ஏண்ணே அடிச்சீங்க? கிங்காங்கை உதைத்த காமெடி நடிகர் அவரா? 100 சவரன் நகை தந்தாரா கிங் காங்? பிரபலம்
சென்னை: பணத்துக்காக அனைவருக்கும் கிங்காங் பத்திரிகை வைத்தார் என்கிறார்கள்.. பணம் கேட்கதான் கிங்காங் வருகிறார் என்றால், அந்த பிரபலங்கள் யாருமே பத்திரிகையை நேரில் வாங்கியிருக்க மாட்டார்கள். கிங்காங் அப்படி பணம் கேட்கக்கூடிய நபரும் கிடையாது " என்று அழுத்தமாக மறுப்பு சொல்லியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Cheyyar Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "கிங்காங் பத்திரிகை தந்ததும், முட்டிப் போட்டு பத்திரிகை வாங்கினார்கள்.. சிலர் குட்டிக்கரணம் அடித்தெல்லாம் பத்திரிகை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், எதிர்பார்த்த பிரபலங்கள் வரவேயில்லை.

இத்தனை வருடம் சினிமாவில் இருந்து வருபவர் கிங்காங்.. ஒரு பிரபலம்கூட வராமல் போனால், மாப்பிள்ளை வீட்டில் கிங்காங்கை பற்றி என்ன நினைப்பார்கள்? நாலு பேர் வந்து மகளை வாழ்த்துவதுதானே கவுரவம் என்று கிங்காங் நினைப்பார்?
உருவகேலி
நிறைய உருவ கேலிக்கு ஆளானவர்.. இவரை உருவகேலி செய்துதான், பல
காமெடி சீன்கள் வெற்றி பெற்றுள்ளன.. ஆனால், சொற்பமான நபர்களே திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.. இப்போது விஜயகாந்த் மட்டும் இருந்திருந்தால், மொத்த கோடம்பாக்கமே கிங்காங் வீட்டு கல்யாணத்துக்கு வந்து நின்றிருக்கும்
விஜயகாந்த் ஆசீர்வாதம்
கிங்காங்குக்கு கோடம்பாக்கத்தில்தான் கல்யாணம் நடந்தது.. இதை பற்றி கிங்காங்கே ஒருமுறை சொல்லியிருந்தார்.. எனக்கு திருமணமாகும்போது, நான் ஒன்றும் பெரிய நடிகன் இல்லை.. சொந்தக்காரர் என்றாலும், எனக்கு பெண் கொடுத்ததே பெரிய விஷயம்தான்.. நான் அழைப்பிதழ் தந்தவர்கள் எல்லாருமே வந்திருந்தார்கள். அப்போது விஜயகாந்த், ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தார்..
கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதிதான் எனக்கு திருமணம்.. அப்போது பலத்த மழையும் பெய்து கொண்டிருந்தது.. உடனே விஜயகாந்த், ஃபிளைட் பிடித்து கொண்டு அவசர அவசரமாக வந்தார்.. காருக்குள்ளிருந்தே என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, அதற்கு பிறகு கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, அப்போதே உடனே ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார்.
மன்சூர் அலிகான் மகள் திருமணம்
எனினும் முழுமையாக திருமணத்தில் பங்கேற்க முடியாததால், எங்களை வீட்டுக்கு வரவழைத்து விருந்து தந்து, பரிசுப்பொருளை வழங்கினார். எனவே, என்னுடைய மகள் திருமணத்தையும், விஜயகாந்த் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்" என்று கிங்காங் கூறியிருந்தார்.
மன்சூர் அலிகான் மகள் திருமணத்தின்போது, கிங்காங்கை கூப்பிட்டு, தனக்கு பக்கத்திலிருந்த சீட்டில் உட்கார வைத்து நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார் விஜயகாந்த். அந்த வீடியோக்களை இன்னமும் யூடியூப்பில் பார்க்கலாம்.. அதுதான் விஜயகாந்த்.
எப்போதுமே சினிமாவில் படைபலம் அல்லது பண பலம் இருக்க வேண்டும்..சமீபத்தில் இதே கோலிவுட்டில் மட்டும் 3 திருமணங்கள் நடந்தன.. பைனான்சியர் ஒருவரின் திருமணத்துக்கு ரஜினி, கமல் உட்பட எல்லாருமே வந்திருந்தார்கள்... அந்த பைனான்சியர்தான், இன்று கோலிவுட்டுக்கு படியளக்கும் ராசா..
இன்னொரு கல்வித்தந்தை எனப்படும் பணபலம் கொண்ட பைனான்சியர், வீட்டு திருமணத்திலும், அனைத்து நட்சத்திரங்களும் சென்றிருந்தனர்.. அடுத்ததாக, ஆகாஷ் பாஸ்கரனின் திருமணமாகும்.. எந்த கல்யாணத்துக்கு போகலாம்? எந்த கல்யாணத்துக்கு போவதால், தங்களுக்கு என்ன ஆதாயம்? திருமணத்துக்கு சென்றால், தங்களுடைய இமேஜ் எந்த அளவுக்கு உயரும்? இப்படியெல்லாம் இன்னமும் சினிமாவில் பார்க்கிறார்கள்.
காமெடி நடிகர்
அந்தவகையில் கிங்காங் மீது பரிதாபம்தான் வருகிறது. . சினிமாவில் எத்தனை பேர் மிதித்திருப்பார்கள்? எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பார்கள்? இதெல்லாம் கிங்காங்குக்கு தெரியாதா என்ன? ஒரு ஷூட்டிங்கில், ஒரு காமெடியன், கிங்காங்கை நிஜமாகவே அடித்துவிட்டார்.. காரணம்,
அந்த காமெடி நடிகரை தாண்டி, கிங்காங் சூப்பராக நடித்துவிட்டாராம்.. அந்த காமெடி நடிகர் அடித்து, கிங்காங்கின் கன்னம், கண் எல்லாம் வீங்கிப்போய்விட்டது.
"என்ன அண்ணே இப்படி அடிச்சிட்டீங்களே?" என்று அந்த காமெடி நடிகரிடம் கேட்டதற்கு, "தெரியாமல் அடிச்சிட்டேன் போடா" என்றாராம் அந்த நடிகர்.. ஆனால், அவர் உண்மையாகவே கிங்காங்கை அடித்தார் என்று, யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் தெரியும்.
100 சவரன் நகைகள்
ஹெலிகாப்டரில் சீர்வரிசை இறங்கியது, 3 கார்களை தன்னுடைய மகளுக்கு சீராக தந்துள்ளார், 100 சவரன் நகையை மகளுக்காக போட்டார், என்றெல்லாம் தேவையில்லாமல் வதந்திகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எம்ஜிஆர் நகரில் சாதாரண வீட்டில் இருப்பவர் மீது இவ்வளவு வதந்திகளா?
மகுடம் வைத்தாற்போல் நச்னு 2 விஷயம் நடந்தது.. முதல்வர் ஸ்டாலின், இந்த திருமணத்துக்கு வந்திருந்ததை கண்டதுமே, ஒட்டுமொத்த பேரும் வாயடைத்து போய்விட்டார்கள்.. அதிமுக பேச்சாளரான கிங்காங் வீட்டு திருமணத்துக்கு முதல்வர் வராமல்கூட தவிர்த்து, வேறு எந்த அமைச்சரையாவது தன் சார்பாக அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால், முதல்வர் அப்படி செய்யவில்லை. வாசலிலிருந்து ஸ்டாலினை கைப்பிடித்து அழைத்து சென்றார் கிங்காங்.
யாசகம் கேட்பவர் அல்ல
பணத்துக்காக அனைவருக்கும் கிங்காங் பத்திரிகை வைத்தார் என்கிறார்கள்.. பணம் கேட்கதான் கிங்காங் வருகிறார் என்றால், அந்த பிரபலங்கள் யாருமே பத்திரிகையை நேரில் வாங்கியிருக்க மாட்டார்கள். கிங்காங் அப்படி பணம் கேட்கக்கூடிய நபரும் கிடையாது..
எத்தனையோ பேர் தன்னை, பலகாலமாக கேலி பேசிய நிலையில், மூக்கு மேல் விரலை வைக்கும்படி மகளின் திருமணத்தை நடத்த வேண்டும், அதற்கு அனைவரும் வந்து மகளை வாழ்த்த வேண்டும் என்று நினைத்தாரே தவிர, யாரிடமும் யாசகம் கேட்பவர் அல்ல கிங்காங்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications