Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்லி பற்றிய ரகசியங்களை உடைத்த தம்பி.. "கோவில்பட்டி"யில் வாத்தியார் மகன்.. நடிகராக மாறிய காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சார்லியின் சொந்த ஊர் கோவில்பட்டி தான். அங்கு அவருடைய குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் பள்ளியில் தலைமை ஆசரியர் மகனான சார்லி நடிகராக மாறியது எப்படி என்று சார்லியை போலவே இருக்கும் அவருடைய தம்பி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் சார்லி பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். கோபுர வாசல், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, வெற்றி கொடி கட்டு, உன்னை நினைத்து, கண்ணுபட போகுதய்யா, என்று பல ஹிட்டான திரைப்படங்களில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் பேசப்படுகிறது.

television charlie

அதிலும் பிரெண்ட்ஸ் படத்தில் இவருடைய நடிப்பு சிரிப்பே வராதவர்களையும் சிரிக்க வைத்து விடும். காமெடியனாக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் சார்லி இதுவரைக்கும் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்புக்கு இன்னும் ஒரு விருதுகள் கொடுக்க கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.

சார்லி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பல பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் தொடர்ச்சியாக இவர் பேட்டிகளை கேட்கும் நபர்களை தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

television charlie

இந்த நிலையில் அவருடைய சொந்த ஊர் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது "Breaking Vlogs" என்ற youtube சேனலில் சார்லியின் சொந்த தம்பி பேசி இருக்கிறார். அவரை பார்ப்பதற்கு அப்படியே சார்லியை பார்ப்பது போலவே இருக்கிறது. சார்லின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான். சார்லியின் இயற்பெயர் மனோகரன். அவர் சினிமாவிற்கு தான் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார்.

அதுபோல சார்லின் அப்பா கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். சார்லியோடு ஐந்து அக்கா தம்பிகள் பிறந்திருக்கிறார்கள். வீட்டிற்கு மூத்த மகன் சார்லிதானாம். கோவில்பட்டியில் உள்ள நாடார் துவக்கப்பள்ளி, நாடார் நடுநிலைப்பள்ளியில் தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். அதற்குப் பிறகு அங்குள்ள கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதற்குப் பிறகுதான் சினிமாவிற்கு முயற்சி செய்திருக்கிறார்.

television charlie

வீட்டில் தந்தை கண்டிப்பாக இருந்தாலும் இவர் சினிமாவிற்கு ஆசைப்பட்டதற்கு காரணம் இவர் பள்ளி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தானே பல கதைகளை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். படிப்பை விட ஒழுக்கம் முக்கியம் என்று இவருடைய தந்தை சொன்னதாலேயே இவர் சினிமாவில் இத்தனை வருடங்களாக இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் தனித்து நிற்கிறாராம்.

அதுபோல அவருடைய சொந்த ஊரான கோவில்பட்டியில் தான் அவருடைய திருமணமும் நடைபெற்றிருக்கிறது. உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்திருக்கும் சார்லி ஏதாவது விசேஷம் என்றால் சொந்த ஊருக்கு வருவார் இல்லையென்றால் இப்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் என்று அவருடைய தம்பி கூறியிருக்கிறார்.

television charlie

அவருடைய தம்பி கோவில்பட்டியில் உள்ள மெர்கண்டைல் பேங்க்கில் வேலை செய்து கொண்டிருக்கிறாராம். என்னுடைய அண்ணன் குடும்பத்தின் மீது அதிகமான பாசம் வைத்திருப்பவர். யாருக்கு ஏதாவது என்றாலும் உடனே வந்து விடுவார். இப்போது அவர் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

சார்லி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இயக்கி நடித்த நாடகத்தை பாலச்சந்தர் நேரடியாக பார்த்திருக்கிறார். அவர் சார்லியை பாராட்டி அதனுடைய அடுத்த படமான பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்து அதில் நடிக்க வைத்திருக்கிறார். அதுவரைக்கும் மனோகரன் ஆக இருந்த சார்லியை பாலச்சந்தர்தான் சார்லி என்று பெயர் மாற்றி சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+