Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னும் ஒரே ஆண்டு.." AI தொழில்நுட்பம் மனிதர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும்.. எலான் மஸ்க் பரபர அலர்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்த உலகில் ஏஐ சார்ந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், ஏஐ மனிதர்களை மிஞ்சும் அறிவாற்றலை அடுத்தாண்டிற்குள் பெரும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் ஏஐ என்பது தான் இப்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வருகை என்பது ஏஐ துறையை மொத்தமாக மாற்றிப் போட்டது.

AI will become smarter than humans in just an year says Elon Musk

சாட் ஜிபிடியின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு ஏஐ நிறுவனங்கள் வந்துவிட்டன. மருத்துவம், பொருளாதாரம் தொடங்கி பல்வேறு துறைகளிலும் ஏஐ சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம்: ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பேத்தியாக இருக்கும். மனிதர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த ஏஐ தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் இதனால் மிகப் பெரிய ஆபத்துகளும் கூட ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஏஐ துறையில் அடுத்த ஓராண்டில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தொடக்கம் முதலே ஏஐ துறையில் ஆர்வம் காட்டி வருபவர்களில் ஒருவர் எலான் மஸ்க். இன்று உலகைப் புரட்டிப் போடும் சாட் ஜிடிபியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தை முதலில் உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். வரும் காலத்தில் ஏஐ எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த எலான் மஸ்க் இதன் காரணமாகவே ஏஐ குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். மேலும் ஏஐ வளர்ச்சி குறித்துத் தொடர்ந்து எச்சரித்தும் வருகிறார்.

எலான் மஸ்க்: இதற்கிடையே ஏஐ எப்போது மனிதனையே மிஞ்சும் என்பது குறித்து எலான் மஸ்க் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த ஒரே ஆண்டில் ஏஐ தொழில்நுட்பம் ஒரு மனிதனை விடப் புத்திசாலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏஐ குறித்து நடந்த பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சாதாரண நபரை மிஞ்சும் அளவுக்கான திறனை ஏஐ தொழில்நுட்பம் அடுத்தாண்டில் பெற்றுவிடும். அதேநேரம் உலகில் இருக்கும் அனைத்து நபர்களையும் மிஞ்சும் அளவுக்கான திறனை ஏஐ இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதாவது 2029க்குள் எட்டிவிட்டும். தற்போது நம்மிடம் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் அந்தளவுக்கு வலிமையானதாக இல்லை. சிலர் இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலையை அடையும் என்கிறார்கள்.

இன்னும் ஓரே ஆண்டு: நான் கன்சர்வேடிவாகவே சொல்கிறேன். அடுத்த ஆண்டிற்குள் ஏஐ என்பது உலகின் எந்தவொரு தனிநபரை விட புத்திசாலியாக மாறும். அதேநேரம் வரும் 2029ஆம் ஆண்டளவில், அது அனைத்து மனிதர்களையும் சேர்த்தால் இருக்கும் அறிவை விடப் புத்திசாலித்தனமாக இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

AI will become smarter than humans in just an year says Elon Musk

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்போது மின்னல் வேகத்தில் இருக்கும் நிலையில், அது சில மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதே வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது. இப்போது வேக வேகமாக அனைத்து நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தி வருவதால் இதில் இருக்கும் குறைபாடுகள் கூட தெரியாமல் போகும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மிகப் பெரிய பாதிப்பாக வேலையிழப்பு இருக்கும். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களில் வேலையிழப்பு ஆபத்து ஆரம்பித்துவிட்டது. இந்தச் சூழலில் ஏஐ மனிதர்களுக்கு இணையாக மாறினால் வேலையிழப்பு மேலும் மோசமாக இருக்கும் என்பதே எச்சரிக்கையாக இருக்கிறது.

ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்

ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்! உலகின் முதல் கோடிங் போடும் AI தொழில்நுட்பம் "டெவின்" அறிமுகம்!

அதிவேகமாக கோடிங் போடும் ஒரு புதிய வகை ஏஐ டூல் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான சாப்ட்வேர் புரோகிராம்களையும் கூட மின்னல் வேகத்தில் போட்டுவிடுமாம். காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கிய உள்ள இந்த ஏஐ டூலுக்கு மெவின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சாப்ட்வேர் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.


சீனாவில் உள்ள இளம் பெண்கள் பலரும் ஆண்களைக் காதலிக்காமல் ஆண்களைப் போலவே பதில் சொல்லும் சாட்களை காதலிக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே சீனா மக்கள் தொகை சரிவால் தள்ளாடும் நிலையில், இந்த டிரெண்ட் தொடர்ந்தால் அது ஒட்டுமொத்தமாகச் சீனாவுக்கு மிகப் பெரிய பிரச்சினை மாறலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகமே தலைகீழாக மாறிடும்.. இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்.. AI என்ன செய்யும் தெரியுமா.. பில் கேட்ஸ் பரபர


ஏஐ மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் மட்டும் சற்று ஆறுதல் தகவல்களைக் கூறியிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏஐ வேகமாக வளரும் என்ற அவர் அதேநேரம் ஏஐ கண்டு நாம் பயப்படத் தேவையில்லை என்றும் இதனால் சில வேலையிழப்புகள் இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளும் கூட உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+