இந்தியாவில் எலான் மஸ்க்! ஒரு டிஷ் வைத்தால்.. போகும் இடமெல்லாம் அதிவேக இன்டர்நெட்! எப்படி சாத்தியம்
டெல்லி: இந்தியாவில் மிக விரைவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. வழக்கமான பிராட்பேண்ட் இணைய நிறுவனங்களுக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கும் என்ன வித்தியாசம்.. ஸ்டார்லிங்க் இணைய வேகம் என்ன. இதன் மூலம் என்ன லாபம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு இப்போது சாட்டிலைட் வழி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதனால் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்கு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஸ்டார்லிங்க்: ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் சாட்டிலைட் வழி இணைய சேவையாகும். பொதுவாக நமது நாட்டில் ஃபைபர் நெட் இணைய சேவை நிறுவனங்கள் கேபிள்கள் மூலமாகவும் மொபைல் சேவை நிறுவனங்கள் மொபைல் டவர்கள் மூலமாகவும் இணைய சேவையை வழங்குவார்கள்.
ஆனால், ஸ்டார்லிங்க் நிறுவனமானது பூமியைச் சுற்றி வரும் தனது சாட்டிலைட் நெட்வொர்க் மூலம் இணைய சேவையை வழங்குகிறது. தொலைதூர பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்கின் நோக்கமாகும்.
இணைய சேவை: நமது நாட்டில் உள்ள பிராட்பேண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை நிலத்திற்கு அடியில் பதித்து அதன் மூலமாகவே இணைய சேவை வழங்குகிறது. இது நகரங்கள் போல மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் சரியாக இருக்கும். அதேநேரம் கிராமம் அல்லது மக்கள் நெருக்கடி குறைவாக உள்ள பகுதிகளில் இது வேலைக்காகாது. ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை நிலத்திற்கு அடியில் புதைத்து நெட்வொர்க்கை உருவாக்க ஆகும் செலவு அதிகம். எனவே, மக்கள் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு இது செட் ஆகாது.
அந்த இடத்தில் தான் ஸ்டார்லிங்க் உள்ளே வருகிறது. ஏற்கனவே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் பல ஆயிரம் சாட்டிலைட்களை அனுப்பியுள்ள நிலையில், அதன் மூலம் இணைய சேவை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கமாகும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு கேபிள்களை புதைக்கும் காசு மிச்சம். மக்களுக்குக் குறைந்த செலவில் இணைய சேவை கிடைக்கும்.
வித்தியாசம் என்ன: இதற்கு முன்பும் சில நிறுவனங்கள் சாட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சாட்டிலைட்களையே பயன்படுத்தினர். இதனால் இன்டர்நெட் வேகம் குறைவாகவும் தாமதமாகவும் ஆனது. இதனால், வீடியோ கால், ஆன்லைனில் வேலை செய்வது எல்லாம் சாத்தியமே இல்லாமல் இருந்தது.
ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சாட்டிலைட்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இருக்கிறது. மேலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக மட்டும் பல ஆயிரம் சாட்டிலைட்கள் உள்ளன. இதன் மூலம் அதிவேக இணையத்தைத் தாமதம் இல்லாமல் தர முடிகிறது.
என்ன தேவை: அதேநேரம் ஸ்டார்லிங்க் இணையச் சேவையை செல்போனை மட்டும் வைத்துப் பயன்படுத்த முடியாது. இதற்கு உங்களுக்கு சாட்டிலைட் டிஷ், வை-பை ரவுட்டர், கேபிள்களை கொண்ட ஸ்பெஷல் கிட் வாங்க வேண்டும். இது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக இருக்கும். இதன் மூலம் வீடு என்று இல்லை.. எங்குப் போனாலும் இதை கையோடு எடுத்துச் சென்று, அதிவேக இணையத்தை அணுகலாம்.
இணைய வேகத்தைப் பொறுத்தவரை, 25 Mbps முதல் 220 Mbps வரை இணைய வேகம் இருக்கும். இது நமது நாட்டில் இப்போதுள்ள பிராட்பேண்ட் நிறுவனங்கள் வழங்கும் இணைய வேகத்திற்கு இணையானது. மேலும், இதிலும் அன்லிமிடட் இணைய சேவை நமக்குக் கிடைக்கும்.
எந்த நாடுகள்: ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே பல நாடுகளில் தனது சேவையைத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுகல், பிரேசில், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் வரும்பட்சத்தில் அது இங்குள்ள கிராம மற்றும் குறைந்த ஜனநெருக்கடி இருக்கும் பகுதிகளுக்குப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications