அடிதூள்.. சென்னையின் "அந்த" பகுதிக்கு வரப்போகும் வரப்பிரசாதம்.. அடியோடு மாறுகிறதே.. சூப்பர்
சென்னை: சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
சென்னையில் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சாந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.

இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது.
அந்த பணிகள் முடிந்த நிலையில் வரும் நாட்களில் சாலை விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 15.7 கோடி மதிப்பிலான சொத்துகள் இடிக்கப்பட உள்ளன.
ஓஆர்ஆர் சாலை: அந்த வகையில் சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
அரசு ஆதாரங்களின்படி, ஓஆர்ஆர் எனபப்டும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
அதேபோல் இவர்கள் குழு இந்த பகுதியில் மெட்ரோ, ரயில், புறநகர் ரயில் அல்லது டிராம் அல்லது வெளிவட்டச் சாலையில் மற்ற விதமான போக்குவரத்து முறைகளின் செயல்பாட்டு சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இங்கே மெட்ரோ அமைத்தால் எப்படி இருக்கும் என்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
வேகம்: இங்கே வாகனங்களை ஓட்டும் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது. மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதற்காக ஆட்டோமெட்டிக் ரேடார் கருவில் சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகரும் வேகம் கணக்கிடப்படும்.
அதை வைத்து வாகனங்களின் வேகம் கணக்கிடப்படும். இதை வைத்து 40 கிமீ வேகத்திற்கும் அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில்தான் சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
இதுவரை, 4 லேன் கொண்ட ORR இல் வேக வரம்புகள் இரண்டு லேன்களில் மணிக்கு 80 கிமீ ஆகவும், மற்ற இரண்டு ஸ்பீட் லேன்களில் மணிக்கு 100 கிமீ ஆகவும் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை அவுட்டர் ரிங் சாலையில் இனி 120 கிமீ வேகத்தில் கூட செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2017ல் இருந்து கடந்த 6 வருடங்களாக இங்கே இருந்த 100 கிமீ வேக லிமிட் மாற்றப்பட்டு உள்ளது.
தீவிரமாகும் கண்காணிப்பு: இது போக இப்படி விதிகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் அளிப்பதற்காக சாலைகளில் இருக்கும் அனைத்து சந்திப்புகளில் இனி கேமரா பொருத்தப்படும். அதேபோல் ஸ்பீடோ கன் ஒன்றும் பொருத்தப்படும். நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் கேமரா பொறுத்தப்படும்.போக்குவரத்து போலீசார் தங்களின் உடலில் கேமரா பொருத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும்.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் இனி கேமரா இருக்கும். இதனால் போலீஸ் சேசிங் அல்லது இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.இது போக சாலைகளில் வேகமாக வாகனம் செல்லும் போது அதை எளிதாக கண்டுபிடிக்க தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்கள் சந்திப்புகளில் பொருத்தப்படும்.
அதேபோல் சாலையில் பல்வேறு விதி மீறல் செய்யும் நபர்களை கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் நம்பர் பிளேட்டை வைத்து தானாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றால் கேமரா உங்களை பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் உள்ள இந்த வசதி தமிழ்நாடு முழுக்க கொண்டு வரப்பட உள்ளது. மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செலான் செலுத்தப்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications