யாருப்பா 3 எழுத்து நடிகர்? விஜயகாந்தை செய்தது பத்தாதா? தொட்டால் அவருக்கே அது மைலேஜாக மாறும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், 3 எழுத்து நடிகை, 3 எழுத்து நடிகருக்கு தொடர்பு என்றெல்லாம் சொல்கிறார்கள்.. இப்படியெல்லாம் தகவல்கள் வருகிறதே தவிர, எதுவுமே உண்மையான, ஆதாரப்பூர்வமான தகவல் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். "3 எழுத்து நடிகருக்கும் தொடர்பு" என்ற செய்திகள் மீடியாவில் வலம் வருவது குறித்தும், தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் செய்யாறு பாலு.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, எந்த சேனல், பத்திரிகையை எடுத்தாலும், "போதைப்பொருள் வழக்கில் சிக்க போகும் அந்த நடிகர், இந்த நடிகை, பெரிய லிஸ்ட் இருக்கு" என்றுதான் செய்திகள் உள்ளன.. இதை பெரிதாக பேச வேண்டுமா? என்று நான்கூட நினைத்தேன்.

television 3 letter actor vijayakanth 3

ஆனால், குறிப்பிட்ட ஒரு நடிகர் மீது, மட்டுமே, சிலர் குறி வைக்கிறார்களோ? என தோன்றுகிறது.. போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடக்கிறது.. உற்பத்தி செய்தவர்கள், கடத்தி வந்தவர்கள், விற்றவர்கள் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அதை பயன்படுத்தியவர்களுக்குதான் தண்டனையா? என்று விவாதம் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.

3 எழுத்து நடிகை, நடிகர்

மற்றொருபக்கம், பெரிய பெரிய நடிகர்கள் இந்த விவகாரத்தில் உள்ளபோது, மார்க்கெட் இல்லாத 2 நடிகர்களை மட்டும் கொண்டுவந்து விசாரிக்கிறார்களே? என்ற விவாதமும் நடக்கிறது.

இதற்கு நடுவில், இந்த விவகாரத்தில், 3 எழுத்து நடிகை, 3 எழுத்து நடிகருக்கு தொடர்பு என்கிறார்கள்.. ஒரு நடிகை கணவருடன் சிக்கி கொண்டதால், ஒரு பெரிய தேசிய கட்சி அந்த நடிகையை அணுகி, உங்கள் கணவரை காப்பாற்றுவதனால், உடனடியாக எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று அழுத்தம் தந்ததாக கூறுகிறார்கள்.

மதுரை மாநாடு

மதுரையில் நடந்த முருகன் மாநாட்டை திசை திருப்புவதற்காகவே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளதாக சிலர் சொல்கிறார்கள்.. மேற்கண்ட தகவல்கள் எல்லாமே யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறதே தவிர, எதுவுமே உண்மையான, ஆதாரப்பூர்வமான தகவல் கிடையாது.

ஆனால், 3 எழுத்து நடிகர் என்றதும், விஜய்யை பெரும்பாலானோர் டார்கெட் செய்து, அவர் மீது ஒரு அவப்பெயரை உண்டாக்கி, அவரை ஒரு குடிகாரர் போல சித்தரிக்கும் முயற்சியில் நடந்து வருவதாக திரைத்துறையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஒரு புகார் வந்திருக்கா?

ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, தவெகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது என்பதால், விஜய்க்கு டேமேஜ் செய்வதற்காகவே, தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து வருகிறார்கள். விஜய் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது.. போதையால் வண்டி ஓட்டி சிக்கினார், எங்காவது கலாட்டா செய்தார், என்று ஒருமுறையாவது புகார் வந்திருக்கிறதா?

அரசியல்ரீதியான மனிதனை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, தனிமனித விஷயத்தில் தலையிடுவதும், அவதூறு பரப்புவதும் கூடாது.

விஜயகாந்த்துக்கு நடந்தது போல

விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல், மேடைகளில் தெளிவாக பேச முடியாமல் வாய் குளறியபோது, அவரை குடிகாரர் என்று கிண்டலடித்து சித்தரித்து, மீம்ஸ்களை உருவாக்கியதில், இந்த மீடியாவுக்கும் பங்கு உள்ளது.. அதுபோல திட்டமிட்ட தாக்குதலை விஜய் மீதும் தாக்க வேண்டும் என்று ஒரு குரூப் நினைக்கிறது.. அப்படி நடக்க வாய்ப்பேயில்லை ராஜா..

ஷூட்டிங் சம்பவம்

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.. ஒரு பட ஷூட்டிங்கில், ஹீரோயினுக்கு ரூம் தந்துவிட்டு, தனக்கு மட்டும் ரூம் புக் செய்து தரப்படவில்லை என்பதற்காக விஜய் கோபித்து கொண்டார். அத்துடன் ஷூட்டிங்கிலிருந்தும் காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார். இந்த விஷயம் தெரிந்த எஸ்ஏசி, விஜய்யின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

உன்னைவிட ஜூனியர் நடிகைக்கு ரூம் போட்டு தந்து, உனக்கு மரத்தடி தந்திருக்கிறார்கள் என்றால், அதைத்தாண்டி நீ வைராக்கியமாக உயரணும், இதை வெறியாக எடுத்து கொண்டு முன்னேறணும், தயாரிப்பாளர்களின் நிலைமை யோசித்து பார்த்தாயா? என்று சத்தம் போட்டார்.

அடுத்த நிமிடமே, முகத்தில் எந்த வருத்தத்தையும் காட்டிக் கொள்ளாமல், ஷூட்டிங்கில் பங்கேற்று காட்சிகளை நடித்து தந்தார். இந்த சின்ன சின்ன தனிமனித ஒழுக்கம்தான், தனிமனித ஒழுக்கத்தை விஜய் அரசியலில் கடைப்பிடித்து வருகிறார்.

உருவ கேலி

இப்படி விஜய் எங்கெல்லாம் துவண்டு போனாரோ, எங்கெல்லாம் உருவகேலி செய்யப்பட்டாரோ, எங்கெல்லாம் கிண்டல் செய்தார்களோ, அங்கெல்லாம் அரணாக நின்று, அவரை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி, பக்கபலமாக இருந்தவர் எஸ்ஏசி மட்டும்தான்.. டைரக்டர், தயாரிப்பாளர் பேச்சை கேட்டு மதிக்கணும் என்ற அவரது அறிவுரையை இன்றுவரை விஜய் மதிக்கிறார்..

தேவையில்லாமல் விஜய் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும், அதிலும் இந்த போதை விஷயத்தில் செய்ய வேண்டாம். அப்படி வீசினால், அது விஜய்க்கு அரசியலில் மற்றொரு மைலேஜ்ஜாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+