பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் திடீர் மாற்றம்.. இதை எதிர்பார்க்காத ரசிகர்கள்! இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடியாக கதை களம் மாற்றப்பட்டு இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இப்போது சீரியல் மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல டுவிஸ்ட்கள் நடந்து இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சில மாதங்களுக்கு முன்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அது போல தான் கதையும் நகர்ந்து வந்தது. இந்த நிலையில் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பல அதிரடி டுவிஸ்ட்கள் வருகிறது.
அதாவது இத்தனை நாட்களாக ஜனார்த்தனன் தன்னுடைய இரண்டாவது மருமகன் பிரசாந்த்தை அதிகமாக நம்பிக்கொண்டிருந்தார். அதனாலயே ஜீவாவை அவமானமும் படுத்தி இருந்தார். ஜீவா ஆரம்பத்தில் இருந்து பிரசாத் சொல்லும் பிசினஸில் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்று சொன்னதால்தான் குடும்பத்திற்குள் பிரச்சனையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இப்போது பிரசாந்த் பற்றி ஜனார்த்தனனுக்கு மொத்த உண்மைகளும் தெரியவருகிறது. அதனால் இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் பிரசாந்த் ஜனார்த்தனனின் மேனேஜரை கொலை செய்துவிட்டு ஜனார்த்தனையும் குத்தி விடுகிறார். ஆபத்தான கட்டத்தில் ஜனார்த்தனன் இருக்கிறார். அதே நேரத்தில் தன்மீது தானே காயம் ஏற்படுத்திக் கொண்டு இதற்கு காரணம் ஜீவா மற்றும் கதிர் தான் என்று பிரசாந்த் மொத்த கதையும் மாற்றி இருக்கிறார்.
இதுவரைக்கும் பெரிய அளவில் வன்முறை இல்லாமல் போய்க் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது வெட்டு குத்து வந்து கொலை வரைக்கும் போயிருக்கிறது. அதே நேரத்தில் இனி ஜீவா, கதிர் இருவரும் ஜெயிலில் இருப்பதால் அவர்களை எப்படி மூர்த்தி குடும்பம் வெளியே கொண்டு வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து குமரன் ஹேப்பி அண்ணாச்சி என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். அப்படி பார்க்கையில் அவர் சில தினங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதனால் அது குறித்து தான் இப்படி ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

அதே நேரத்தில் குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டால் கதிர் கேரக்டரில் அடுத்து வேறு ஒரு நடிகர் நடிக்கப் போகிறாரா? அல்லது கதிர் ஜெயிலில் இருப்பது போன்று காட்சிகள் மாறப்போகிறதா என்பது பலருடைய கேள்விகளாகவும் இருக்கிறது. இல்லை என்றால் இனி ஜனார்த்தனன் கண் முழித்து உண்மையை சொன்னால் மொத்த உண்மைகளும் குடும்பத்திற்கு தெரியவரும். அதோடு சீரியல் முடிவுக்கு வந்துவிடுமா? என்றும் பல கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வந்துவிடும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications