விஜே அர்ச்சனா வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. வலிகளோடு அவரே சொன்ன விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலகலப்பான பேச்சாளர் என ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் விஜே அர்ச்சனா. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற பிறகு அதே அர்ச்சனாவை சோசியல் மீடியாவில் விமர்சித்தவர்களும், ட்ரோல் செய்தவர்களும் அதிகம். அந்த அனுபவம் அவரை எந்த அளவுக்கு மனதளவில் பதித்தது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் ஆரம்பிக்கும் போது, பிக்பாஸ் இருந்தது வெளியே வந்ததும் ரொம்ப ரொம்ப டிப்ரஷன் தான் இருந்தேன். பிக்பாஸ் வீட்டிலிருந்து போது ஏற்பட்ட விமர்சனங்களும், வெளியில் வந்த பிறகு தொடர்ந்து வந்த நெகடிவ் கமெண்ட்ஸ்களும் என்னை தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அந்த காலகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு நான் மன அழுத்தத்தில் இருந்தேன். இதுவரைக்கும் நமக்கு எவ்வளவோ சப்போர்ட் பண்ணுனவங்க ஏன் இப்படி நம்மை ட்ரோல் பண்ணுறாங்க என்று கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக நான் ரொம்ப யோசித்துக் கொண்டே இருந்தேன்.

விஜே அர்ச்சனா உருக்கம்

அதே நேரத்தில் என்னுடைய உடல் நிலையிலும் எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சின்ன வயசுல எனக்கு விபத்து எதுவுமே நடக்கவில்லை. ஆனால் என்னோட மண்டையோட்டில் 32 இடங்களில் வெடிப்புகள் ஆகிடுச்சு. அதோட சேர்ந்து அதற்கு கீழே இருக்கும் படலம் கிளியும் போது அதை அறுவை சிகிச்சை தான் பண்ணுவாங்க. நல்ல வேலை எனக்கு அந்த பாதிப்பு வரல.

Vj Archana Zee Tamil Bigg Boss

உடல்நிலை குறைபாடு

ஆனால் எனக்கு குனிஞ்சா மூக்கு வழியாக தண்ணீர் கொட்டி ஒரு பாட்டில் நிறைந்துவிடும் அந்த அளவிற்கு பிரச்சனை இருந்தது. 39 வயது பிறந்து ஐந்து நாளில் இந்த விஷயம் தெரிய வந்தது அந்த சமயத்தில் மூளைக்காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டது. அப்போது மண்டை ஓட்டை திறக்காமல் மூக்கு வழியாக ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடையிலிருந்து திசுக்கள் எடுத்து முகம் வடிவமைக்கப்பட்டது.

இப்ப பார்க்கிறதுக்கு வெளியில அச்சும்மா நல்லா இருக்காங்க என்று எல்லோருக்கும் தெரியலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நரம்பு தொகுதி கட்டானதால் சுவை நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஒரு பக்கம் கண்ணீர் இயக்கம் இல்லை, வாசனை உணர்வும் இல்லை. இப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இதை பற்றி வெளியே சொன்னால் யாரும் நம்பவே மாட்டாங்க. ஒரு கட்டத்தில் நமக்குத்தான் ஏதாவது பிரச்சனையா? நாம்தான் அதிகம் யோசிக்கிறோமா? என்று சந்தேகம் நமக்கே நம்மீது வர ஆரம்பித்துவிடும்.

வெளியே தெரியாத பிரச்சனை

அப்படித்தான் எனக்கும் இருந்தது. அதுவும் உடல் பாதிப்பு, அறுவை சிகிச்சை, அதற்குப் பிறகு வந்த மாற்றங்கள் என்று ஏற்கனவே ஒரு பெரிய போராட்டத்தில் இருந்து நேரத்தில் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களும் சேர்ந்தால் மனதுக்கு அது இன்னும் பெரிய சுமையாகிவிடும். அந்த சுமையை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

Bigg Boss: பிரசாந்த்தை பிக் பாஸ் மேடையில் இருந்து அனுப்ப காரணம் இதுதானா? வாயால் வந்த வினை! சேதுபதியின் ஆப்பு
வெளியே ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் அர்ச்சனா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது அவ்வளவு சத்தமாகவும், முகத்தில் எப்போதும் சிரிப்புடனும், எனர்ஜியுடன் பேசிக் கொண்டிருப்பார். ஆனால் அவருடைய உடலுக்குள் இத்தனை பிரச்சனைகள், மனதில் இவ்வளவு வலி இருக்கிறது என்பது அவர் வெளியே சொன்ன பிறகுதான் பலருக்கும் தெரிந்திருக்கும்.

மாற்றம்

விஜே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அன்பு பற்றி அவர் பேசியது அவருக்கே வினையாக போனது. அன்பு ஜெயிக்கும் என்று இப்போது வரைக்கும் அவரை சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அது ஒரு பக்கம் என்றால் அவருடைய மகள் பாத்ரூம் டூர் வீடியோ வெளியிட்டதும் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அந்த சமயத்தில் தான் அர்ச்சனாவுக்கு அடுத்தடுத்து உடல்நல பிரச்சனைகளும் வந்தது. இப்போது பல பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டு வந்து கொண்டு இருந்தாலும் சில பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் சந்தித்து வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் விமர்சனங்கள் இப்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+