Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரப்பட்ட ஆர்த்தி? வில்லனான ஜெயம் ரவி.. தெருவில் நடந்த டேமேஜ்.. ரவி மோகனின் ஒட்டாத உறவு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருமுறை தான், மனம் நம்பிக்கை வைக்கும்.. எனவே, உறவுகளை மீண்டும் போலியாக ஒட்ட வைக்க முடியாது.. மீண்டும் நம்பிக்கை பூக்காது.. மீண்டும் அதே காதல் மலர்வதற்கு எப்போதுமே சாத்தியமில்லை.. இதற்கு மேலும் என்னால சகிக்க முடியல என்று சொல்லி குடும்ப நலநீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டார் ஜெயம் ரவி" என்று எழுத்தாளர் ராஜ கம்பீரன் கருத்து கூறியிருக்கிறார்.

நடிகர் ரவி மோகன் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக, என் பெற்றோருடன் உறவாட கூட அவர்கள் தடை விதித்தனர். என் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்காக மட்டுமே என்னை பயன்படுத்தினர். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். பல முறை என் பெயரில், கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்றெல்லாம் கூறியிருந்தார்.

Television Jayam Ravi Ravi mohan

நீயா நானா

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் பேட்டி தந்துள்ள கவிஞரும், எழுத்தாளருமான ராஜ கம்பீரன், "நீயா நானா என்பது குடும்பத்துக்கு சரிவராது.. யாராவது ஒருவர் அதிகாரம் செலுத்தும்போது, மற்றொருவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தவகையில், ஆர்த்தியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்று சொல்லி, அங்கிருந்து தப்பித்து ஓடிவந்து இன்னொரு பெண்ணிடம் சரணடைகிறார் ஜெயம் ரவி.. இதை அவர் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்..

சகிக்க முடியவில்லை

இதற்கு மேலும் என்னால சகிக்க முடியல என்று சொல்லி குடும்ப நலநீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டார் ஜெயம் ரவி. எவ்வளவுதான் சொன்னாலும் சிலரது இயல்பு என்பது மாறவே மாறாது.. சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் டைவர்ஸ் என்பது அதிகமாக காரணமே இதுதான்.

அதற்காக தங்களது குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது.. போர்க்களத்தில்கூட குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச விதி உள்ளது.. ஆனால், பல குடும்பங்களில் இதை பின்பற்றப்படுவதில்லை..

வில்லனாகி போன ஜெயம் ரவி

தங்களுக்குள்ள கோபம், ஆற்றாமை, வெறுப்பை குழந்தைகளிடம் மூளை சலவை செய்கிறார்கள். குழந்தைகள் இருவருக்குமே சொந்தம் என்று கோர்ட்டிலேயே சென்று ஆர்டர் வாங்கினாலும், சில வீடுகளில் குழந்தைகளை பார்க்க அப்பாவை அனுமதிப்பதில்லை..

விவாகரத்து தராமல் ஆர்த்தி அடம் பிடிக்க காரணம் ஜெயம் ரவியை வில்லனாக்குகிறார்கள்.. அவரது இமேஜை காலி செய்வதுதான் நோக்கமாக உள்ளது.. ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், தகராறே செய்ய மாட்டார்கள்.. பிரச்சனைக்கான அடிப்படை என்ன? 2 மனம் முரண்களுக்கான என்ன? "என்னுடைய அப்பாவை கூட பார்க்க கூடாது, அவருக்கு செலவுக்கு பணம் தரக்கூடாதுன்னு தடுத்தாங்கன்னு" ஜெயம் ரவி சொல்லும் அளவுக்கு கன்ட்ரோல் செய்தது யார்?

இமேஜை டேமேஜ்

ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பினால், ஜெயம் ரவிக்கு பிடிக்காத விஷயத்தை செய்திருக்க மாட்டார்களே? விருப்பமில்லாத விஷயத்தில் அத்துமீறி செய்ய மாட்டார்கள்.. ஆனால், உனக்கு பிடிக்காத அனைத்தையும் செய்வேன், நீ என்னிடம் வந்துதான் ஆக வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இப்படி தெருவுக்கு கொண்டுவந்து இமேஜை காலி செய்வதன் மூலமாக, வெறுப்புதான் மேலும் அதிகமாகும்..

இந்த தம்பதி இருவரிடமும் பணம் உள்ளது, படிப்பு உள்ளது, அந்தஸ்து உள்ளது.. ஆனால், இல்லாமல் உள்ளது, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான். ஒருவருக்கொருவர் வைக்கும் அன்பு குறைந்துவிடுவதால்தான், சந்தேகம் அதிகமாகிறது.

அன்பால் கட்டப்படுவதே வீடு

வீடு என்பது அன்பால் கட்டப்படுவது.. அந்த வீட்டுக்கு திரும்புகிறபோது சந்தோஷம், நிம்மதி கிடைக்காவிட்டால், அந்த வீட்டுக்கு ஏன் போகணும்? என்ற எண்ணம் வந்துவிடும்.. ஜெயில் அனுபவம் போல இருந்தால், மாற்றுப்பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார்..

ஒருமுறை தான், மனம் நம்பிக்கை வைக்கும்.. எனவே, உறவுகளை மீண்டும் போலியாக ஒட்ட வைக்க முடியாது.. மீண்டும் நம்பிக்கை பூக்காது.. மீண்டும் அதே காதல் மலர்வதற்கு எப்போதுமே சாத்தியமில்லை..

அப்படியானால், இங்கே பலபேர் சகித்து கொண்டு, பொறுத்துக்கொண்டு அனுசரித்து குடும்பம் நடத்தவில்லையா? என்று கேட்கலாம்.. அத்தனை பேருமே தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் என்றே அதற்கு அர்த்தம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+