இன்ஸ்டாகிராம் முடங்கியது.. லாகின் கூட செய்ய முடியாமல் உலகெங்கும் பல லட்சம் யூசர்கள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியாக்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராம் தளம் இன்று திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் முடங்கியதால், இன்ஸ்டாகிராம் தளத்தை அதன் யூசர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

உலகில் இப்போது இருக்கும் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.

instagram

இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு திடீரென இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட உலகெங்கும் பல லட்சம் பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 41% யூசர்கள் லாகின் செய்வதிலேயே சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல சுமார் 40% பேர் சர்வர் இணைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஃபீட்கள் லோட் ஆகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல இன்னும் பல இன்ஸ்டாகிராம் செயலியையே ஓபன் செய்ய முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதேபோல இன்ஸ்டாகிராம் தளமும் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மெல்லச் சீராகி வருவதாகவும் இப்போது அதன் யூசர்கள் கூறி வருகிறார்கள்.

அதேநேரம் இன்ஸ்டாகிராம் தளம் இதுபோல முடங்குவது இது முதல்முறையும் இல்லை.. கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக இதுபோல முடங்கியுள்ளது. முன்னதாக கடந்த நவ. 13ம் தேதியும் இதுபோல முடங்கிய நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+