Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரைந்த 500 ஏக்கர் நிலம்.. அன்று நடிகை கவுசல்யாவின் நிலைமை? இன்று வாடகை வீட்டுல ஜமீன் சத்யன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா தயாரிப்பு என்பது மிகமிக சிரமமான விஷயம்.. ஆரம்பத்தில் சர்க்கரை போல இனிக்கும் என்றாலும் போகப்போக, சர்க்கரை நோயாளி, சர்க்கரையை சாப்பிட முடியாத நிலைமை போல ஏற்பட்டுவிடும். சினிமா வேண்டாத பொருளாகிவிடும்.. அப்படியிருக்கும்போது, யாருமே கை கொடுத்து உதவ மாட்டார்கள்.. இதுபோன்ற சூழ்நிலையில்தான், மாதம்பட்டி சிவக்குமாரும் சிக்கிவிட்டார்.. 2 படங்களில் தன்னுடைய சொத்துக்களை இழந்துவிட்டார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அன்று பிரபல தயாரிப்பாளராக இருந்தவர்தான் நடிகர் சத்யனின் அப்பா, மாதம்பட்டி சிவக்குமார்.. இவர் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்.. கிட்டத்தட்ட 500 ஏக்கர் சொத்து உள்ளவர்கள்.. 5 ஏக்கராவில் அவரது அரண்மனை இருந்தது..

Television actress kausalya actor sathyan

மாதம்பட்டி சிவக்குமாரின் அப்பாவை, அந்த ஊர்க்காரர்கள் எல்லாருமே முதலாளி என்றுதான் கூப்பிடுவார்கள்.. மாதம்பட்டி சிவக்குமாரை, "ராஜா" என்றே கூப்பிடுவார்கள்.. சத்யன் நடந்து வந்தாலும், "சின்ன ராஜா" வர்றார் என்றே சொல்வார்கள்.. இப்படி பரம்பரை பரம்பரையாக மரியாதையுடன், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள்..

வாடகை வீட்டில் சத்யன்

அப்படி வாழ்ந்த சத்யன் இன்று எந்த சொத்துமே இல்லாமல், வாடகை வீட்டில் வசித்து வரும் நிலைமை வந்துள்ளது.. இதுக்கு காரணம், மாதம்பட்டி சிவக்குமார், சினிமாவுக்குள் நுழைந்து தயாரிப்பாளரா மாறியதுதான்.. நிறைய படங்களை அன்று தயாரித்துள்ளார்..

பொதுவாக சினிமாவில், வெற்றிகள் பல கிடைத்தாலும், ஒருகட்டத்தில் சரிவை நோக்கி செல்லும்போது, சுதாரித்து கொண்டு, சினிமாவை விட்டு விலகிவிடுகிறார்களோ, அவர்கள் தப்பித்து கொள்வார்கள்.. இதற்கு சிறந்த உதாரணம் ஏவிஎம் நிறுவனத்தை சொல்லலாம். காலம் காலமாக அவர்கள் படங்களை எடுத்தாலும், இனியும் படங்களை எடுக்கக்கூடிய வசதி இருந்தாலும், சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்கள்.

நடிகை கவுசல்யா

ஆனால், மாதம்பட்டி சிவக்குமார் சுதாரிக்கவில்லை.. அதேபோல சத்யனுக்கும் சினிமா ஆசை விடவேயிலலை. அப்பாவிடம் சொல்லி இளையவன் என்ற படத்தை தயாரிக்க சொன்னார் சத்யன்.. நடிகை கவுசல்யாவுடன் சேர்ந்து அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.. அப்போது கவுசல்யா விஜய்யுடன் நடித்து உச்சத்தில் இருந்தார்..

சத்யனுக்கு கவுசல்யா ஹீரோயினா? கவுசல்யாவுக்கு இந்த நிலமையா? என்று பலரும் அப்போது டிரோல் செய்தார்கள்.. மிகப்பெரிய தோல்வியை அப்படம் சந்தித்து, பணத்தை இழந்தனர்.

அடுத்து, கண்ணா உன்னை தேடுகிறேன் என்று மற்றொரு படத்தில் ஹீரோவாக நடித்தார்.. அதுவும் பெரிய தோல்வி, பெரிய நஷ்டம் அடைந்தது.. இப்படி 2 சொந்த படங்களை எடுத்து, மாதம்பட்டி ஜமீனை இழந்துவிட்டார்கள்.. அதாவது 500 ஏக்கரா நிலத்தில் இப்போது, காணி நிலம்கூட சத்யனுக்கு இல்லை.. செங்கல் நிரலம்கூட, சத்யனுக்கு இல்லை என்று அந்த ஊர் மக்களே வேதனையுடன் சொல்கிறார்கள். இதனால் மாதம்பட்டி என்ற ஊருக்கே சத்யனால் செல்ல முடியவில்லை.

நெருங்கிய உறவினர்கள்

நடிகர் சிவக்குமார், சத்யராஜ் போன்றோருக்கு நெருங்கிய உறவினராக மாதம்பட்டி சிவக்குமார்.. மாதம்பட்டி சிவக்குமாரின் அத்தை மகன்தான் சத்யராஜ்.. அதேபோல சத்யராஜுக்கு, நடிகர் சிவக்குமார் உறவினர் ஆவார்..

சத்யராஜ் சினிமாவுக்கு வரணும் என்று ஆசைப்படும்போது, அவரை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி பணம் காசு தநதவர் மாதம்படி சிவக்குமார்தான்.

சிவக்குமார், சத்யராஜ்

நடிகர் சிவக்குமாரும், சத்யராஜூக்கு நிறைய உதவிகளை ஆரம்பத்தில் செய்தார்.. தான் நடிக்கும் படக்ள்ல சிறு சிறு கேரக்டரக்ளை சத்யராஜூக்கு வாங்கி தந்தார் நடிகர் சிவக்குமார். இன்று சத்யராஜ், சிவக்குமார் இருவருமே மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்து, குடும்பமே இன்று வளர்ந்து ஆலமரம்போல் நிற்கிறது.

எனவே, தயாரிப்பு என்பது மிகமிக சிரமமான விஷயம்.. ஆரம்பத்தில் சர்க்கரை போல இனிக்கும் என்றாலும் போகப்போக, சர்க்கரை நோயாளி, சர்க்கரையை சாப்பிட முடியாத நிலைமை போல ஏற்பட்டுவிடும். சினிமா வேண்டாத பொருளாகிவிடும்.. அப்படியிருக்கும்போது, யாருமே கை கொடுத்து உதவ மாட்டார்கள்.. இதுபோன்ற சூழ்நிலையில்தான், மாதம்பட்டி சிவக்குமாரும் சிக்கிவிட்டார்.. 2 படங்களில் தன்னுடைய சொத்துக்களை இழந்துவிட்டார்.

பட வாய்ப்புகளை இழந்த சத்யன்

ஊர் மக்களுக்கு சத்யனின் அப்பா எத்தனையோ உதவிகளை செய்துள்ளார்.. அப்படியிருக்கும்போது, காணி நிலம்கூட இல்லாமல், அம்மக்களை எப்படி சந்திப்பது? என்ற சங்கடத்தில்தான் சத்யனால் சொந்த ஊர் செல்ல முடியவில்லை..

சினிமா வாய்ப்பிலும் 10 லட்சம் என்றால், 40 லட்சம் சம்பளம் கேட்கும்போது, தயாரிப்பாளர்கள் யாரும் சத்யன் பக்கம் செல்ல யோசித்தார்கள்.. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் அவர் இழந்துவிட்டார்.. இன்று காமெடிக்கு பஞ்சம் உள்ளது.. அன்று தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தால், இன்று முன்னணியில் இருந்திருப்பார் சத்யன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+