உங்கள பற்றி 4 வரி போதும்.. நீங்க எப்போது செத்து போவீங்கனு துல்லியமாக சொல்லும்.. மிரள வைத்த AI மாடல்
வாஷிங்டன்: வரும் காலத்தில் ஒருவர் எப்போது உயிரிழப்பார் என்பதைக் கணிக்கும் துல்லியமான ஒரு ஏஐ டூலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஏஐ வருகை என்பது மனிதர்களை மொத்தமாகப் புரட்டிப் போட்டது.. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி ஏஐ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது. சாட் ஜிபிடி வெற்றிக்குப் பின்னரே வரிசையாக பல்வேறு ஏஐ மாடல்கள் வரத் தொடங்கின.

இப்படி ஒவ்வொரு நாளும் பல புதிய ஏஐ மாடல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது மரணத்தைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு ஏஐமாடல் வெளியாகியுள்ளது.
புது ஏஐ அல்காரிதம்: Life2vec என்ற அல்காரிதம் தான் இந்த துல்லியமான கணிப்புகளைக் கொடுக்கிறது. இந்த அல்காரிதம் தனது கணிப்புகளைத் தர வெறும் நான்கு முக்கிய தரவுகளை மட்டுமே நம்பியுள்ளது என்பதும் இங்குக் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இந்த 4 தரவுகளை வைத்துக் கொண்டே இதனால் 75% வரை துல்லியமாக மரணம் சார்ந்த தகவல்களைக் கணிக்க முடிகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ஒவ்வொரு நபரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் மனித வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்கிறோம். இப்படி மனித வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் எப்போது இறப்பார் என்பதை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது" என்கிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளனர். 2008 முதல் 2020 வரையிலான 60 லட்சம் டென்மார்க் மக்களின் தரவுகளைக் கொடுத்து இந்த ஏஐ டூலை டிரைன் செய்துள்ளனர். வருமானம், வேலை, இருப்பிடம், காயங்கள் எனப் பல தகவல்களை அதில் இருந்து இந்த ஏஐ மாடல் கற்றுள்ளது. பிறகு 2016 மற்றும் 2020 இடையே உயிரிழந்தவர்கள் லிஸ்டை வைத்து சோதனை செய்துள்ளனர்.
இதில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் குறித்த டேட்டாக்களை கொடுத்துள்ளனர். அடிப்படைத் தகவல்களை வைத்தே அவர்கள் எப்போது உயிரிழந்துள்ளனர் என்பதை Life2vec துல்லியமாகக் கணித்துள்ளது. சுமார் 75% வரை இந்த கணிப்புகள் துல்லியமாக இருந்துள்ளது. ஆணாக இருப்பது, மன ரீதியான பிரச்சினைகள், அதிகம் வேலை செய்தது போன்றவை முன்கூட்டியே உயிரிழக்கக் காரணமாக இருக்கிறது. மறுபுறம், அதிகப் பணம் சம்பாதிப்பது அல்லது தலைமை பதவியில் இருப்பது நமது வாழ்நாளை அதிகரிக்கிறது.
உயிரிழப்புகள்: இதற்கு முன்பும் ஒருவர் எப்போது உயிரிழப்பார் என்பதைக் கணிக்கும் ஏஐ மாடல்கள் வந்துள்ளன. ஆனால், அதனால் 11% வரை மட்டுமே சரியாக இந்த உயிரிழப்பைக் கணிக்க முடிந்துள்ளது. ஆனால் இந்த Life2vec 75% வரை உயிரிழப்பைக் கணித்துள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த ஏஐ மாடலால் அனைத்தையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நாம் சில வார்த்தைகளில் ஒருவரை பற்றிச் சொன்னால் போதும் இந்த ஏஐ மாடல் அதைத் துல்லியமாகக் கணித்துவிடுகிறது.. மனித வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வைத்து அடுத்து என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை எங்கள் ஏஐ மாடல் கண்டுபிடிக்கிறது. இதை வைத்து ஒருவர் எப்போது உயிரிழப்பார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
ரிஸ்க் என்ன: எங்கள் மாடலை நிச்சயம் காப்பீட்டு நிறுவனம் பயன்படுத்தக்கூடாது.. ஏனென்றால் காப்பீடு என்பதே சீக்கிரம் மரணிக்கக் கூடிய துரதிர்ஷ்டவசமான நபர் யாராக இருக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் இல்லாமல், அனைவரும் காப்பீடு செய்வது தான். இந்த தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் சாதமாக இருக்கும் என்பதால் அவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது" என்றார்.
இந்த Life2vec இப்போது சோதனை அடிப்படையில் தான் இருக்கிறது. இதை தற்போது பொது மக்கள் அல்லது பெரு நிறுவனங்களால் பயன்படுத்த முடியாது. எதிர்காலத்தில் இதை அனைவரும் பயன்படுத்தினாலும் இந்த ஏஐ மாடல் 75% மட்டுமே துல்லியமான தகவல்களைத் தருவதால் காப்பீட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ரிஸ்க் என்கிறார் இதை உருவாக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான லெஹ்மன் வலியுறுத்துகிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications