வாட்ஸ்அப் மெசேஜ்களை உளவு அமைப்பால் படிக்க முடியும்! பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஜுக்கர்பெர்க் பகீர்
சேக்ரமென்டோ: இப்போது நமக்கு வாட்ஸ்அப் என்பது ரொம்பவே முக்கியமான ஒரு செயலியாக இருக்கிறது. இதில் என்கிரிப்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி சிஏஐ உள்ளிட்ட உளவு அமைப்புகளால் வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்க முடிவதாகத் தெரிவித்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க், இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
இந்த காலத்தில் வாட்ஸ்அப் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் என அனைத்திலும் வாட்ஸ்அப் மூலமாகவே அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இருப்பினும், ஹேக்கிங் உள்ளிட்ட பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதைச் சமாளிக்க எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
உளவு அமைப்புகளால் படிக்க முடியும்:
இதற்கிடையே வாட்ஸ்அப் என்கிரிப்ஷனை தாண்டி சிஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளால் வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்க முடியும் என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இருந்தாலும் அதையும் தாண்டி சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்புகளால் வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்கக்கூடிய சூழல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் மெசேஜ்களை சிஏஐ உள்ளிட்ட உளவு அமைப்புகளால் எப்படிப் படிக்க முடிகிறது என்பது குறித்து கேள்விக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கமான பதிலை அளித்துள்ளார்.
எப்படி சாத்தியம்:
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் வாட்ஸ்அப் செயலியில் என்க்ரிப்ஷன் இருக்கிறது. என்க்ரிப்ஷன் இருப்பதால் மெட்டாவின் சர்வர்களால் கூட எந்தவொரு மெசேஜ்ஜையும் படிக்க முடியாது. அதைப் படிப்பதால் எங்களுக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை. அதேநேரம் இந்த என்க்ரிப்ஷன் பாதுகாப்பு யூசர்களின் செல்போன்களில் இருப்பதில்லை. அதுவே பிரச்சினைக்குக் காரணம். செல்போனில் உள்ள இந்த குறைபாடுகளை குறிவைத்து, என்க்ரிப்ஷனை அவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். இதன் மூலம் மெசேஜ்களை அவர்களால் படிக்க முடிகிறது" என்றார்.
பின்னணி:
முன்னதாக இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் டக்கர் கார்ல்சன் சில பரபர புகார்களை முன்வைத்திருந்தார். அதாவது ரஷ்ய அதிபர் புதினை நேர்காணல் எடுக்க டக்கர் முயன்றுள்ளார். இதற்காக அவர் அனுப்பிய தனிப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை என்எஸ்ஏ மற்றும் சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் படித்தாக டக்கர் கார்ல்சன் பரபர புகார்களை முன்வைத்தார்.
மார்க் ஜுக்கர்பெர்க்
இந்த ஏஜென்சிகள் தனது வாட்ஸ்அப் மெசேஜ் குறித்த தகவல்களைத் திட்டமிட்டு லீக் செய்ததாகவும் இதனால் நேர்காணல் எடுக்க முடியாத சூழல் உருவானதாகவும் டக்கர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பான கேள்விக்குத் தான் என்கிரிப்ஷனை தவித்துவிட்டு, நேரடியாக செல்போனை உளவு அமைப்புகள் குறிவைப்பதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருக்கிறார்.
மார்க் ஜுக்கர்பெர்க் மேலும் கூறுகையில், "சர்ச்சைக்குரிய பெகாசஸ் உள்ளிட்ட ஸ்பைவேர் கருவிகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது செல்போனில் சேமிக்கப்பட்ட தரவை நேரடியாக அணுக உளவு அமைப்புகளுக்கு உதவுகிறது. இது என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள், போட்டோக்கள், கால் ஹிஸ்டரி ஆகியவற்றை கூட அணுக உதவுகிறது. இதற்காக அவர்கள் நெட்வோர்க் அல்லது சர்வரை ஹேக் செய்யத் தேவையில்லை. குறிப்பிட்ட கருவிகளை ஹேக் செய்தாலே போதும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி:
இதை எல்லாம் கருத்தில் கொண்டே நாங்கள் வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகிறோம். யூசர்களின் தனியுரிமை எங்களுக்கு முக்கியம். எடுத்துக்காட்டாக disappearing messages கூட அதற்காகத் தான் கொண்டு வந்துள்ளோம். உங்கள் செல்போனை ஒருவர் ஹேக் செய்துவிட்டால், உங்களுக்கு வரும் கால், மெசேஜ், நீங்கள் எடுக்கும் போட்டோ என அனைத்தையும் அவர்களால் பார்க்க முடியும். செல்போனை என்கிரிப்ட் செய்து, disappearing messagesஐ ஆன் செய்து வைப்பதே நீங்கள் பாதுகாப்பாக இருக்க ஒரே வழி" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications