சூப்பர்.. இனி சிம் இருந்தால்தான் வாட்ஸ்அப், டெலிகிராம் வேலைபார்க்கும்! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
சென்னை: சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் சைபர் கிரைம் குற்றங்களும் பெருகிவிட்டது. ஏதாவது ஒரு சிம்கார்டை கொண்டு வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளத்தை இன்ஸ்டால் செய்து விட்டால் அதற்குப் பிறகு சிம் கார்டு இல்லாமலேயே அதனை பயன்படுத்தலாம். இதனால் குற்றவாளிகளை நெருங்குவது சைபர் கிரைம் போலீசாருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இந்த நிலையில் சிம்கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸப் உள்ளிட்ட செயலிகள் இயங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சாட், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒருவரே பல கணக்குகளும் வைத்துள்ளனர்.
இந்த செயலிகளை மொபைல் போனில் நிறுவும்போது ஒரு முறை சிம் கார்டு அவசியம் இருந்தாலும் போது. அக்கவுண்டை ஓபன் செய்த பிறகு சிம் கார்டு பயன்படுத்தப்படாவிட்டாலும் இந்த செயலிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.

வாட்ஸ்அப் விதி
இணைய வசதி இருந்தால் போதும் என்பதால், சிம் கார்டு இல்லாமலும் வாட்ஸப் போன்றவற்றின் பயன்பாடு சாத்தியமாகிறது. ஆனால் இதையே பயன்படுத்தி சமீபகாலங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக மத்திய தொலை தொடர்பு துறை தெரிவித்துள்ளது. சிம் கார்டு இல்லாமல், வெறும் இணையத்தையே பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் குரல் அழைப்புகள் செய்து மக்களை ஏமாற்றும் மோசடி குழுக்கள் அதிகரித்துள்ளன. இதனால் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது போலீசுக்கு கடினமாகி வருகிறது.
சிம் கட்டாயம்
இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்து உள்ளது. அதன்படி, மொபைல் போனில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால்தான் இனிமேல் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளைக் பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லையென்றாலோ அல்லது செயலிழந்தால், சமூக வலைத்தள செயலிகள் தானாகவே செயலிழந்து விடும். அதாவது, பயன்பாடு தொடர சிம் கார்டு கட்டாயமாகும்.
லாகின் மாற்றம்
கணினி மற்றும் லேப்டாப்களில் இதுவரை ஒருமுறை லாகின் செய்துவிட்டால், செயலிகள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் புதிய விதிகளின் பேரில், இப்போதை முதல் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை சமூக வலைத்தள கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். பின்னர் மீண்டும் வழக்கம்போல் லாகின் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்.
புதிய விதிமுறை
இந்த மாற்றங்களுக்கான காரணத்தை மத்திய தொலைத்தொடர்பு துறையினர் விளக்கும்போது, "வங்கி சேவை செயலிகள் பயன்படுத்தப்படும் போது சிம் கார்டு கட்டாயமாக உள்ளதைப் போல, சமூக வலைத்தளங்களிலும் அதே நடைமுறை பயன்படுத்தப்படும். சிம் கார்டு இல்லாமல் செயலிகளைப் பயன்படுத்துவது குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடையாக உள்ளது. எனவே, பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளனர். புதிய உத்தரவை 90 நாட்களுக்குள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சைபர் மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளதாகச் சொல்கின்றனர் சைபர் கிரைம் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications