Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லித்தனமா பேசிட்டு.. 78 வயசில கங்கை அமரன் அதை சொல்லலாமா? பாவம் அந்த சிவப்பு சட்டைக்காரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது நாகரீகம், பொது மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொள்ளும் பிரபலங்களை, விழாவுக்கு கூப்பிடுவதையே தவிர்க்க வேண்டும்.. விழாக்கள் கூப்பிட்டு முக்கியஸ்தர்களாக இவர்களை நிற்க வைப்பதால்தான், இதுபோல செய்கிறார்.. யாராக இருந்தாலும் இதை கண்டிக்க வேண்டும்" என்று கங்கை அமரன் விவகாரத்தில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு காட்டமாக கூறியிருக்கிறார்.

மறைந்த பாடலாசிரியர் வாலிக்காக நடத்தப்பட விழாவில் கங்கை அமரன் கலந்து கொண்டார். இந்த விழாவை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேச வந்தார்.

Gangai Amaran Red Shirt

அப்போது அவருக்கு பின்னால் சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை திரும்பி பார்த்த கங்கை அமரன், "வாங்க, நீங்களே பேசுங்க" என கூறினார்.

சிவப்பு சட்டைக்காரர்

அந்த சிவப்பு சட்டைக்கார் "வேண்டாம்" என்று தயங்கினார். ஒருவேளை தன்னை நிஜமாகவே கங்கை அமரன் பேச சொல்கிறார் போலும் என்று நினைத்து பேச ஆரம்பித்தார்.

உடனே கங்கை அமரனும் கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்டார். அதை பார்த்த அந்த சிவப்பு சட்டைக்காரர், கங்கை அமரனை நிறுத்தி, "நான் ஓரமாக நின்று கொள்கிறேன், நீங்கள் பேசுங்க" என்றார்.

அப்போது கங்கை அமரன், "யாராவது பேசினால் இப்படித்தான் பின்னால் நின்று எட்டி எட்டி பார்க்கிறதா? இந்த பழக்கத்தையெல்லாம் மாத்திக்கணும்" என்றார்.

இதனால் அந்த நபர் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி, பிறகு பின்னால் நகர்ந்து, அங்கிருந்து கிளம்பி போய்விட்டார். பல மீடியாக்கள் முன்னிலையில் கங்கை அமரன் இப்படி பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.

கங்கை அமரன் ஆணவம்

இதுகுறித்து AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "கங்கை அமரன் பாட்டு எழுதினார், இசையமைத்தார், டைரக்ட் செய்தார்.. அவ்வளவுதானே? பெரிய சாதனை செய்துவிட்டாரா? கரகாட்டக்காரன் படத்தை டைரக்ட் செய்துட்டால் பெரிய ஆளா?

இன்னைக்கு 12 வயசு பையன்கூட லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து டைரக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டான்.. இன்று இளைஞர்கள் அசால்ட்டா டைரக்ட் செய்துவிட்டு, 200 கோடி, 300 கோடி அடித்துவிட்டு போகிறார்கள்..

கங்கை அமரனை விஐபியாக கூப்பிட்டதே தப்பு.. அங்கு வந்து பின்னாடி அப்பிராணியாக நின்றுகொண்டிருந்த சிவப்பு சட்டைக்காரரை கூப்பிட்டு முன்னால் நிறுத்தி நீ பேசு நீ பேசு என்று சொல்லிவிட்டு போகிறார்.. கங்கை அமரன் நக்கல் செய்கிறார் என்றுகூட தெரியாமல் சிவப்பு சட்டைக்காரரும் பேச ஆரம்பிக்கிறார்..

பிறகுதான் கங்கை அமரனிடம் சாரி சார், சாரி சார் என்று மன்னிப்பு கேட்கிறார்.. சிவப்பு சட்டைக்காரர் எதுக்கு கங்கை அமரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

78 வயதில் ஏன் இந்த கோபம்

பின்னாடி நின்று கொண்டிருந்த சிவப்பு சட்டைக்காரர், கங்கை அமரனை முறைத்து பார்த்தாராம்? பின்னாடி நின்றிருந்தவர் உற்று உற்று பார்த்தது, முன்னாடி நின்றிருந்த கங்கை அமரனுக்கு எப்படி தெரியும்? 78 வயதில் கங்கை அமரன் ஏன் இப்படி பேசுகிறார்?

தான் ஒரு பிரபலம் என்பதற்காக, பிறரை அவமானப்படுத்தி பேசுவது தவறு..
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, கங்கை அமரன் செய்தது தவறு என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை எளிதாக அவமானப்படுத்திவிடுகிறார்கள்.. ஆனல், அவமானப்படுத்தப்படும் அந்த நபர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இருக்க மாட்டார்களா? இவர்களை எல்லாம் எப்படி அந்த நபர் எதிர்நோக்குவார்? என்பதை யோசிப்பதேயில்லை.

சுயமரியாதை - அவமானப்படுத்தலாமா

சக மனிதரை அவமானப்படுத்தும் உரிமையை கங்கை அமரனுக்கு யார் தந்தது? பின்னால் மேடையில் நின்று கொண்டிருந்த நபர், கங்கை அமரனை தள்ளிவிட்டாரா? இடையில் வந்து ஏதாவது பேசினாரா? எந்தவகையிலாவது கங்கை அமரனை தொந்தரவு செய்தாரா?

இப்படி எதுவுமே நடக்காத நிலையில், பின்னாடி வெள்ளந்தியாய் நின்று கொண்டிருந்த மனிதரின் சுயமரியாதையை சீண்டுவதற்கு கங்கை அமரனுக்கு என்ன உரிமை உள்ளது?
முக்கியமான நபர் என்பதால் விழாவுக்கு அழைத்தால், சல்லித்தனமாக நடந்தால் எப்படி?

சல்லித்தனம் - பொது நாகரீகம்

பணம், புகழ், காசு எல்லாம் இருக்கலாம்.. ஆனால், அனைவரை போலவும் தாமும் ஒரு மனிதர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.. இதுவே அந்த நபர் கேவலப்படுத்தியிருந்தால், கங்கை அமரனை அவரை சும்மா விட்டிருப்பாரா? அப்போதுகூட அந்த சிவப்பு சட்டைக்காரர் "சாரி சார்" என்கிறார்.. இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் கங்கை அமரனிடமே தட்டி கேட்டிருக்கவேண்டும்..

"பதவி வரும்போது பணிவு வரவேண்டும், துணிவு வரவேண்டும் தோழா என்று எம்ஜிஆர் பாடிய பாட்டை எழுதியது வாலி.. அப்படிப்பட்ட வாலிக்கு நடக்கும் விழாவில், கங்கை அமரன் செய்ததை ஏற்கவே முடியாது.

பொது நாகரீகம், பொது மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொள்பவர்களை, விழாவுக்கு கூப்பிடுவதையே தவிர்க்க வேண்டும்.. விழாக்கள் கூப்பிட்டு முக்கியஸ்தர்களாக நிற்க வைப்பதால்தான், இதுபோல செய்கிறார்.. யாராக இருந்தாலும் இதை கண்டிக்க வேண்டும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+