தாவணி கனவுகள்.. 3 எழுத்து நடிகைகள் 2 பேருமே சிக்குறாங்களா? அந்த பவுடரால் நடிகர் அழுதுட்டாரு: பிரபலம்
சென்னை: சினிமா தயாரிப்பாளர் பிரசாத், சங்ககிரி பிரதீப்குமார், நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.. அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது. இந்நிலையில், டாக்டர் காந்தராஜ் தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து மேலும் சில நடிகர்கள் சிக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.. 3 எழுத்து நடிகைகள் 2 பேர், 4 எழுத்து இசை அமைப்பாளர் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால் அதுகுறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குழு
இதனிடையே வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவலை தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.. மேலும், போதைப் பொருள் விற்பனை தொடர்பாக சில ரகசிய குறியீடு (கோட் வேர்ட்) வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களையும் போலீஸார் திரட்டி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், "போதைப்பொருள் என்பது காலம் காலமாக உள்ளது.. அதை ஒன்றுமே செய்ய முடியாது.. சினிமாவில் மட்டுமே போதைப்பொருள் நிலவுவதாக சொல்வதை ஏற்க முடியாது.. இதனால் சினிமாவுக்குதான் விளம்பரங்கள் தரப்படுகின்றன..
உதாரணத்துக்கு ஒரு கார்ப்பரேட் ஆபீஸ் மீட்டிங், 5 ஸ்டார் ஓட்டலில் நடக்கிறதென்றால், கண்டிப்பாக டின்னர் தரப்படும்.. அதில் வெல்கம் டிரிங்க் என்பது கட்டாயமாக இடம்பெறும்.. அங்குள்ள பெண்களே அதை தட்டில் வைத்து கொண்டு, கலக்கியும் தருவார்கள்.
போதைப்பொருள் - கொக்கைன்
ஆனால், கொகைன் என்பதை போதைப்பொருளாக எப்படி தடை செய்ய முடியும் என தெரியவில்லை.. கொகைன் என்பது ஒருவகையான மருந்து. மருத்துவ உலகில் கொகைன், மாஃபின் , பெத்தடின், இதெல்லாம் வலி நீக்கிகளாக, நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள்.. கொகைன் என்பது ஒருவகையான மருந்து..
இன்னும் சொல்லப்போனால் கொகைன் என்பது அழகுசாதன பொருளும்கூட.. ஐரோப்பிய பெண்கள், தங்களது கண்கள் அகலமாக விரிந்து அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த கொக்கைனை கண்களில் மை போல பூசிக் கொள்வார்கள்.. கஞ்சா மலர் என்பது பார்ப்பதற்கு ரோஜாவைவிட அழகாக இருக்குமாம்.,.
தாவணி கனவுகள்
எப்போதுமே ஒரு விஷயத்தில் நல்லதைவிட்டுவிட்டு, கெட்டதை மட்டுமே பார்த்து பழகிவிட்டோம். பாக்யராஜ் தாவணி கனவுகள் படத்தில், ரோஜா செடியில் முள் இருக்கேன்னு நினைக்காமல், அந்த முள் இருக்கிற செடியில் ரோஜா பூத்திருக்கிறதே என்று நினைக்கணும் என்று பாசிட்டிவ்வாக டயலாக் எழுதியிருப்பார்..
கஞ்சா, அபின் போன்ற தடை செய்யப்பட்ட போதைகளுடன் கொக்கைனும் சேர்க்கப்பட்டுள்ளதா தெரியவில்லை. மன அழுத்தம், சோகத்தை மறப்பதற்காக, போதைப்பொருளை எடுத்து கொள்ள நேரிடுகிறது. அந்தவகையில் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்கள் இப்படியான போதைக்கு விழுந்துவிடுகிறார்கள்.
சுசித்ரா பகீர் தகவல்
"நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லப்படும் டாப் நடிகர்களின் வீடுகளில் பார்ட்டிகள் நடக்கிறது, அவர்களது விடுகளில் கொகைன் பயன்படுத்தப்படுகிறது" என்று பாடகி சுசித்ரா குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், நானே பல நடிகர்களின் பார்ட்டிகளுக்கு சென்றுள்ளேன், அங்கு பெரும்பாலும் மதுபானமே பரிமாறப்படும்..
முக்கிய காரணம், இன்று சினிமா வீழ்ந்துவிட்டது, பலருக்கும் வாய்ப்பு இல்லை.. இப்போது கைதாகி உள்ளவர்கள் அனைவருமே 40 வயதை தொட்டவர்கள்.. இந்த வயதில்தான், இளமை தீர்ந்து, சமூகத்தில் அங்கீகாரம், மரியாதை தேடிவரக்கூடிய பருவமாகும்.. ஆனால், சினிமா வாய்ப்புகூட இல்லாததால், போதையை தேடி நிலைமையே தலைகீழாகிவிட்டது.. கோர்ட்டில் ஸ்ரீகாந்த் அழுதிருக்கிறார்..
3 எழுத்து நடிகர்
இப்போது 3 எழுத்து நடிகர் சிக்குவார் என்கிறார்கள்.. இதுலயே தெளிவு இல்லை.. ஏராளமான 3 எழுத்து நடிகர்கள் இருக்கிறார்கள்.. சில நடிகர்களை சுருக்கமாக 3 எழுத்திலும் கூப்பிடுகிறோம்.. இதுபோன்ற யூகங்களை பொருட்படுத்தக்கூடாது.. ஆனால், மிகப்பெரிய நடிகர்கள் இப்படி போதையில் சிக்கும்போது, அவர்களது ரசிகர்களும் இதே போன்ற போதை வழியை தேர்ந்தெடுக்க வழிசெய்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications