எல்லாமே பிளான்.. ஜெயம் ரவி அறிக்கை பொய்.. நடந்தது இதுதான்.. ஆர்த்தி ரவி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தில் இருந்து விலகுகிறேன் என்று கடந்த வருடத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு ரவி மோகன் தான் பல விஷயங்களில் கஷ்டப்பட்டு இருப்பதாக நான்கு பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அது பொய் என்று ஆர்த்தி ரவி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதோடு இதுதான் என்னுடைய கடைசி அறிக்கை என்றும் கூறியிருக்கிறார்.

Jayam Ravi Ravi Mohan Kenisha

வீட்டோடு மாப்பிள்ளை

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்று அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமண நாள் முதல் நாங்கள் என் மாமனார் மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார் பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஒரே ஒரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை.

குற்றசாட்டு

எங்கள் பிள்ளைகளை கருவியாக்கி நான் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல. என்னை அவ்வாறு நினைப்பவர்கள் உண்மையில் ஒரு தாயின் சிறப்பை உணராதவர்களே. கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும்தான் அவர் தன் பிள்ளைகளை சந்தித்து இருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே. எங்கள் பிள்ளைகள் படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

குழந்தைகள் வருத்தம்

அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரை தடுத்துருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்து இருப்பார். எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது தந்தை வழி பாட்டி, தாத்தா வீடு அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும் போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள்.

குழந்தைகளின் விருப்பம்

அதை விட்டு யார் எங்கள் பிள்ளைகளின் மன அமைதியை பறித்தாரோ அவர் வாழும் இடத்தில் அவர்களின் தந்தையை சந்திக்க நிர்பந்தப்படுத்துவது அவர்களை மேலும் தந்தையை விட்டு விலக செய்து விட்டது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர் அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டபூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை

விபத்து

என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்த போது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை. அந்த விபத்தில் சேதம் அடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்திற்கு சென்றேன் ஆனால் என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள்.

அவமானம்

சட்டப்படி எனக்கும் உரிமையுள்ள ஒரு இடத்தில் இருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன் என்பதுதான் உண்மை. அனைத்து வடிவிலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார் மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதை கேட்கும் போது வேதனையில் சிரிப்பு தான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் அது அவரது விருப்பத்தினால் தான் இருக்கவே முடியுமே தவிர கட்டாயத்தினால் அல்ல,என அந்த பதிவில் ஆர்த்தி ரவி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+