படிப்பை விட்டு நடிக்க வந்த காரணம்..ஆனால் அந்தப் படத்தில் வாங்கிய அடி..மனம் திறந்த நடிகை சீதா
சென்னை: நடிகை சீதா தான் சினிமாவில் எப்படி அறிமுகமானேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை இருந்த நிலையும் இன்று தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

80ஸ் கிட்ஸ்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட இவர் நடித்திருக்கிறாராம். பல நேரங்களில் படங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பல வாய்ப்புகளை கூட இவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திருமண ஃபங்ஷனில் பட்டுப்பாவாடையில் கலந்து கொண்டிருந்தாராம். அதை பார்த்த இயக்குனர் இவருடைய வீட்டிற்க்கே சென்று இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தபோது இவர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். எனக்கு விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசி அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

அப்போது முதல் திரைப்படத்தில் இவருக்கு ஒரு குடத்தை கூட தூக்க தெரியாமல் இயக்குனரிடம் கையில் அடி வாங்கி இருந்தாராம். பிறகு நான் இனி நடிக்க போகவே மாட்டேன் என்று வீட்டில் கூறி இருந்தாராம். காரணம் அவருடைய வீட்டில் இவர் ஒரு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். அமைதியாக இருக்கும் இவரை யாரும் அதட்டி கூட பேச மாட்டார்களாம். அப்படி வளர்ந்த நிலையில் ஒருவர் இவரை அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர் வீட்டில் புலம்பி இருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் பிறகு இவருக்கு அறிவுரை கூறி மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இவர் நடிக்க வருவதற்கு காரணமே சூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு அதிகமாக ஐஸ்கிரீம் கிடைக்கும் என்றும், கைகளில் அதிகமான வளையல் போடலாம் என்றும், ஒவ்வொரு வேலைகளை செய்வதற்க்கும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், தான் ஸ்கூலுக்கு போனால் படிக்க வேண்டும் ஆனால் நடிக்க வந்தால் தமக்கு வேலை செய்ய பலர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட இவர் அப்படியே அதை தொடர ஆரம்பித்துவிட்டேன் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

என்னதான் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தாலும், பலருடைய சீதா வெள்ளி திரையில் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியதும், சின்னத்திரையை பயன்படுத்திக் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். வீட்டிலேயே மாடி தோட்டம் அமைத்து வீட்டில் இருக்கும் நேரங்களில் பசுமையை பாராட்டி வருகிறார். தற்போது இவர் ஆரம்ப காலம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications