இன்று முதல் OTP வர லேட் ஆகுமா? டிராய் கொடுத்த மிக முக்கிய விளக்கம்.. பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்
டெல்லி: சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக டிராய் மெசேஜ் டிரேசிபிலிட்டி தொடர்பாக முக்கிய விதிகளை அறிவித்து இருந்தது. இந்த விதிகள் காரணமாக செல்ஃபோனுக்கு ஓடிபி வருவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல் பரவியது. இந்தச் சூழலில் ஓடிபி தாமதம் தொடர்பான தகவலுக்கு டிராய் அமைப்பு மிக முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
நமது நாட்டில் சைபர் குற்றங்கள் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை இப்போது அனைவரும் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

சைபர் மோசடிகள்: இதனால் தொழில்நுட்பம் குறித்துத் தெரியாதவர்கள், வயதானவர்களைக் குறிவைத்து இப்போது சைபர் மோசடிகள் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களைக் கண்காணிக்கும் டிராய் அமைப்பு சைபர் மோசடிகளைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காகப் பல விதிகளையும் அறிவித்து வருகிறது.
அதன்படி மெசேஜ்களை கண்டறிய இன்று முதல் சில முக்கிய விதிமுறைகளை டிராய் அமல்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் அனுப்பப்படும் அனைத்து மெசேஜ்களையும் கண்காணிக்க டெலிகாம் ஆபரேட்டர்களை இந்த விதி கட்டாயப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவே டிராய் அமைப்பு இந்த விதியை கொண்டு வந்தது.
டிராய் விளக்கம்: அதேநேரம் இதனால் ஆதார் மற்றும் வங்கி சேவைக்கான ஓடிபி உள்ளிட்ட மெசேஜ்கள் வரத் தாமதம் ஆகலாம் என்று செய்திகள் வெளியானது.. இது முக்கியமான பரிவர்த்தனைகள் செய்யும் போது சிக்கல் ஏற்படலாம் என அஞ்சப்பட்டது. இதற்கிடையே டிராய் அமைப்பு இது தொடர்பாகத் தெளிவுபடுத்தும் வகையில் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த விதிமுறைகளால் மெசேஜ் வருவதில் தாமதம் இருக்கும் என்பது உண்மையில் தவறான தகவல் டிராய் விளக்கமளித்துள்ளது. தனது புதிய மெசேஜ் டிரேசிபிலிட்டி வழிகாட்டுதல்களால் ஒடிபி வருவதில் எந்தவொரு தாமதமும் ஏற்படாது என்றும் டிராய் கூறியுள்ளது. மெசேஜிங் அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்தும் அதே நேரம், ஓடிபி உள்ளிட்ட போன்ற அத்தியாவசிய பரிவர்த்தனைகளுக்கு டெலிகாம் ஆபரேட்டர்கள் தடையில்லா சேவையைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று டிராய் தெரிவித்துள்ளது.
தாமதம் ஆகாது: இது தொடர்பாக டிராய் அளித்துள்ள விளக்கத்தில், "இது தவறானது. நாங்கள் இப்போது மெசேஜ்களின் ட்ரேஸ்பிலிட்டியை உறுதி செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளோம். அதேநேரம் இதனால் மெசேஜ் வருவதில் எந்தவொரு தாமதமும் ஏற்படாது" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்: சைபர் மோசடிகளைத் தடுக்க மெசேஜ் டிரேசிபிலிட்டி சார்ந்த மிக முக்கிய அறிவிப்பை டிராய் அமல்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு எந்தவொரு மெசேஜும் யார் அனுப்பினார்கள் என்பதில் இருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என்பது வரையிலான அனைத்து தரவுகளையும் டெலிகாம் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் மோசடி என்று யாராவது புகார் அளித்தால் ஈஸியாக அதை டிரேஸ் செய்ய முடியும்.
இதன் காரணமாகவே டிராய் இந்த விதியை அமல்படுத்தியது. முதலில் கடந்த நவ. 1ம் தேதியே இந்த விதி அமலுக்கு வருவதாக இருந்தது. இருப்பினும், டெலிகாம் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே தேவையான அப்கிரேட்களை செய்துள்ளதாகவும் இதன் மூலம் ஈஸியாக எந்தவொரு மெசேஜ்ஜையும் டிராக் செய்ய முடியும் என்றும் டிராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications