ரூ.2 இட்லிக்கு தவிக்கும் அபிநய்.. கல்லீரல் நோயின் பிடியில்.. சக்ஸஸ் நடிகர் தனுஷ் உதவுவாரா? பிரபலம்
சென்னை: 43 வயதான நடிகர் அபிநய், கல்லீரல் தொற்று பிரச்சனை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அவர் உயிரை காப்பாற்ற 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், நிதி உதவி செய்யுமாறும் நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில், திரையுலகில் நடக்கும் மாயைகள், யதார்த்தங்கள், வலிகள், குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்.
2002ம் ஆண்டு தனுஷூடன் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் அபிநய் கிங்கர். தனுசின் நண்பராக அதில் நடித்திருந்தார்.. அதன்பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

வரிசையாக படங்கள்
சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் கல்லீரல் தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அபிநய் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் வறுமை நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தனுஷ், அபிநய் இருவருமே ஒன்றாக சினிமாவில் அறிமுகமானவர்கள்.. ஆனால், தனுஷ் இன்று 200 கோடி ரூபாயில் போயஸ் கார்டனில் வீடு கட்டி வாழும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.. மக்களால் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்துள்ளார்.. மிக திறமையான நடிகரும்கூட.
அம்மா உணவகத்தில் சாப்பாடு
ஆனால், அபிநய் 2 ரூபாய்கூட இல்லாமல், அம்மா உணவகத்தில் சாப்பிடுவதாக, அவரே பல காணொலிகளில் சொல்லி உள்ளார்.. இதற்கு காரணம் உறுதியாக சொல்ல முடியாது. சினிமா ஒரு மாயை..
தனுஷை பொறுத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் முக்கியமானவை.. "இவரெல்லாம் ஒரு ஹீரோவா?" என்று பலரால் அன்று கிண்டல் செய்யப்பட்டவர்தான் ரஜினிகாந்த்.. என்ன நடந்தாலும் சரி, உன்னுடைய ஸ்டைலை மட்டும் மாற்றிக் கொள்ளாதே என்று பாலச்சந்தர் சார் தந்த அட்வைஸை, 50 வருடமாக கடைப்பிடித்து வருகிறார்.
தனித்திறமை, கதைத்தேர்வு முக்கியம்
அந்தவகையில், ஒவ்வொருவரும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுக்காக அபிநய திறமையான நடிகர் இல்லை என்று சொல்லிவிட முடியாது.. இவர் தேர்ந்தெடுத்த படங்கள்தான் காரணம்.. ஜங்ஷன் என்று ஒருபடத்தில் நடித்தர், பிறகு பெயர் தெரியாத பல படங்களில் நடித்தார்.. அதாவது கிடைத்த வாய்ப்புகளில் நடித்து கொண்டே போனாரே தவித, சரியான கதைகளை தேர்வு செய்யவில்லை.
வாய்ப்புகள் பல தேடி வந்தாலும், எந்த பட நல்ல படம்? எந்த இயக்குனர் படத்தை எடுக்கிறார்? என்ன கதை? இதையெல்லாம் தேர்வு செய்யணும். அப்படி தேர்வு செய்யாமல், கிடைககும் படத்தில் நடித்து கொண்டே போனால் தோல்வி நிச்சயம்.
மனோஜ், விக்ரம் பிரபு, சாந்தனு
சினிமா பின்புலம் உள்ளதாலேயே தனுஷ் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது. அப்படி பார்த்தால், பாரதிராஜாவின் மகன் மனோஜ் சினிமாவில் வெற்றி பெறமுடியவில்லையே? பாரதிராஜாவுக்கு இல்லாத ஆளுமையா? பாக்யராஜ் காணாத உயரமா? அவரது மகனை உயரத்துக்கு கொண்டு வர முடிந்ததா? பிரபு வாரிசு, ராம்குமார் வாரிசு யாருமே சிவாஜி குடும்பத்திலிருந்து வரமுடியவில்லையே? எனவே சினிமா பின்புலத்துக்கும், நடிகர்களின் உயரத்துக்கும் சம்பந்தமில்லை.
அருண்விஜய் 35 வருடமாக போராடி கொண்டிருந்தார். இப்போதுதான், மேலே வருகிறார். இன்னும் 7, 8 கோடி சம்பளத்தை தாண்ட முடியவில்லை.. ஆனால், 12 வருஷம் முன்னாடி வந்த சிவகார்த்திகேயன் 75 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்துள்ளார்.. இதற்கு காரணம், சிவகார்த்திகேயனை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
சிவகார்த்திகேயன் உயரம்
இதையெல்லாம் "அதிர்ஷ்டம்" என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது.. சிவகார்த்திகேயன் தேர்வு செய்யும் படங்களும் முக்கியமானவை.. மக்களிடம் தன்னுடைய படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கலாம் என்ற பிளானிங் வைத்திருக்கிறார்.
சினிமா போதை, சினிமா மயக்கத்தில் யார் விழுந்தாலும் எழ முடியாது.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மாதிரியான நிதானம் அனைவருக்கும் வேண்டும். எங்கியுமே தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக அவர் நினைக்கவில்லை..
அபிநயுடன் தனுஷ் ஒன்றாக சேர்ந்து நடித்தார். இன்று அபிநய் நிலைமை தனுஷூக்கும் தெரிந்திருக்கும்.. உதவுவாரா? அவருக்கு உதவ வேண்டும் என்று கட்டாயம் தனுஷூக்கு இல்லை.. ஆனால், மனிதாபிமானம் என்பது சினிமாவில் மிகவும் குறைவு, இது உண்மையும்கூட" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications