உலகமே தலைகீழாக மாறிடும்.. இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்.. AI என்ன செய்யும் தெரியுமா.. பில் கேட்ஸ் பரபர
வாஷிங்டன்: ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இப்போது புயலைக் கிளப்பிய தொழில்நுட்பம் என்றால் அது ஏஐ தொழில்நுட்பம் தான். குறிப்பாக சாட் ஜிபிடி கிடைத்த வெற்றி மற்ற ஏஐ மாடல்களுக்கும் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது.

மற்ற ஏஐ மாடல்களிலும் முதலீடுகள் குவிய ஆரம்பித்தன. மருத்துவம், தொழில்நுட்பம், முதலீடு என பல்வேறு துறைகளிலும் புது புது ஏஐ மாடல்கள் வரத் தொடங்கின. அதேநேரம் இது வேலையிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பில் கேட்ஸ்: இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில் கேட்ஸ் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.
திடீரென கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பில் கேட்ஸ்! AI எல்லாம் இல்லை "உண்மைதான்!" என்ன காரணம் தெரியுமா
வேலைவாய்ப்புகள்: இது குறித்து பில் கேட்ஸ் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதும் அச்சம் வரத் தான் செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் காலியாகும் என்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. 1900இல் விவசாய உற்பத்தியைத் தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது.
இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.. பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும். மக்களின் வாழ்க்கையை இது ஈஸியாக்கும். இந்த ஏஐ கணினி போல இல்லை. அதை அணுக உங்களுக்கு பிரத்தியேக கருவி எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை இணையத்தில் கணெக்ட் செய்தாலே போதும். நம்மால் ஏஐ சாதனங்களை அணுக முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
உதவி: ஒரு காலத்தில் உலகில் மிகப் பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் டாப் இடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ்.. உலக நன்மைக்காக உழைக்க உள்ளதாகவும் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தனது செல்வத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார். அதன்படி அவர் மருத்துவம் தொடங்கி பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் அவர் உலகின் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தையும் இழந்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் மக்கள் நலனுக்காகச் செல்வத்தைச் செலவழிக்கிறேன். எனது தனிப்பட்ட செலவுக்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது, அதைத் தாண்டி இருக்கும் செல்வத்தை மட்டுமே ஆய்வுகளுக்கு செலவழிக்கிறேன். இதனால் மனித சமுதாயம் முன்னேறினால் அதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி தான்" என்று அவர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications