ஜியோ சரவெடி.! இவ்வளவு கம்மி விலைக்கு 14 ஓடிடிகள்.. ஹாட்ஸ்டார், அமேசான், சன் எல்லாமே இருக்கு.. செம
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யூசர்களை கவர அட்டகாசமான சில திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் நம்மால் பல ஓடிடி செயலிகளை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
பயனாளர்களைக் கவர ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் முக்கியமான விஷயமே இதில் நமக்கு மொபைல் ரீச்சார்ஜும் கிடைக்கும்.

கூடவே இதில் பல ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்களும் இருப்பது தான் இதில் சிறப்பு. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பல ஓடிடி ஆப்ஷன்கள் நமக்குக் கிடைக்கும்.
ஜியோ புது திட்டம்: ஜியோ டிவி ப்ரீமியம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ. 398இல் இருந்து தொடங்குகிறது. இது பொதுமக்கள் எந்த சேனலை பார்க்கிறார்கள் என்பதையே மொத்தமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒன்றுக்கு மட்டும் நாம் ரீச்சார்ஜ் செய்தால் போதும்.. இனிமேல் நாம் தனித்தனியாக ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கும் தனியாகச் சந்தா கட்ட தேவையில்லை.
இனி இன்டர்நெட் காலி ஆகவே ஆகாது.. கூடவே இலவச ஓடிடிக்கள் வேற.. ரிலையன்ஸ் ஜியோ இறக்கிய புது திட்டம்
மேலும், ஒரே இடத்தில் இருந்து லாகின் செய்து கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செயலிக்குச் சென்று தனியாக லாகின் செய்யவும் தேவையில்லை. அதற்குப் பதிலாக அனைத்து செயலிகளில் இருக்கும் படங்கள் மற்றும் ஷோக்களை நாம் ஜியோ டிவி என்ற ஒரே ஓடிடி செயலியில் பார்க்கலாம்.
மொத்தம் 3 திட்டங்கள்: முதலில் இந்த ரூ, 398 திட்டத்தில் நமக்குத் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 மெசேஜ் கிடைக்கும். மேலும், 12 ஓடிடி தளங்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் வெலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
அடுத்து ரூ 1198 திட்டத்தில் இதேபோல தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 மெசேஜ் கிடைக்கும். அத்துடன் சேர்த்து மொத்தம் 14 ஓடிடி தளங்களை இலவசமாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல ஓராண்டிற்கு ஒரு பேக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரூ 4498 திட்டத்தில் நமக்கு 365 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 மெசேஜ் கிடைக்கும். மேலும், 15 ஓடிடி தளங்களையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இதுபோக ஜியோ நிறுவனம் தனியாக add on பேக் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 148 ரூபாய்க்கு வரும் இந்தத் திட்டத்தில் 10 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு 12 ஓடிடி தளங்கள் சப்ஸ்கிரப்ஷன் கிடைக்கும்.
கூடுதல் வசதிகள்: இதில் ஓராண்டிற்கு இருக்கும் பிளானில் பல கூடுதல் வசதிகளைக் கொடுத்துள்ளனர். அதாவது இந்தத் திட்டத்தில் நமக்கு கஸ்டமர் கேரில் முக்கியத்துவம் தரப்படும். மேலும், 4498 திட்டத்தில் பணத்தை ஒரே முறையில் கட்டவும் முடியும். அதைப் பிரித்துப் பிரித்துச் செலுத்தவும் நமக்கு ஆப்ஷன்கள் இருக்கிறது. இதில் ஜியோ டிவி என்ற ஒரே செயலியில் நீங்கள் பெரும்பாலான ஓடிடி தளங்களைப் பார்க்கலாம். ஆனால் அமேசான், ஹாட்ஸ்டார் ஆகிய செயலிகளுக்கு மட்டும் தனியாக ஆக்டிவேஷன் தேவைப்படும்.
ஜியோ சினிமா ப்ரீமியம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லிவ், அமேசான் ப்ரைம், லயன்ஸ்கேட் ப்ளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட், என மொத்தம் 14 ஓடிடி செயலிகள் இந்த பிளானில் இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications