ஆர்த்தி ரவி கடைசி அறிக்கை! சுற்றி நடக்கும் சூழ்ச்சி.. குடும்ப பிரச்சனைக்கு காரணம் “அந்த நபர்” பகீர் குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதற்கு பிறகு அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதான் என்னுடைய கடைசி அறிக்கை என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த வாரத்தில் ஆர்த்தி ரவி இரண்டு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலாக ரவி மோகன் நான்கு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி இன்று மே 20 தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்த காலத்தில் என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்து விட்டது.
ஒருமுறை கடைசியாக அனைவருக்கும் உண்மையை சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களுக்கு திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடு காரணம் அல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல, வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். உங்கள் "வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வின் இருளை கொண்டு வந்தார் என்பதே உண்மை.
இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே என் வாழ்க்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றசாட்டாக சொல்லவில்லை. போதுமான ஆதாரங்களுடன் தான் நான் கூறுகிறேன். எனக்கு "கட்டுப்படுத்திய மனைவி" என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது, என் கணவரை அன்புடன் பராமரித்து அவருக்கு கேடு தரும் தீய பழக்க வழக்கங்களில் இருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களில் இருந்தும் அவரை பாதுகாத்து கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால் அப்படியே இருக்கட்டும்.
எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதை செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால் அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அத்தனை கொடூரமான பட்டங்களையும் கணவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன். இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக," என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் உடன் அன்புடனே இருந்தோம்."
எங்கள் சமூக ஊடகப் பதிவுகளே அதற்கு சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எங்களுடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும் விவாதமும் தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன். தனது சொத்துக்களை கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறி போகவில்லை. நன்றாக திட்டமிட்டு விலை உயர்ந்த ஆடைகள் அணிகலன்கள் அணிந்து தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் தான் வீட்டை விட்டு சென்றார். அவரை யாரும் தடுக்கவில்லை. அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்தோடு, திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications