"ஐபோனை அழிக்கும் அமெரிக்கா.." ஆப்பிள் நிறுவனம் பரபர குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது! யார் மீது தவறு
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கச் சட்டத்துறை தொடர்ந்து வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் தனித்துவத்தையே முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் இருப்பதாக ஆப்பிள் விமர்சித்துள்ளது.
உலகில் இப்போது இருக்கும் முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். குறிப்பாக அதன் ஐபோன்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. ஆப்பிள் எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும் அதை வைத்திருந்தால் கெத்து என்பதற்காகவே பலரும் அதை வாங்குவார்கள்;

அதேநேரம் ஆப்பிள் நிறுவனம் மற்ற டெவலர்பர்கள் ஐபோன்களில் எதையுமே செய்ய முடியாத அளவுக்கு வைத்துள்ளதாகவும் இது போட்டியை முழுமையாக காலி செய்வதாகவும் புகார்கள் இருந்தது. சமீப நாட்களில் பலரும் இது குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.
புதிய வழக்கு: இந்தச் சூழலில் அமெரிக்க நீதித்துறை ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் வேறு எந்தவொரு நிறுவனத்தையும் வளர விடாமல் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆப்பிள் அதன் மென்பொருள் மற்றும் ஹாட்வேர் அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் போட்டியைத் தடுத்துள்ளதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை
ஐபோனில் இருக்கும் ஐமெசேஜ் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளின் மற்ற ஆண்டிராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்பட முடியாது. ஓபன் ஸ்மார்ட்போன் சந்தை இருக்க வேண்டியது கட்டாயம் என்று அமெரிக்கச் சட்டத்துறை கூறுகிறது. மேலும், ஆப்பிள் இந்தளவுக்கு வளர அவர்கள் சேவை மட்டும் காரணம் இல்லை. அத்துடன் ஆப்பிள் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்ற நிறுவனங்கள் வளராமல் தடுத்ததும் அதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
"இன்னும் ஒரே ஆண்டு.." AI தொழில்நுட்பம் மனிதர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும்.. எலான் மஸ்க் பரபர அலர்ட்
ஆப்பிள் விமர்சனம்: ஆனால், இதற்கு ஆப்பிள் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. தங்கள் தனித்துவத்தையே குலைக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு ஐபோனை ஆண்ட்ராய்டு மொபைல் போல மாற வேண்டும் என்று விரும்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம், இது சட்டப்படி தவறான வழக்கு என்றும் இது தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் வழங்கும் சேவையைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மேலும் கூறுகையில், "இந்த வழக்கு எங்கள் அடிப்படைக்கே எதிராக இருக்கிறது. இந்த வழக்கு எங்களுக்கு எதிராக அமைந்தால் அது ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் எங்கள் திறனைத் தடுக்கும். மேலும், மக்களின் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும். இது தவறான முன்னுதாரணமாகவும் மாறும்" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன நடக்கும்: இருப்பினும், அமெரிக்க அரசு இதை வேறு மாதிரி கூறுகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது கட்டமைப்பில் வேறு நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. இது மற்ற நிறுவனங்களின் வாய்ப்பை முழுமையாக அழிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது, மேலும் அவர்கள், "ஆப்பிள் நிறுவனம் தடைகளை உருவாக்குகிறது. பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் என இருவருக்கும் எதிராக இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எப்படிப் போகிறது.. என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கும். இது ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications