பச்சை குத்தப்பட்ட பெயர்.. 3 நபரை காதலித்த நடிகை.. கடப்பதே சிறந்தது.. திருப்பூரில் 200 சவரன் நகைக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தும்கூட, அதிலிருந்து வெளியே வந்து, படித்து இன்று கலெக்டராக உள்ளார்கள்.., டாக்டர்களாக உள்ளார்கள்.. பல பெண்கள் இன்று சமுதாயத்தில் உச்சத்தில் உள்ளார்கள். இவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொண்ட, ரிதன்யாவை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.

BBT Cinema என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "திருப்பூர் பெண் ரிதன்யாவுக்கு 300 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த 3 மாதத்துக்குள் தம்பதிக்குள் பலமுறை தகராறு வந்துள்ளது.. ஒவ்வொரு முறையும் ரிதன்யாவின் பெற்றோர் சமாதானம் செய்துள்ளார்கள்.

television top actress tiruppur

ஆனால், கடைசி முறை தம்பதிக்குள் சண்டை வந்தபோது, அதற்கு மேல் அந்த பெண்ணால் தாங்கி கொள்ள முடியாமல், காரை ஓட்டிச் சென்று தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்துவிட்டார்..

இன்றைய சூழலில் அனைத்தையுமே எதிர்கொள்ள பழகி கொள்ள வேண்டியிருக்கிறது.. நன்றாக படித்த பெண்ணாக உள்ளார். ஆனால் வெளிஉலகத்தை காட்டாமலேயே பெண்ணை வளர்த்து விட்டார்களோ என்று தெரிகிறது.

3 பேருடன் காதல்

ஒருகாலத்தில் நடிகைகள் காதல் தோல்வியால் தொடர்ந்து தற்கொலைகளை செய்து கொண்டனர். ஆனால், தற்போதுள்ள ஒரு உச்ச நடிகை 3 காதலை கடந்து வந்துள்ளார்.. அதில் ஒருவரது பெயரை, தன்னுடைய கையில் பச்சைக் குத்தியிருந்தார்.. அதையெல்லாம் கடந்துதான் இன்று நடிகை அந்த உச்சத்துக்கு வந்துள்ளார்..

எனவே, ஒரு விஷயத்தை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அந்த விஷயத்திலிருந்து வெளியே வர தெரிந்திருக்க வேண்டும். தைரியத்தை மட்டும் எப்போதுமே விட்டுவிடக்கூடாது. எவ்வளவு சிக்கல் வந்தாலும், அடுத்து என்ன? என்ற கேள்விக்கு நகர்ந்துவிட வேண்டும்.

ரிதன்யா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.. மாமியாரை மட்டும் சில காரணங்களுக்காக ஜாமீன் தந்துள்ளனர்.. சுயஜாதி பெருமை பேசுவது இன்னும் கிராமங்களில் உள்ளது.. அதிலும் பாதி பிரச்சனைக்கு காரணம் உறவினர்கள்தான்.. ஒரு குடும்பத்தில் சம்பந்தம் வைக்கும்போது, எத்தனை சவரன் நகைகளை போடுவதை கவுரவமாக பெண்ணின் குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.

நகைக்காக தற்கொலையா

கடைசி நேரத்தில் தன்னுடைய அப்பாவிடம் பேச நினைத்துள்ளார்.. அந்த பெண் இதை சாதுர்யமாக கையாண்டிருக்கலாம்.. ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இருந்தால் , தனித்துகூட வாழ்ந்திருக்கலாமே? அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்.. வெறும் நகைக்காக மட்டுமே இந்த பிரச்சனை நடந்தது போல தெரியவில்லை,., கணவனுக்கும், மனைவிக்கும் வேறு பிரச்னை இருந்திருக்கலாம். இதைத்தான் தற்போது போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..

தான் வாழாவெட்டியாக வீட்டில் வந்து உட்காருவதால், அது அப்பாவுக்கு அவமானம் என்றும் ரிதன்யா நினைத்திருக்கிறார்.. இதற்கு காரணம், உடைகள் நாகரீகமாக இருக்கிறதே தவிர உள்ளத்தில் நாகரீகம் ஏற்படவில்லை.. இன்னும் பலரும் பழமையை பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருக்கிறார்கள். மகளை அவரது அப்பா இன்னும்கூட தைரியமாக வளர்த்திருக்கலாம்.

தவறான முன்னுதாரணம்

வீட்டில் வந்து உட்கார்ந்து விட்டால், அப்பா அம்மா நம்மை பார்த்து பார்த்து ஏங்கி கவலைப்படுவார்கள், நமக்கும் வேறு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை என்பதற்காக இந்த முடிவை ரிதன்யா எடுத்துள்ளார்.. ஆனால், இதனை யாருமே முன்னுதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது,

எத்தனையோ பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தும்கூட, அதை உதறித்தள்ளி படித்து இன்று கலெக்டராக உள்ளார்கள்.., டாக்டர்களாக உள்ளார்கள்.. பல பெண்கள் இன்று சமுதாயத்தில் உச்சத்தில் உள்ளார்கள். இவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

வரதட்சணை கொடுமை சட்டம் கடுமையாகத்தான் இருக்கிறது.. ஆனால், மனிதாபிமானத்துடன் இதை அணுகி, சம்பந்தப்பட்டவர்கள்தான் திருந்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+