3BHK Review: சரத்குமார், சித்தார்த் சொந்த வீடு கனவு நிறைவேறியதா? படம் ஒர்த்தா? இல்லையா? விமர்சனம் இதோ
சென்னை: இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி உட்பட பலர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் 3 பிஹெச்கே (3BHk) திரைப்படத்தின் twitter விமர்சனத்தை பார்க்கலாம். பலருடைய சொந்த வீடு கனவை மையப்படுத்தி இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3 பிஹெச்கே திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அம்பரீத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ், பி கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் கவனித்திருக்கின்றனர். படத் தொகுப்பாளராக வேலைகளை கணேஷ் சிவா பணியாற்றி இருக்கிறார். அதுபோல இந்த படத்தை பல ஹிட் திரைப்படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.

3BHK ரிவ்யூ
இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று போராடும் சென்னையில் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கதை தான் இந்த 3 பிஹெச்கே இந்த படத்தில் சரத்குமார் மனைவியாக தேவயானியும், மகனாக சித்தார்த்தும், மகளாக மீதா ரகுநாதன் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த வீடு கனவு நனவானதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
3BHk பட கதை
வாசுதேவனாக சரத்குமார் குடும்ப பாரத்தை தாங்கி நிற்கும் குடும்பஸ்தன் கேரக்டரில் அப்படியே பொருந்தி இருக்கிறார். சரத்குமார் மீண்டும் இந்த படத்தின் மூலம் மிடில் கிளாஸ் மக்களை கவர்ந்திருக்கிறார். இந்த படத்திலும் அவருடைய நடிப்பு பலருடைய பாராட்டுகளை பெறும் வகையில் இருக்கிறது. சரத்குமார் உடைய மனைவியாக தேவயானி படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கிறார். நடுத்தர வர்க்கத்து அம்மாவாகவே இந்த படத்தில் தேவயானி வாழ்ந்து இருக்கிறார்.
சித்தார்த் நடிப்பு
அதுபோல படிப்பு வராத கடைசி பெஞ்ச் மாணவனாக யங்க் பாய் லுக்கிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற கனவோடும் உழைக்கும் பிரபுவாக சித்தார்த் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சித்தா படத்தில் சித்தார்த்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் அதைத்தொடர்ந்து 3பிஎச்கே படமும் சித்தார்த்துக்கு இன்னொரு மணிமகுடமாக இருக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக சரத்குமார் கஷ்டப்படுகிறார்.

கிளைமேக்ஸ் காட்சி
பிறகு அவரை தொடர்ந்து அவருடைய மகனும் கஷ்டப்படுகிறார். கடைசியில் ஒரு வழியாக வீடு வாங்கலாம் என்று இருக்கும் நிலையத்தில் அப்பா சரத்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதனால் காசெல்லாம் செலவாகும் இடத்தில் படத்தை பார்க்கும் அனைவரையுமே கண்கலங்க வைத்து விடுகிறது. கடைசியாக குடும்பத்தினர் ஆசைப்பட்ட மாதிரி வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதுதான் கிளைமாக்ஸ். பாசிட்டிவான கதையோடு இந்த திரைப்படம் பலருடைய வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. "சொந்த வீடு சொர்க்கம்" என்று இந்த படம் அனைவரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications