வாட்ஸ்அப்.. இனி இலவசம் எல்லாம் கிடையாது! பணம் கொடுத்தே ஆகணும்! வந்த பரபர தகவல்! பயனாளர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரபல வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது முழுமையாக இலவசமாக இருந்து வரும் நிலையில், அதில் முக்கிய மாற்றம் வர உள்ளது.

உலகில் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தும் மெசேஜிங் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

 Whatsapp has ended its free unlimited backup and planning to introduce charge for backup

வாட்ஸ்அப் தளத்தில் பயனாளர்கள் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில காலத்தில் பல முக்கிய மாற்றங்கள் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது.

வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இப்போது ஆண்டிராய்டு செயலியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது அன்லிமிடெட் பேக்அப் எடுக்கலாம். இனி இந்த அன்லிமிடெட் பேக்அப் காலம் முடிந்துவிட்டது.

இனிமேல் வாட்ஸ்அப் செயலியில் பேக்அப்பிற்கு கட்டுப்பாடு வந்துவிட்டது. இதுவரை அன்லிமிடெட் பேக்அப் எடுக்கலாம் என்ற இருந்த நிலையில், இனிமேல் அன்லிமிடெட் பேக்அப்களும் நமது கூகுள் 15 ஜிபி வரம்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது கூகுளில் ஒவ்வொரு கணக்கிற்கும் 15 ஜிபி மட்டுமே இலவசமாக பேக்அப் எடுக்கலாம். அந்த 15 ஜிபி வரம்பில் இதுவரை வாட்ஸ்அப் பேக்அப் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், இப்போது அந்த நிலை மாறியுள்ளது.

கட்டுப்பாடு: 15 ஜிபிக்கு மேல் போனால் தேவையில்லாத பைல்களை டெலிட் செய்ய வேண்டும் இல்லையென்றால் டிரைவ் சேமிப்பைக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வாட்ஸ்அப் பேக்அப்கள் இலவசம் என்று இருந்த நிலையில், இனிமேல் நாம் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாகக் கூகுள் ஊழியர் ஒருவர் கூறுகையில், "வழக்கம் போல இந்த மாற்றம் முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வரும். டிசம்பர் மாதமே இது வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்களுக்கு வர உள்ளது. அதன் பிறகு அடுத்தாண்டு முதல் படிப்படியாக அனைத்து பயனாளர்களுக்கும் இது அமலுக்கு வரும்.

ஸ்டோரேஜ்: நீங்கள் பேக்அப் ஆப்ஷனை தேர்வு செய்தால்.. உங்கள் தனிப்பட்ட கூகுள் கணக்கில் பேக்அப் ஆகும். அதில் 15 ஜிபிக்கு மேல் போனால் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பேக்அப் ஆகும். அதாவது அந்த ஸ்டோரேஜ் லிமிட் முடியும் வரை பேக்அப் இலவசமாக இருக்கும். அதன் பிறகு ஸ்டோரேஜ் இருந்தால் மட்டுமே பேக்அப் ஆகும்" என்றார்.

அதாவது கூகுள் கணக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணக்கிற்கும் 15 ஜிபி இலவசமாகத் தரப்படும். மெயில், போட்டோஸ், டிரைவ் என நாம் எதில் வேண்டுமானாலும் பேக்அப் எடுக்கலாம். அப்படி பேக்அப் எடுக்கும் போது 15 ஜிபி வரை இலவசமாக பேக்அப் எடுக்கலாம். ஆனால், அந்த 15 ஜிபியை தாண்டிவிட்டால், நாம் மாதாமாதம் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது 15 ஜிபி வரம்பில் தான் வாட்ஸ்அப் பேக்அப்களை சேர்த்துள்ளனர்.

என்ன காரணம்: இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியை நாம் அன்லிமிட்டடாக பேக்அப் எடுப்பது முடிவுக்கு வந்துள்ளது. இப்போது வாட்ஸ்அப் என்று இல்லை ஸ்பாட்டிவை தொடங்கி அனைத்து நிறுவனங்களும் இலவச சேவைகளைக் கட் செய்து சந்தா முறைக்கு வேகமாக மாறி வருகிறது. இந்த சந்தா முறையில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்பதாலேயே பெரிய டெக் நிறுவனங்கள் இந்த சந்தா முறைக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+