600 படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதாகரின் மோசமான நிலைமை? டாப் ஸ்டாரின் வயிற்றில் புளியை கரைத்தாரே?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நடிகர் சுதாகரின் உடல்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பும் சீரியஸ் கண்டிஷன் என்றார்கள்.. இப்போதும் உடல்நிலை மோசமாகி உள்ளதாக அங்குள்ள யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஒருவேளை சரியான வாய்ப்புகள் சுதாகருக்கு அன்று தமிழில் கிடைத்திருந்தால், மைக் மோகன் அளவுக்கு உயரத்துக்கு சென்றிருப்பார்" என்று பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "உடல் பலவீனம் அடைய, வயது மூப்பு அல்லது பழக்கவழக்கங்கள்தான் முக்கிய காரணங்களாக இருக்க முடியும்.

Television actor Sudhakar Top Hero

அந்தவகையில் சுதாகரை பொறுத்தவரை, அவருடைய பழக்கவழக்கங்கள், உடல் ரீதியாக அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், நோய் போன்றவை அனைத்துமே சேர்ந்து தற்போது படுத்த படுக்கையாக்கிவிட்டது. 2 வருடங்களுக்கு முன்பே அவரது உடல்நிலை பற்றின செய்திகள் மீடியாக்களில் வெளியாகியிருந்தன.

பிரபலங்கள் டாப் படங்கள்

ஒருதலை ராகம் சங்கர், சுதாகர், காதல்ஓவியம் கண்ணன் போன்றோர்கள், ஒருசில பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துவிட்டு, பிறகு புஸ்ஸுனு காணாமல் போய்விடுவதால் அவர்களை பற்றின தேடல் அதிகமாகிவிடுகிறது.

பிளாக் பஸ்டர் படங்களை தந்துவிட்டு, அதற்கு பிறகு படங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதும், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் போவதும்தான் இதற்கு முக்கிய காரணம்..

சுதாகர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.. ஆனால், 80களில் தமிழ்ப் படங்களில் நடித்து, பெண் ரசிகைகளால் அன்று ஈர்க்கப்பட்டவர் சுதாகர்.

கிழக்கே போகும் ரயில்

78-ல் கிழக்கே போகும் ரயில் வெளியாகி, இந்திய சினிமாவையே உலுக்கிய படம்.. வித்தியாசமான கதையாக அந்த படம் பார்க்கப்பட்டது.. சவரம் செய்யக்கூடிய தொழிலாளியின் மகனாக அதில் சுதாகரன் நடித்திருந்தார்..

அந்த ஊரின் நாட்டாமை மகளான ராதிகாவை சுதாகர் காதலிப்பதை, ஊர்க்காரர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. எனவே வேலை வாய்ப்பு தேடி மும்பைக்கு சென்றுவிடுவார்.. அங்கிருந்து காதலி ராதிகாவுக்கு, ரயிலில் பின்பக்கம் கடிதம் எழுதி அனுப்புவார்.. அந்த படம் வெற்றிக்கு இந்த ஐடியாவும் ஒரு காரணம்.

அதுமட்டுமல்ல, ஊரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை நிறுத்துவதற்காக, அந்த ஊரிலுள்ள கன்னி பெண்கள் ஊரை சுற்றி நிர்வாணமாக விளக்கேந்தி வர வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

பிளாக்பஸ்டர் படம்

அந்தவகையில், நாட்டாமை மகளான ராதிகா ஊரை வலம்வரும்படியாக நேரிடுகிறது. அப்போது ஊருக்குள் வரும் சுதாகர், ராதிகாவை கண்டு அதிர்ச்சியடைந்து, தன்னுடைய வேட்டியை ராதிகாவுக்கு போர்த்தி பத்திரமாக தன்னுடன் அழைத்து சென்றுவிடுவார். இந்த புரட்சிகரமான கிளைமாக்ஸ்தான், அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த கிளைமேக்ஸை பார்த்ததுமே, தமிழ்நாட்டு பெண்களுக்கு சுதாகர் மீது பெரும் மதிப்பு கூடிவிட்டது. கிழக்கே போகும் ரயில் மூலம் தென்னிந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் என்றாலும், மைக் மோகன் போலவே பெண்கள் சுதாகரின் ரசிகைகளானார்கள்.. இந்த படத்துக்கு பிறகு, கதாநாயகனாகவே தமிழில் 20 படங்களுக்கு மேல் சுதாகர் நடித்திருக்கிறார்..

ரசிகைகளால் ஈர்க்கப்பட்ட நடிகராகிவிட்டதால், தமிழகத்திலிருந்த டாப் நடிகர்களுக்கு சுதாகர் மீது ஒருவித பயம் ஏற்பட்டது.. குறிப்பாக பெண் ரசிகைகளை பெற்ற நடிகர்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்தார் சுதாகர்.

ரசிகைகளால் ஈர்ப்பு

ஆனால், ஆக்‌ஷன் ஹீரோவாக சுதாகரன் உருவாகவில்லை.. பிறகு வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், தெலுங்கு படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தார்.. ஆனால், அப்படியான கேரக்டர்களில் சுதாகர் நடிப்பதை தமிழ் ரசிகர்களால் சகித்து கொள்ள முடியவில்லை

என்றாலும், தெலுங்கு ரசிகர்கள் அவரை ஏற்றுக்காண்டனர். அதனால்தான் அவரால் 600 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்துள்ளது.. பிறகு மதுவிரும்பி ஆகிவிட்டதால், உடல்நல பிரச்சனைகளில் விழுந்துவிட்டார். எனினும் 15 வருடங்கள் காமெடி படங்களில் பிஸியாகவே இருந்தார் சுதாகர்.

உடல்நிலை

2 வருடங்களுக்கு முன்பும் சீரியஸ் கண்டிஷன் என்றார்கள்.. இப்போதும் உடல்நிலை மோசமாகி உள்ளதாக அங்குள்ள யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி வருகிறது.

ஒருவேளை சரியான வாய்ப்பு சுதாகருக்கு அன்று தமிழில் கிடைத்திருந்தால், மைக் மோகன் அளவுக்கு உயரத்துக்கு சென்றிருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+