ஆர்த்திக்காக பிளேடால் கையை கிழித்து கொண்ட ரவி மோகன்.. இது ஜெயம் ரவியின் விளம்பர விவாகரத்து: பிரபலம்
சென்னை: "ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே பிரபலமானவர்கள், பண பலம் உள்ளவர்கள்.. ஜெயம் ரவி சாதாரண நபராக இருந்திருந்தால், கோர்ட் வரை போயிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஜெயம் ரவியின் படத்தை ஓட வைப்பதற்கான விளம்பர யுக்தியாகவும் இது இருக்கலாம்" என்று பிரபல அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கருத்து கூறியிருக்கிறார்.
Retro Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, "ஆர்த்தி ரவிமோகன் விவகாரத்துக்குள் நுழைய விரும்பவில்லை.. இது முழுக்க முழுக்க அவர்களது குடும்பத்துக்குள் நடக்கிற விஷயம்.. ஆர்த்தி குடும்பத்தை எனக்கு தெரியும். அந்தரங்கத்தில் நுழைய முடியாது.. வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது..

ஆனால், விளம்பரத்துக்கு செய்வது போல தெரிகிறது.. ஏனென்றால் இன்று சினிமாவே விழுந்துவிட்டது.. நடிகர், நடிகைகளை பற்றின செய்திகளே எங்குமே இருப்பதில்லை.. லைம்லைட்டுக்காக இப்படியெல்லாம் நடக்கும்.. எனவேதான் விவாகரத்துகள், ரெயிடுகள் போன்ற பரபரப்புகள் அதிகமாகின்றன..
கவர்ச்சி உலகம்
3வது நபருடன் ஏன் செல்கிறார்? என்று ஆர்த்தி கேட்க முடியாது.. சினிமா என்பதே கவர்ச்சி உலகம்.. சினிமாவுக்கே தொடர்பில்லாத வசதியான பிள்ளைகளே 10 பெண்களுடன் போகும்போது, பெண்களும், ஆண்களும் கூடியிருக்கக்கூடிய துறையில் உள்ளவர்கள் போக மாட்டார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். இது சினிமா என்றில்லை, எங்களது மருத்துவ துறையிலும் உண்டு..
இது வெளிவிளம்பரத்துக்காக கூட இருக்கலாம். எனினும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். பெற்றோர் பிரிந்திருக்கும்போது, குழந்தைகளின் மனநிலை மாறுபடும். அந்த காலத்தில், வெள்ளைக்காரர்கள் சட்டப்படி Natural Guardian என்று தந்தையை சொல்வார்கள்.. ஆனால் அதேசமயம், குழந்தையை 11 வயது வரை தாயால்தான் வளர்க்க முடியும். எனவே, 11 வயது வரை தாயிடம்தான் குழந்தைகள் இருக்க வேண்டும் , அதற்கு பிறகு அப்பாவிடம் செல்ல வேண்டும்.
சொத்துக்கள்
தாயிடம் இருந்தாலும் சரி, தந்தையிடம் இருந்தாலும், எந்த பெற்றோரை விட்டு விலகியிருக்கிறார்களோ, அவருடன் வருடத்தில் ஒரு மாதம் அந்த குழந்தை தங்கியிருக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த காலத்தில் சட்டமாக இருந்தது. சாதாரண வீடுகளில் விவாகரத்துகள் நடக்காது, அப்போதெல்லாம் பெரிய பெரிய ஜமீன்தார்கள் வீட்டில்தான், சொத்துக்களுக்காக விவாகரத்துகள் அதிகமாக நடந்தன.
இப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே பிரபலமானவர்கள், பண பலம் உள்ளவர்கள்.. ஜெயம் ரவி சாதாரண நபராக இருந்திருந்தால், கோர்ட் வரை போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜெயம் ரவியின் படம் ஓட வைப்பதற்கான விளம்பர யுக்தியாகவும் இது இருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
காதலுக்கு மறுப்பு
இதனிடையே, Puthiya Sinthanai என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "என்னுடைய மகனுக்கு உங்கள் பெண்ணை கொடுங்கள் என்று எடிட்டர் மோகன் , சுஜாதா விஜயகுமாரிடம் கேட்டு சென்றுள்ளார்.. அதற்கு சுஜாதா விஜயகுமார், "வேண்டாம், சினிமா துறை எப்படி என்று எனக்கு தெரியும். அதனால் சினிமா நடிகரை நம்பி பெண்ணை தர மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.
உடனே ஜெயம் ரவி, பிளேடு எடுத்து தன்னுடைய கையை அறுத்து, ரத்தம் ஒழுகியிருக்கிறது.. பிறகு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை பெற்றார். இதற்கு பிறகு ஆர்த்தியும், ரவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.. இப்படி காதலுக்காக தன்னுடைய கையை அறுத்துக் கொண்ட ஜெயம் ரவி பேசுற பேச்சா இதெல்லாம்?
கோவா - பயணம்
தன்னிடமிருந்து எல்லாவற்றையும் ஆர்த்தி குடும்பத்தினர் அபகரித்து கொண்டதாக ஜெயம் ரவி சொல்கிறார்., அப்படியானால், வெளிநாட்டு காரில் கோவாவுக்கு போனது யார்? கெனிஷாவை காரில் அழைத்துச் சென்றது யார்? இதை எந்த மனைவியாவது ஏற்றுக் கொள்வார்களா? கேரவனில் கெனிஷாவுடன் இருந்ததாக சொல்லும்போது, இதெல்லாம் ஒரு மனைவிக்கு கஷ்டமாக இருக்காதா? ஹீலர் என்றால், சிகிச்சை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பி வரவேண்டியதுதானே? "என்று கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications