மேஜிக் செய்யும் கூகுள் பிக்சல்! போட்டோவில் எவ்வளவு மோசமாக இருந்தாலும்.. நொடியில் அழகாக மாற்றும்! வாவ்
சென்னை: கூகுள் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்டுள்ள பிக்சல் மொபைல்களில் ஒரு அட்டகாசமான வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆண்டு முழுக்க என்னாதான் பல மொபைல்கள் வந்தாலும் கூட குறிப்பிட்ட சில மொபைல்களுக்க மட்டும் தான் எதிர்பார்ப்பு எகிறும். அப்படி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மொபைல்களில் முதல் இடம் ஐபோன்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேநேரம் ஐபோன்களை போலவே வேறு சில மொபைல்கள் மீதும் எதிர்பார்ப்பு இருக்கும். சாம்சங் கேலக்ஸி சீயிஸ் மொபைல்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். அதே வரிசையில் பார்க்கும் போது கூகுள் மொபைல்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.
பிக்சல்: கூகுள் நிறுவனத்தின் சேர்ச் என்ஜின் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், மொபைல்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதற்குக் காரணம் கூகுள் மொபைல்கள் எதுவும் ஹிட் அடித்தது இல்லை. இருந்த போதிலும் கூகுள் பிக்சல் மொபைல்கள் மீது எப்போதும் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். கேமரா ஹாட்வேரில் பெரிதாக இருக்காது என்றாலும் கூட பிக்சல் மொபைலின் சாப்ட்வேர் வேற லெவலில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் கூகுள் இந்த பிக்சல் சீரியஸ் மொபைல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ என்று மொபைல்களை வெளியிட்டது. பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. பிக்சல் 8 மொபைல் 6.2 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் (1,080x2,400p) ஓஎல்சிடி டிஸ்பிளைவே கொண்டதாக இருக்கும்.
மொபைல்: பிக்சல் 8 ப்ரோ ஆனது 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி (1,344x2,992p) கொண்டதாக இருக்கும். இந்த இரு மொபைல்களும் கூகுளின் நானா-கோர் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டான் எம்2 செக்யூரிட்டி சிப்பை கொண்டுள்ளது. பிக்சல் 8இல் 8 ஜிபி ரேமும், பிக்சல் 8 ப்ரோவில் 12ஜிபி ரேமும் இருக்கிறது. கூகுள் பிக்சல் 8 விலை ரூ. 75,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 8 ப்ரோ விலை ரூ.1,06,999ஆக உள்ளது.
பிக்சல் மொபைலில் மற்ற அனைத்து வசதிகளையும் காட்டிலும் நம்மைக் கவர்வது என்றால் அது கூகுளின் கேமரா தான். பிக்சல் மொபைல்களில் எடுக்கும் போட்டோக்கள் அப்படியே டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுக்கப்பட்டதை போல இருக்கும். இந்த முறை பிக்சல் 8இன் பின்புறம் 50 மெகாபிக்சல் + 12 மெகா பிக்சல் அல்டிரா வைட் என இரு கேமரா இருக்கிறது.
கேமரா: மறுபுறம் பிக்சல் 8 ப்ரோ மாடலில் 50 மெகாபிக்சல் + 64 மெகா பிக்சல் அல்டிரா வைட் + 64 மெகா பிக்சல் டெலிபோட்டோ என மூன்று கேமரா உள்ளது. முன்னால் இரு மொபைல்களிலும் 12 மெகா பிக்சல் கேமரா இருக்கிறது. இந்த பிக்சல் கேமராவில் பல ஏஐ அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் இருக்கும் ஒரு அம்சம் நாம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும்.
இது வேற லெவல்: பொதுவாக போட்டோ என்பது அந்த நொடியை அப்படியே காட்சிப்படுத்துவது தான். நாம் சிரிக்கிறோமோ, அழுகிறோமா அது அப்படியே பதிவாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் போட்டோக்களை எடுத்துத் தள்ளுகிறோம். அப்படி வெளியே செல்லும் போது எடுக்கும் க்ரூப் போட்டோ சொதப்பலாகப் போகப் பல சான்ஸ்கள் இருக்கிறது. அனைவரும் சிரிக்க வேண்டும், கேமராவை பார்க்க வேண்டும், கண்களை மூடியிருக்கக் கூடாது. இதுபோன்ற காரணங்களால் ஒரு க்ரூப் போட்டோ சொதப்பலாகப் போகப் பல வாய்ப்பு இருக்கிறது.
அது சரி செய்யவே கூகுள் இப்போது புது ஏஐ வசதியை இறக்கியுள்ளது. அதாவது க்ரூப் போட்டோ எடுக்கும் போது ஒருவரது முகம் சரி இல்லை என்றால் அதை ஈஸியாக மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, யாரேனும் ஒருவர் அந்த குறிப்பிட்ட ஷாட்டில் கண்களை மூடிக்கொண்டால், அவர்களின் கண்கள் திறந்து இருக்கும்படி எளிதாக மாற்றலாம். இதைக் கூகுள் Best Take என்று அழைக்கிறது. இது போட்டோக்களை நாம் அணுகும் முறையையே மாற்றப் போகிறது என்றால் சந்தேகம் இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications