• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுசுங்க ரெண்டும்... பெருசுங்களுக்கு.. எவண்டா இந்த வேலையை பார்த்தது!

|

சென்னை: விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில் தன் பெத்தவங்களுக்கு சின்ன தம்பி இன்னும் 60ம் கல்யாணம் நடத்தி முடிக்கலை. கையில் பணம் இல்லாமல் எவ்ளோ சோதனைகளை தாங்கி, ரிஷப்ஷன் இப்போதான் முடிஞ்சு இருக்கு.

காலையில கல்யாணம், முதல் நாளே சின்னத்தம்பி சமையல், நாதஸ்வரம் போன்ற இத்தியாதிகளுக்கு வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை குடுப்பத்துல சதிகாரங்க இருப்பாங்களே அவங்க திருடிக்கறாங்க.

இந்த நிலையில பணத்துக்காக குஸ்தி போட்டிக்கு போற சின்னத்தம்பி போட்டியில் ஜெயித்து 5 லட்ச ரூபாய் அள்ளினாலும், தன்னிடம் தோத்தவரின் அம்மாவின் உயிர்காக்கும் மருத்துவ செலவுக்கு கொடுத்துடறான்.

கைமேல் கைவைத்து... கண்ணோடு கண்பார்த்து... எவ்ளோ மகிழ்ச்சி... எல்லாம் போச்சா?
நிறுத்த

நிறுத்த

சின்னத்தம்பியின் பெற்றோர் கல்யாணத்தை நிறுத்த குடும்பத்தில் இயக்கும் மூன்று பெண்கள் சேர்ந்து, சின்னத்தம்பி தலைமறைவாயிட்டான். அதனால் உங்களுக்கு பணம் கிடைக்காது.இன்னும் வேலை செய்தாலும், உங்களுக்கு பணம் பட்டை நாமம்தான்னு சொல்லி கொடுக்கறாங்க.

அச்சத்தில்

அச்சத்தில்

ஐயர் முதல் அனைவரும் பணம் கிடைக்காதுன்னு அச்சத்தில் இருக்காங்க. எல்லாரும் சின்னத்தம்பியின் மனைவி நந்தினியை நோக்கி சண்டை போட வர, இந்த விஷயம் மாமியார் மாமனாருக்கு தெரியவே கூடாது என்று தனது நாத்தனாரிடம் உத்தரவு போட்டுட்டு, அவர்களிடம் பேச போகிறாள்.

ஐடியா வருமோ

ஐடியா வருமோ

நந்தினியின் நாத்தனார் மலர், வெளியில பெரிய சண்டை நடக்கும் போலிருக்கே.. இப்போ பெரிம்மாவுக்கும், பெரிப்பாவுக்கும் இதை தெரியாம மறைக்க சொல்றாங்க அண்ணி. எப்படி முடியும்னு யோசிக்கறா. திடீர்னு காதலன் ஆராவுக்கு போன் பண்றா.

1008 விநாயகர் துதி

1008 விநாயகர் துதி

ஆரா பெரிப்பா கூட நீதானே இருக்கேன்னு கேட்கறா... ஆமா சொல்லுடீன்னு சொல்றான் ஆரா.இதப்பாரு நான் சொல்றதை கவனமா கேளு. எல்லாரையும் வெளியில அனுப்பிட்டு, உன் செல்போன்ல இருக்க பக்தி மந்த்ரம் எதையாவது போட்டு, பெரிப்பாவோட காதுல ஹெட்செட்ல கேக்க சொல்லு.

தம்பதி

தம்பதி

60ம் கல்யாணம் செய்துக்கப்போற தம்பதி இந்த மந்திரத்தை கேட்கணுமாம்னு சொல்லு. நானும் இங்க பெரிம்மாவுக்கு அப்படியே சொல்லி காதுல ஹெட்செட் போட்டு விடறேன். வெளியில நடக்கறது எதுவும் இவங்களுக்கு கேட்காது. அதுக்குள்ளே நந்தினி அண்ணி நிலைமையை சமாளிச்சுருவாங்கன்னு சொல்றா

வெளியில் சண்டை

வெளியில் சண்டை

இவ்ளோ கஷ்டப்பட்டு சின்னத்தம்பி கல்யாணம் நடத்தறது அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்தி, பெருமைப்படுத்தத்தானே... அது கெட்டுவிடக் கூடாது. அவர்கள் திருமணம் முடிந்து என்ன வேணும்னாலும் தெரிஞ்சுக்கட்டும்னு சிறுசுங்க பண்ணின இந்த ஐடியா சின்னத்தம்பி சீரியலின் ஹைலைட்டாக இருந்தது, பாராட்டலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Iyer is afraid that everyone will get money. Everyone is going to come to fight Ninnini's wife chinnathambai, this thing is not to be known to the mother-in-law and to tell her that she is going to talk to them.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more