பட்டையை போட்டுக்கிட்டு ஊரை ஏமாத்துறாங்க...உளறிய அபிஷேக்...வெளுத்து வாங்கும் தாமரையின் ரசிகர்கள்
சென்னை: சில நேரங்களில் சிலர் பேசுவது பலருக்கு வேதனையாக அமைந்துவிடும் அந்த மாதிரி தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக சொல்கிறேன் என்று என்ன வேணாலும் சொல்லலாமா என்று ரசிகர்கள் ஒரு புறம் பொங்கி வருகின்றனர்.
கண்டெண்ட் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், கேமரா முன்னாடி வரவண்டும் என்பதற்காகவும் போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் ரசிகர்களின் மனதை பாதித்திருக்கிறது.

பஞ்சமில்லாத சண்டை சச்சரவு
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது என்பது முதல் சீசனில் உள்ளே இருந்தே ரசிகர்கள் பலரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனும் ஆரம்பிக்கும்போது அழகு பூந்தோட்டம் ஆக இருக்கும் போட்டியாளர்களின் மனது, நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகிறது. அதில் பலர் வந்த வழி தெரியாமல் வெளியே சென்று விடுகின்றனர். ரசிகர்களின் மனதை கவர்ந்தால் மட்டுமே வெற்றி என்று ஒவ்வொரு சீசனிலும் நிரூபித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீஸனில் நான்காவது நாளில் அடியெடுத்து வைத்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்தே யார் சண்டையை ஆரம்பிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சண்டை ப்ரோமோவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர எபிசோடில் இன்னும் காணவில்லை என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில பிரச்சினைகளை கிளப்பி கொண்டிருந்தால்தான் ரசிகர்கள் நம்மைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை தெரிந்த போட்டியாளர்கள் சிலர் தங்களுடைய வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதில் ஒருவராக அபிஷேக்கும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Recommended Video

இது என்ன ரிவ்யூ
ஒரு தொகுப்பாளராகவும் யூடியூப்பாளர் ஆகவும் நடிகர் நடிகர்களை பேட்டி எடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் நல்ல கமெண்டுகளை பெற்றதை விடவும் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களால் பிரபலமாகிவிட்டார். அதுபோல தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்கள் பலருக்கு கடுப்பாக இருந்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில் கூட இவர் இந்த வீட்டுக்குள்ளும் ரிவ்யூ நடத்துகிறேன் என்று செய்த செயல் பலருடைய மனதையும் பாதித்திருக்கிறது.

தாமரை செல்வியை கலாய்ப்பு
இவர் ரிவ்யூ எடுக்கிறேன் என்று தஞ்சாவூர் பெண்ணான டாக்டர் மற்றும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த ராப் பாடகி ஐக்கியை பற்றி ரிவ்யூ தொடங்கியிருக்கிறார். அப்போது அவர் ஐக்கி ராப் பாடகியாக தன்னை மாற்றி முடி உட்பட கலரிங் செய்ததை பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பொம்மை போல இருப்பதாகவும் அதற்குள் ஒரு உயிர் உள்ளது என்று அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதற்கு அடுத்ததாக சிபியை ரஜினி ரேஞ்சுக்கு புகழ்ந்திருக்கிறார். அதோடு விட்டு விடாமல் ரஜினியிடம் நெருக்கமாவதற்காக கர்நாடக பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இப்படி ஜாலியாக பேசிக் கொண்டிருந்த இவர் அடுத்த நொடியே தாமரைச் செல்வியின் உணர்வை புண்படுத்தியிருக்கிறார்.

கோபமான தாமரை
அனைவரைப் பற்றியும் ஆகா ஓகோ என்று பேசிக் கொண்டிருந்தவர் இவரை பார்த்ததும் இவர் பட்டையை போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார் என்று சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டதும் தாமரைச்செல்வி என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம் இப்படி சொன்னா எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிடும். இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று தனது கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். உடனே இதனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று அவருடைய காலில் விழுந்து கதையை மாற்றிவிட்டார். இது மத நம்பிக்கையுள்ளோரை பாதிக்கும் நிகழ்வாகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காட்டமான கமெண்ட்கள்
தொலைக்காட்சியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை அனுமதிக்கக்கடாது என்றும் இதற்கு முன்பு சரவணன் கல்லூரி காலத்தில் பஸ்ஸில் பெண்ணை இடித்தேன் என்று கூறியதற்கு அவரை எலிமினேட் செய்தார்கள். இதுபோன்ற மத உணர்வுகளை கேலி செய்வதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாமரைச்செல்வி அப்பாவி என்பதால் அவர் எதிர்ப்பை ராஜூ உள்ளிட்டோர் கிண்டல் செய்து மாற்றிவிட்டனர். அண்ணாச்சியும் சமாதானம் செய்ததால் அந்தப் பிரச்சனை அப்போதைக்கு முடிந்து இருக்கிறது. ஆனால், தாமரைச்செல்விக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் அபிஷேக் மீது காட்டமான கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications