ரூ.42 லட்சம் பிரபல நடிகைக்கு கிஃப்ட்.. வாய்க்கு வந்ததை பேசுறதா? ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா: பிஸ்மி
சென்னை: "ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது, 40 நடிகைகள் வந்திருக்கிறார்கள்.. இவர்களுக்கு லூயிஸ் விட்டான் பேக் கொடுத்துள்ளனர். ஒரு பேக் விலை ரூ.42 லட்சம் என்றும், இதை ஏற்பாடு செய்தது டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் என்றும் பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன.. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஜூஜூ இவர்களை பற்றி வரும் அத்தனை செய்திகளும் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் பிஸ்பி கருத்து தெரிவித்துள்ளார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிஸ்மி, "ஒரு பார்ட்டியில் பங்கேற்க நடிகை 35 லட்சம் வாங்கியதாகவும், அதேபோல 40 நடிகைகளை வைத்து ஒரு பார்ட்டி நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.. இவைகளை எல்லாம் செய்திகள் என்று சொல்வதைவிட, வதந்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த 40 நடிகைகளும் யார் யார் என்று லிஸ்ட் எடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனென்றால், இங்கே ஏற்கனவே நடிகைகளுக்கு பஞ்சம் உள்ளது. வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக சமூக ஊடக சேனல்களில் இப்படியான செய்திகள் பகிரப்படுகின்றன.
ஒரு பேக் விலை ரூ.42 லட்சம்
அதேபோல டான் பிக்சர்ஸ் நிறுவனமானது, திமுக மேலிடத்துக்கு தொடர்பானவர்கள் என்பதால், திமுகவுக்கு பிடிக்காதவர்களும் இதே விஷயத்தில், இஷ்டப்படி கதை கட்டி விடுகிறார்கள். பார்ட்டிக்கு வந்த 40 நடிகைகளுக்கும் ஹேண்ட் பேக் பரிசாக தரப்பட்டதாகவும், அந்த பேக் விலை ரூ.42 லட்சம் என்றும் மற்றொரு வதந்தி பரவுகிறது.. உண்மையை சொல்லப்போனால், அந்த பிராண்ட் பேக்-கின் விலை 40, 50 ஆயிரம் இருக்கலாம்.
குறிப்பிட்ட நடிகைக்கு 35 லட்சம் என்று சொல்வதையும் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அந்த நடிகை நடிக்கிறார் என்பதற்காகவே, அவதூறுகளை பரப்ப கூடாது.
3 படங்களுக்கும் சிக்கல்
இதயம் முரளி, பராசக்தி, இரண்டு படமும் நிறுத்தப்படும் என்றும், இட்லி கடை படம் மட்டும் ரிலீஸாகும் என்றும் சொல்கிறார்கள்.. ஆனால் கிட்டத்தட்ட 3 படங்களுக்குமே ஒரே நிலைமைதான்.. 3 படங்களுமே டான் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகும். எனவே, டாஸ்மாக்கில் முறைகேடாக சம்பாதித்ததை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்று அமலாக்கத்துறை சொல்கிறது
ஒருவேளை, இதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், இந்த படங்களை முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.. ரஜினி, கமல் என யாராக இருந்தாலும், ஒரு தயாரிப்பாளர் வருகிறார் என்றால், அவரது பின்னணி குறித்து இவர்கள் எந்த காலத்திலும் விசாரிப்பதே கிடையாது. தாங்கள் கேட்கும் பணத்தை, அல்லது அதற்கு அதிகமான பணத்தை தந்தால், உடனே கால்ஷீட் தந்துவிடுகிறார்கள்.
நல்ல மனிதர் - பந்தா கிடையாது
அதுபோலவே ஆகாஷ் பாஸ்கரன் என்ற நபர் டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் வந்தால் அவருக்கும் தேதிகளை தந்துள்ளார்கள்.. ஆகாஷ் பாஸ்கரனை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். அவர் நல்ல இளைஞர், மென்மையான மனிதர்.. சினிமாக்காரர்கள் போல பாசாங்கு, பந்தா காட்ட மாட்டார்.. இவ்வளவு வசதிகள் கொண்டவரா? என்பது அவரது பேச்சில் தெரியவே தெரியாது. இப்போது அவரை பற்றின வரக்கூடிய தகவல்களை பார்த்தால் ஆச்சரியமாகவும், மிகைப்படுத்தக்கூடிய தகவலாகவும் எனக்கு தெரிகிறது.
அதேபோல விக்ரம் ஜூஜு என்பவரையும் எனக்கு தெரியும். தற்போது மீடியாவில் வரும் செய்திகளை போல அவர் கிடையாது.. எல்லாமே கட்டுக்கதைகள்தான்.. பரபரப்பான சம்பவம் நடக்கும்போது, தங்களை வளப்படுத்தி கொள்ள ஊடகங்கள் இப்படியெல்லாம் எழுதுகின்றன.. உண்மை ஒருநாள் வெளியே வரும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications