்களாக சாம்சங் மொபைல் நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. இதில் அதிகமான கவனத்தை ஈர்த்தது மடிக்கக்கூடிய வகையில் உள்ள ஃபிளிப் ஸ்மார்ட் போன்தான். ஆனால் இந்த மாடலின் விலை அதிகம். எனவே சாமானிய மக்களும் வாங்கும் வகையில் புதிய மாடல் ஃபிளிப் ஸ்மார்ட் போனை சாம்சங் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்டிராய்டு மொபைல்கள் வருவதற்கு முன்னரே மடிக்கும் வகையில் மொபைல்கள் வந்துவிட்டன. மோட்ரோலா நிறுவனத்தின் ரேசர் வகை ஃபிளிப் போன்களை பார்க்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. இப்படியாக ஆன்டிராய்டு இல்லாத காலகட்டங்களிலும் மோட்டோ நிறுவனம் இந்த வகை போன்களை அறிமுகப்படுத்தி கலக்கியது. ஆனால் காலப்போக்கில் ஆன்டிராய்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்த, சாம்சங் இதில் கோலோச்ச தொடங்கியது.

நோக்கியா, மோட்டோ எல்லாம் ஓரம் போ.. என்று கூவியவாறு ஸ்மார்ட் போன் சந்தையை சாம்சங் தன்வசப்படுத்தியது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தற்போது ஃபிளிப் ஸ்மார்ட் மொபைல் என்கிற லெவலுக்கு வந்திருக்கிறது. இதை பார்த்த மோட்டோ, அட இந்த ஃபிளிப் மொபைலுக்கு நாமதானே அடித்தளம் போட்டோம்? என அதுவும் ரேசர் வரிசையில் புதிய ஃபிளிப் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக மொபைல் உலகில் இந்த ஃபிளிப் போன்கள்தான் தற்போது டிரெண்டிங்.
ஆனால் சாமானிய மக்கள் இதனை வாங்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு இதன் விலை அதிகமாக இருக்கிறது. தொடக்க விலையே ரூ.60-70 ஆயிரம் என இருப்பதால் இது தற்போது வரை பணக்காரர்களுக்கான மொபைல்களாகதான் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற சாம்சங் முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சாமானிய மக்களும் பயன்படுத்தும் குறைந்த விலையில் ஃபிளிப் போன்களை சந்தையில் களமிறக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.
ட்ரெண்ட்ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. வரும் 2024ம் ஆண்டில் இந்த போன்கள் சந்தைக்கு வரலாம் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உள்ள ஃபிளிப் ஸ்மாட் போன்களில், வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், வாட்டர் ஃபுரூப் வசதி இருக்கிறது. இதுவே சாமானிய மக்களுக்கான விலையில் வரும் போன்களில் இந்த வசதிகள் இருக்காது என்றும், கேமராக்களிலும், சாதாரண லென்சையே பயன்படுத்த போவதாகவும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் இந்த மாதிரி ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்தால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். முன்பதிவுகள் அதிகமாக இருக்கும். அதேபோல சாதாரண விலையில் ஃபிளிப் போன்களை சந்தைக்கு கொண்டு வந்த முதல் ஸ்மார்ட் போன் நிறுவனம் எனும் பெயரையும் சாம்சங் பெறும். இது அதன் சந்தை மதிப்பை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications