ஜவாப்தாரியான ரவி மோகன்.. கடனை யார் தலையில கட்டுறது? நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்னையே வேற: பிரபலம்
சென்னை: "கோர்ட்டில் கேஸ் இருக்கும்போது, ஜெயம் ரவி மறுமணம் செய்தால் முதல் மனைவி புகார் தரலாம்.. இதற்கான முழு உரிமை ஆர்த்திக்கு உள்ளது.. அப்படி புகார் தந்தால் சிறைக்கும்கூட செல்ல வாய்ப்புள்ளது என்பதை Hindu Marriage Act சொல்கிறது" என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக, என் பெற்றோருடன் உறவாட கூட அவர்கள் தடை விதித்தனர். என் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்காக மட்டுமே என்னை பயன்படுத்தினர். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். பல முறை என் பெயரில், கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்றெல்லாம் கூறியிருந்தார்.

இந்நிலையில், reflect prime என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "பணத்தை அள்ளி அள்ளி போட்டு, ஜெயம் ரவியை வைத்து அவரது மாமியார் படங்களை எடுத்துள்ளார்.. இது தொடர்பான கடன்களுக்கு ஜவாப்தாரி என்று ஜெயம் ரவிதான் கையெழுத்து போட்டுள்ளார்.. அந்தவகையில் ஜெயம் ரவி மிகப்பெரிய கடனாளி ஆகிவிட்டார்.. பிறகுதான் தத்துவமாய் பேச ஆரம்பித்துவிட்டார்..
கெனிஷாவின் நட்பு
இதிலிருந்து எப்படி மீள்வது என்று திணறி கொண்டிருக்கும்போதுதான் கெனிஷாவின் நட்பு அவருக்கு கிடைத்தது.. வெறுமையுடன் இருந்ததால், கெனிஷாவின் வருகை ரவி மோகனுக்கு ஆறுதலை தந்திருக்கலாம். ஆனால் கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது, ரவி மோகன் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று கேட்கிறார்கள்.
வழக்கு நடந்து வரும்போது, முறைப்படி திருமணம் செய்ய முடியாது. ஆனால், லிவிங் டூ கெதராக இருக்கும்போது கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். ஆர்த்தி விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், வழக்கு நீண்டு செல்லும்.
பழி வாங்குகிறாரா?
அதேசமயம், நீதிமன்றமும் இதை உற்று கவனிக்கும்.. உண்மையிலேயே கணவனுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஆர்த்தி விவாகரத்து தர மறுக்கிறாரா? அல்லது பழி வாங்குவதற்காக விவாகரத்து தராமல் பிடிவாதம் பிடிக்கிறாரா? என்பதை கவனிக்கும்..
ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ஆர்த்தி - ஜெயம் ரவி இடையே கொடுக்கல், வாங்கல் கடன் பிரச்சனை.. அந்த கடனை யார் தலையில் கட்டுவது என்பதில் இருவருக்கும் போட்டி வந்துள்ளது. காசு தவிர, இவர்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை கடனுக்கு ஜெயம் ரவி கையெழுத்து போட்டிருந்தால், அதற்கெல்லாம் அவர்தான் பொறுப்பாளி.
புகார் தரலாம்
இது தொடர்பாக சிவில் கேஸ் தனியாக கோர்ட்டில் நடக்கும்.. இப்போதைக்கு திருமண பந்தத்திலிருந்து பிரிவதற்குதான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே தவிர, சொத்து பிரச்சனைகளுக்காக வழக்கு போடவில்லை.. விவாகரத்து பெற்றுவிட்டால், அன்று கடன் வாங்கினாலும், தற்போது விவாகரத்து பெற்றுவிட்டதால், அந்த கடன் தன்னை கட்டுப்படுத்தாது என்று தனியாக வழக்கு தொடுக்கலாம். இதனை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
கோர்ட்டில் கேஸ் இருக்கும்போது, மறுமணம் செய்தால் முதல் மனைவி புகார் தரலாம்.. இதற்கான முழு உரிமை ஆர்த்திக்கு உள்ளது.. அப்படி புகார் தந்தால் சிறைக்கும்கூட செல்ல வாய்ப்புள்ளது என்பதை Hindu Marriage Act சொல்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications