Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரைந்த 500 ஏக்கர் நிலம்.. சிவக்குமார் போட்டுடைச்சிட்டாரு.. வாடகை வீட்டில் நடிகர் சத்யன்? இது நியாயமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சத்யன் இன்று சொத்துக்கள் இல்லாமல், வாடகை வீட்டில் வசித்து வரும் நிலைமை வந்துள்ளது.. இதுக்கு காரணம், மாதம்பட்டி சிவக்குமார், சினிமாவுக்குள் நுழைந்து தயாரிப்பாளரா மாறியதுதான்.. நிறைய படங்களை அன்று தயாரித்ததுதான்.. காணி நிலம்கூட இல்லாமல், சொந்த மக்களை சந்திக்காமல், சொந்த ஊர் செல்ல முடியாமல் உள்ளார் சத்யன்" என்றெல்லாம் செய்திகள் பரவின.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சத்யன் தன்னுடைய சொத்துக்களை இழந்து வாடகை வீட்டில் இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள்.. ஜமீன் 500 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழந்தது உண்மைதான்.. ஆனால், வீடு வசதிகளை இழந்துவிட்டார் என்பது உண்மையல்ல.

Television actor Sivakumar sathyan

80 ஏக்கரில் பங்களா

80 ஏக்கரில் அவர்களது பங்களா இருந்ததாகவும், சினிமா படம் ஆசையால் அனைத்து சொத்துக்களையும் சத்யனின் அப்பா மாதம்பட்டி சிவக்குமார்.. நடிகர் சத்யராஜும் இவர்களது உறவினர்தான்..

சினிமா ஒருசில மட்டும்தான் உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது.. படம் எடுக்க வந்த பல தயாரிப்பாளர்களை மண்ணை கவ்வ விட்டுள்ளது.. சத்யன் ஒன்றும் ரோட்டில் இல்லை என்று நடிகர் சிவக்குமாரும் கூறியிருந்தார்..

கேரக்டர் முக்கியம்

ஆனாலும், இனிமேலும் சத்யன் நிறைய படங்கள் நடிக்கலாம்.. அதன்மூலம் சொத்துக்களையும் மீட்கலாம்.. எப்போதும் நம்முடைய கேரக்டர் மட்டும் கீழே விழுந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. பணத்தை கூட சம்பாதித்துவிடலாம். ஆனால், கேரக்டர் ரொம்ப முக்கியம்.. அப்படியொரு மோசமான முத்திரை ஒருமுறை குத்தப்பட்டுவிட்டால், அதற்குபிறகு அதிலிருந்து மீளவே முடியாது..

இதில், சத்யனை பொறுத்தவரை நெகட்டிவ்வான பார்வை எதுவுமே அவர்மீது கிடையாது.. ஆர்வகோளாறு காரணமாக கேரக்டர்களில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துவிட்டார்.. இனியாவது படங்களில் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

நண்பன் படத்தில், சத்யனுக்கு முக்கியமான கேரக்டர் என்றாலும், கிட்டத்தட்ட அது நெகட்டிவ் கேரக்டர் போலத்தான்.. அதனால்தான்கூட சத்யனுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கலாம்..

நடிகை கவுசல்யா

சத்யன் ஹீரோவாக நடித்த இனியவளே படத்தில் கவுசல்யா ஜோடியாக நடித்திருந்தார்.. சத்யனுடன் நடித்ததால்தான், கவுசல்யாவின் சினிமா கேரியரே கீழே இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. இல்லேன்னா மட்டும் கவுசல்யா டாப்பில் போயிருப்பாரா? அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது..

சத்யனை குறை சொல்பவர்கள் மட்டும் ஒழுங்கா? முதலில் அழகு என்பதை அளவிடுவது யார்? கதாநாயகனுக்குரிய அளவுகோல்கள் என்னென்ன? ஒன்னுமேயில்லாதவர்கள் பெரிய ஸ்டாராகி இருக்கிறார்களே? சத்யனுக்கு என்ன குறை? இதுவே இனியவளே படம் ஹிட்டாயிருந்தால் இப்படியெல்லாம் அவரை பேசுவார்களா?

நடிகர் ராதாரவி - பிசாசு

நடிக்க வரும்போதே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து பலரும் வந்துவிடுகிறார்கள்.. அது நடக்காத பட்சத்தில் அந்த தோல்வியை அவர்களால் ஏற்க முடிவதில்லை.. எந்த கேரக்டர் தந்தாலும், அதில் நடித்து பெயர் வாங்குபவன்தான் கலைஞன்.. பிரகாஷ்ராஜ் அப்படித்தானே வந்தார்? அவரென்ன ஹீரோவாக வேண்டும் என்று நினைத்து வந்தாரா? இன்றுவரை பிஸியாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ்..

ராதாரவி பிசாசு படத்தில் அப்பாவாக நடித்திருப்பார். அந்த காலத்திலிருந்து ரங்காராவ் முதல் எத்தனையோ பேர் அப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.. ஆனால், மனதை பாதிக்கக்கூடிய அளவுக்கு நடித்திருந்தார் ராதாரவி..

பிரகாசமான வாழ்க்கை

எனவே சினிமா வாய்ப்புகள் கிடைக்கும்போது, உடனே அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும், இதனால் அவர்கள் பிரகாசமான வாழ்வையும் பெறுவார்கள்.. சத்யனும் அதுபோலத்தான் வெற்றி பெறுவார்,. ஆனால், அதற்குள், சத்யன் நடுரோட்டில் நிற்கிறார், பிச்சை எடுக்கிறார், வாடகை வீட்டில் இருக்கிறார், என்றெல்லாம் கதைகளை கட்டி விடுகிறார்கள்..

கடனை எல்லாம் அடைத்து சத்யன் இப்போது நிம்மதியாகவும் இருக்கலாம்.. அதெல்லாம் தெரியாமல் , ஜமீன் ரோட்டுக்கு வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.. ஆனால், சரியான நேரத்தில் சிவக்குமார் உரிய பதிலை சொல்லி, வதந்தி பரப்புவோரின் வாயை அடைத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+