விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்? உங்களுக்குப் பிடித்த "அந்த” சீரியலும் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் புதிய புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் திடீரென்று இப்போது மூன்று சீரியல்கள் மொத்தமாக முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சீரியல்கள் முடிவுக்கு வருவது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல், தமிழும் சரஸ்வதியும் சீரியல், ஈரமான ரோஜாவே சீரியல், காற்றுக்கென்ன வேலி என நான்கும் முடிவுக்கு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சேனல்களுக்குள் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையிலேயே எந்த சேனல் முன்னணி இடத்தில் இருக்கிறது என்று தீர்மானிக்கப்படுகிறது. அதற்காகவே பல ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களையும் போட்டி போட்டு பல சேனல்கள் ஒளிபரப்பாக்கி வருகின்றனர். முன்னணியில் இருக்கும் பல நடிகர்களையும் தங்களுடைய சீரியல்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.

ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேலே சீரியல் முடிவுக்கு வர வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் அடுத்தடுத்ததாக மூன்று முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே, தமிழும் சரஸ்வதியும், காற்றுக்கென்ன வேலி சீரியல் அடங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் ஏன் இந்த சீரியலில் முடிவு நோக்கி கதை வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இருந்த நிலையில் தற்போது தனத்தின் புற்றுநோய் பிரச்சனை வந்ததிலிருந்து அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை பற்றி நெகட்டிவ்வாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது தனத்திற்கு அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் தனம் ஆசைப்பட்ட மாதிரியே அவருடைய புது வீட்டிற்கு குடும்பத்தோடு போகப் போகிறார்கள். அத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் மீது தவறு இல்லை என்று கோதைக்கு தெரிந்து விட்டது. இதை ராகினிக்கு புரிய வைத்து விட்டால் இந்த சீரியலின் கதையும் முடிவுக்கு வந்துவிடும். அதற்கான இறுதி கட்ட விறுவிறுப்பான எபிசோடுகள் வேகமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதைத்தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் காவியாவின் குழந்தை அபார்சன் ஆகிவிட்டது தெரியாமல் பார்த்தி குழந்தை குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பில் ஆசையோடு காத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் காவியா குழந்தை அபார்சன் ஆகவிட்ட விஷயத்தை அனைவரும் முன்னிலையிலும் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலும் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதுபோல காற்று கனம் வேலி சீரியலிலும் சூர்யா மற்றும் வெண்ணிலாவிற்கு தனித்தனியாக வேறொரு நபர்களோடு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக மீண்டும் வெண்ணிலா மற்றும் சூர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டதும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த சீரியல்கள் தொடர்ச்சியாக முடிவுக்கு வருவதற்கு காரணம் புது சீரியல்களில் வருகையா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கபட இருப்பதன் காரணமா? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications