Sembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கும், பார்வதிக்கும் ரகசிய கல்யாணம் முடிந்து வருஷத்துக்கு மேல ஆகுது.இதை அம்மா அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லணும் என்று ஆதி எதிர்பார்த்து காத்திருந்தும், கடைசியில் அம்மா கேட்க மறுத்துட்டாங்க.
ஆதி நான் மயக்கமா இருந்தப்போ என்னவோ என்கிட்டே பேசினான்.ஆனால், என்ன பேசினான்னு சரியாய் தெரிஞ்சுக்க முடியலைங்க என்று தினம் தினம் புலம்பிய அகிலாண்டேஸ்வரி வாயை அடைக்க என் பிறந்த நாள் அன்னிக்கு எல்லா உண்மையையும் உங்ககிட்டே சொல்லிடறேன்மான்னு ஆதி சொன்னான்.
எதிர்பார்த்தபடி பிறந்த நாளும் வந்தது. ஆனால், அன்றைக்கே ஆதிக்கும் மித்ராவுக்கும், பார்வதிக்கும் வேறு பையனுக்கும் கல்யாணம் என்று நிச்சயம் செய்துடறாங்க அகிலாண்டேஸ்வரி. இருந்தாலும் பிறந்த நாள் கேக்கை இரவு 12 மணிக்கு வெட்டிய ஆதி அம்மாவிடம் பேச வேண்டும் என்று கேட்கிறான்.

போயி படு ஆதி
அம்மா என் பிறந்த நாள் அன்னிக்கு எல்லா உண்மையையும் சொல்லிடறேன்னு சொன்னேனே.. அதை இப்போ சொல்றேன்மான்னு பேச ஆரம்பிகிறான் ஆதி. இல்லை ஆதி.. நாளைக்கு கல்யாணம்.. சீக்கிரமா போயி தூங்கு. கல்யாணம் முடிஞ்சு எது வேணும்னாலும் பேசிக்கலாம் என்று மகனின் பேச்சுக்கு செவி சாய்க்க மறுத்துடறாங்க அகிலாண்டேஸ்வரி அம்மா. இல்லம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று ஆதி சொல்லியும்..ம்ம்.. வேணாம் என்பது போல அவங்க ஸ்டைலில் கையைத் தூக்கி காண்பிச்சுட்டு மாடிக்கு போயிடறாங்க.

ஆதியை கிளப்ப வேணாமா?
கல்யாண மண்டபத்துக்கு அகிலாண்டேஸ்வரி அம்மா கிளம்பி ரெடியாகி கீழே வர்றாங்க. ஆதி கிளம்பியாச்சான்னு கேட்கறாங்க. இன்னும் இல்லை அகிலான்னு புருஷன் சொல்ல, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இந்நேரம் அவனை கிளப்பி இருக்க வேனாமான்னு கேட்டுட்டு போனை போடுங்கன்னு சொல்றாங்க. ஆதியோ, அப்பா என்னை அம்மா பேச விடலை. இப்போ பேச ரெடியா இருக்காங்கன்னா சொல்லுங்க கீழே வர்றேன்னு சொல்றான்.

நீ போ அகிலா ஆதி வருவான்
நீ போ அகிலா.. ஆதி வருவான்னு புருஷன் சொல்ல, அகிலா கிளம்பி போயிடறாங்க. அகிலாவோடு வனஜா, அகிலாவின் இளைய மகன், மருமகள் எல்லாரும் மண்டபத்துக்கு போறாங்க. மண்டபத்தின் வாயிலில் ஆதி மித்ரா கல்யாணம் என்று வரவேற்பு போட்டு இருக்க,. அதை பார்த்து மகிழ்ந்து போறாங்க அகிலாண்டேஸ்வரி. எல்லாம் நான் செய்த ஏற்பாடுக்கான்னு வனஜா தன்னைப் புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்க. மண்டபத்துக்குள் வர்றாங்க.

மேடையில் ஆதி பார்வதி
மேடையில் ஆதி வெட்ஸ் பார்வதி என்று பெயர் மாறி இருக்க, பார்த்து திகைச்சு போறாங்க அகிலாண்டேஸ்வரி. வனஜா நான்தான் நான்தான்னு சொல்லிகிட்டே வந்தவ, மேடையில் இருந்த பேரை பார்த்து அதிர்ந்து போயி நிக்கறா. ஆதி அடிச்சான் பாருங்க மேடையில் பேரை மாத்தி ஆதி பார்வதின்னு.. அப்போ இன்னிக்கு எபிசோடில் சுவாரஸ்ய விஷயம் இருக்குன்னு சீரியல் ஆர்வலர்கள் ஆர்வமா எதிர்நோக்கி இருக்காங்க. அவங்களுக்கு பிடிச்ச ஜோடி ஆதி பார்வதி ஜோடியாச்சே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications