எதிர்நீச்சல்: வந்துவிட்டார் அடுத்த ஆதி குணசேகரன்.. கமிட்டான எழுத்தாளர்.. இன்னும் இரண்டு தினங்கள்..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
அதில் அடுத்த குணசேகரன் ஆக பிரபல எழுத்தாளர் ஒருவர் கமிட் ஆகி இருப்பதாகவும், அவர் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அவர் நடிக்கும் காட்சிகள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிறகு அவர் நடித்து வந்த கேரக்டரில் யார் நடிக்க போகிறார்கள்? இனி சீரியலில் கதை எப்படி பயணிக்க போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது.

அது குறித்த கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருப்பதாலேயே அது பற்றி பல செய்தி சேனல்களிலும், பல அரசியல் பிரமுகர்களும் கூட அது குறித்து பேசி இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்," மக்கள் அடுத்த மாரிமுத்து யார் என்று யோசிப்பதை விட, சமுதாயத்தில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்பதை யோசிக்க வேண்டும்" என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவிற்கு இந்த சீரியல் பற்றியும் இந்த கேரக்டர்களில் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
அதுவும் நடிகர் மாரிமுத்து இறந்த அன்று அது பற்றிய கேள்விகளை பலர் எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் முதலில் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அது பற்றி வேல ராமமூர்த்தி நான் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு இப்போதைக்கு நேரமில்லை. இன்னும் 20 நாட்களுக்குப் பிறகுதான் அது பற்றி முடிவு செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் இளவரசு, நடிகர் பசுபதி மற்றும் நடிகர் அழகம்பெருமாள் என பல நடிகர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் இவராக இருக்குமோ அல்லது அவராக இருக்குமோ என்று பல்வேறு கருத்துகளும் குவிந்து வந்தது. இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்து விடுவார் என்று கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் கதிர் மற்றும் ஞானத்தை வந்து பார்க்க வந்தது போன்று ஒரு நபர் நடப்பதையும் காட்டி இருந்தனர்.
அதே நேரத்தில் குணசேகரன் கேரக்டரை ரொம்ப நாட்கள் இழுத்துக் கொண்டு இருப்பது ரசிகர்களுக்கும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்று அவர் இறந்து போவது போன்று காட்சிகளை வைத்து முடித்து விட வேண்டும். இல்லை என்றால் இவருக்கு பதில் இவர் என்று ஒருவரை காட்டிவிட வேண்டும். பல நாட்களாக ஒரு ஆள் நடப்பது போன்றே காட்டிக் கொண்டிருக்கிறார்களே என்று பலர் அதிருப்தியை தெரிவித்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு புது தகவல் ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அதாவது மீண்டும் இந்த கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி தான் குணசேகரனாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும். அதற்கான சூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நடிகர் வேல ராமமூர்த்தி நடித்த எபிசோடுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications