Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வானில் பறக்கும் உளவாளி”.. உளவு பார்க்கும் பலூன் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விண்ணைத் தாண்டி உளவு பார்க்கும் பலூனை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது இந்தியா. டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே வடிவமைத்த அதி உயர ஸ்ட்ரேட்டோஸ்பெரிக் ஏர் ஷிப் அண்மையில் மத்திய பிரதேசத்தில் சோதனை நடத்திப் பார்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பாக நாடுகள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அண்மையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது. நாடுகளின் எல்லைகள், அண்டை நாடுகள், எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

India pakistan jammu kashmir DRDO

ஆபரேஷன் சிந்தூர்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் அதிநவீன விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), அதிஉயர உளவு பணிகளுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அடுக்கு மண்டல ஏர் ஷிப்பின் முதல் வெற்றிகரமான பறத்தல் சோதனையை நிகழ்த்தியுள்ளது.

ஏர் ஷிப் சோதனை

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியோபூர் சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏர்ஷிப், கருவிகளை சுமந்து கொண்டு 17 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. சுமார் 62 நிமிடங்கள் வானில் பறந்த பின்னர் இது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏர் ஷிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், எதிர்கால பணிகளுக்காக இந்த தளத்தை மேலும் மேம்படுத்த பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"காற்றை விட மெல்லிய இந்த அமைப்பு இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும். இதன் மூலம் இத்தகைய உள்நாட்டு திறன்களைக் கொண்ட உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்" என்று DRDO தனது எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

உளவு பார்க்கும் பலூன்

அடுக்கு மண்டல உளவு பலூன்கள் பெரும்பாலான போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இதனால் அவை எந்த தடையும் இன்றி மேலிருந்து கண்காணிக்க முடியும். பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் போலல்லாமல், இந்த வான் கப்பல்கள் இலக்குகளின் மீது நீண்ட நேரம் வட்டமிட்டு தொடர்ச்சியாகவும் கண்காணிக்கக் கூடியவை.

இருப்பினும், இத்தகைய உயரங்களில் ஏர்ஷிப்பை பராமரிப்பது பல சவால்களை உள்ளடக்கியது. பலத்த காற்று மற்றும் நிலையற்ற வானிலை ஆகியவை இதில் முக்கியமானவை. இந்தியா தனது சொந்த கண்காணிப்பு பலூன் திறன்களை மேம்படுத்தி வரும் அதே வேளையில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறது.

விண்ணைத் தாண்டி உளவு பலூன்

கடந்த அக்டோபர் 2024 இல், இந்திய விமானப்படை ரஃபேல் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஏர்ஷிப் பலூன்களை இடைமறிக்கும் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த புதிய தொழில்நுட்பம், வான்வழி உளவுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு இது ஒரு முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வெற்றிகரமான ஸ்ட்ரேட்டோஸ்பெரிக் ஏர் ஷிப் சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு திறன்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது. இந்த சாதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ குழுவை வாழ்த்தி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+