பணக்கார நெப்போலியன்.. 300 ஏக்கர் பண்ணை.. கோடிகளில் வாழ காரணம்? வில்லிவாக்கம் டூ அமெரிக்கா: பிரபலம்
சென்னை: திருச்சி குமரேசன் இன்று அமெரிக்க நெப்போலியனாக வாழ்ந்து கொண்டிருப்பதன் பின்னணி என்ன? நடிகர் நெப்போலியன் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி ? நெப்போலியனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது எப்படி? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை சமீபத்தில் தந்திருந்தார்.. அதில், நெப்போலியன் பற்றி பேசும்போது, "நெப்போலியனின் குழந்தை, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தையாகும்.. இதற்காக அமெரிக்காவில் வைத்தியம் செய்ய சென்றார்.. அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு, குழந்தை குணமாவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். எனவே, இப்போதுள்ள நிலம், வீடு, வாங்குவதற்கு முன்பேயே, குழந்தையுடன் மனைவியையும் அங்கே தங்க வைத்தார் நெப்போலியன்.

முழு நேர அரசியல்வாதி
பிறகு, தமிழகத்தில் சினிமா, அரசியல், அமெரிக்கா வாழ்வு என்று பிஸியானார். இப்படிப்பட்ட சூழலில், திரைப்படத்தை இரண்டாம் கட்டமாக தள்ளி, அரசியலுக்குள் சென்றார்.. வில்லிவாக்கம் எம்எல்ஏவாக மாறினார்..
ஒருகட்டத்தில் சினிமாவை மெல்ல குறைத்து கொண்டு, அரசியலுக்குள் தீவிரமாக இறங்கினார்.. தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது மதுரைக்கு செல்லும்போதெல்லாம் அழகிரியுடன் நெருக்கமானார். அழகிரியின் தீவிர ஆதரவாளருமானார்.
அழகிரியால்தான், முழு அரசியல்வாதியாக மாறி, மத்திய சமூகநலத்துறை அமைச்சராகவும் விளங்கினார். இதற்கு பிறகு உட்கட்சி பிரச்சனையால் அரசியலிலிருந்தே காணாமல் போனார் நெப்போலியன்.
கட்டுமான நிறுவனங்கள்
"ப்ரூ வேலிவியூ ஹோம்ஸ்" மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தை தாய்மாமா திருச்சி நேரு நடத்தினார்.. இந்த நிறுவனத்தின் ஒருபகுதியாக கட்டுமான நிறுவனங்களையும், பண்ணை வீடுகளையும் வாங்கி பல கோடி ரூபாய்க்கு அமெரிக்காவில் முதலீடு செய்தார் நேரு.. அமெரிக்காவில் 300 ஏக்கரில் பெரிய பண்ணை நிலம் வாங்கப்பட்டு, இதன் பாதுகாவலராகி, தன்னுடைய குழந்தையின் வைத்தியத்தையும் சேர்த்து கவனித்து கொண்டு வருகிறார் நெப்போலியன்.
இதற்கு நடுவில், பாஜக தரப்பில் நெப்போலியனை அணுகி, தங்களிடம் இணையுமாறும், மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி தந்துள்ளனர்.. பிறகு பாஜகவில் இணைந்தார் நெப்போலியன்.. ஆனால், பாஜகவில் நெப்போலியன் இணைந்ததை யாருமே விரும்பவில்லை.. காரணம் நேருவின் அப்பா, தீவிரமான காங்கிரஸ்காரர்.. அதனால்தான், மகனுக்கு நேரு என்றே பெயர் வைத்தார். பாஜகவில் நெப்போலியன் இணைந்தது வரலாற்று தவறு என்றனர்..
பாதுகாவலர்
இதையடுத்து, பாஜகவில் தீவிரமாக செயல்படாமல், அமெரிக்காவிலேயே வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார் நெப்போலியன். சினிமா வாய்ப்பு வந்தால் மட்டும் இங்கு வந்து நடித்துவிட்டு செல்கிறார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது சம்பாதித்த சொத்துக்கள் இங்கே இருந்தாலும், தாய்மாமாவின் பல கோடிக்கணக்கான வருமானம், முதலீட்டுக்கான பாதுகாவலராக அமெரிக்காவில் இருந்து வருகிறார் நெப்போலியன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
